31 October 2008

தேவைப்பட்டால்


இரும்பாலும்
கற்களாலும்
ஆனாலும்
கூட
நேர்க்கோட்டில்
செல்லும்
தண்டவாளமும்

வளைந்து
கொள்கிறது
தேவைப்பட்ட
இடங்களில்

18 comments:

அமுதா said...

super...

தமிழ் அமுதன் said...

அருமை!!

ஆயில்யன் said...

நல்லா இருக்கு எப்படி இப்பிடி?

கலக்குங்க!

கலக்குங்க!

குடுகுடுப்பை said...

நல்லா இருக்கு, உங்க வீடல ஒருத்தரு வலைஞ்சே v shape ல ஆயிட்டாராமே.

தாரணி பிரியா said...

நல்லா இருக்குங்க

அமிர்தவர்ஷினி அம்மா said...

நன்றி அமுதா

நன்றி ஜீவன்

அதெல்லாம் தானா வருது ஆயில்ஸ் அண்ணா.

அவர் வளையாம போனதினால் தான் நான் இந்த தண்டவாளத்தை வளைச்சென்.

நன்றி தாரணிபிரியா, முதல் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும்.

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை...

கெட்டுப்போனவர்கள்
விட்டுக்கொடுப்பதில்லை....

சரிதானே?

நிஜமா நல்லவன் said...

அட...ரொம்ப நல்லா இருக்குங்க...!

Jeevan said...

இது வாழ்க்கைக்கு ஒரு உதாரணம். Simple and Nice :) Thanks for dropping by அமிர்தவர்ஷினி அம்மா!

சிம்பா said...

என்னதான் வளைஞ்சு நெளிஞ்சு போனாலும் இரண்டு இரும்புகளும் என்ன காலத்திலும் ஒன்னாகாது...

தத்துவம் no 1149/113A

அமிர்தவர்ஷினி அம்மா said...

நன்றி சுடர்மணி.
நீங்க சொல்வதும் சரிதான். எல்லாத்துக்கும் விட்டுக்கொடுத்தா, நம்ம சுயத்துக்கான அடையாளமே இருக்காது.

நிஜமா நல்லவன்.
சரிங்க. நன்றிங்க உங்க வருகைக்கு.

ஆமாம் கொஞ்சம் நல்லவனும், நீங்களும் அண்ணன் தம்பியா, சொல்லி வெச்சிகிட்டு முன்ன பின்ன கமெண்ட் போட்டிருக்கீங்க.

நன்றி ஜீவா உங்களின் வருகைக்கு, வாழ்த்துக்கும்.

நன்றி சிம்பா வருகைக்கு.
தத்துவம் no 1149/113A
மீதி தத்துவத்தை எங்கே போஸ்ட் செய்திருக்கீங்க. லின்க் கொடுங்க.

Unknown said...

அருமையான கவிதை...எல்லா பதிவையும் ஒரே மூச்சில் வாசித்துவிட்டேன்.நல்லா எழுதறீங்க ..தொடர்ந்து எழுதுங்கள்...வாழ்த்துக்கள்..என் வலைத்தளத்திற்கு வருகை தந்ததற்கும் கருத்து சொல்லியதற்கும் நன்றி என்று மட்டும் சொல்லமாட்டேன்..அதற்கு மேலும்...

நிலாரசிகன் said...

கவிதை நன்று.வாழ்த்துகள்.

Unknown said...

படமே கவிதை. கவிதை நல்ல முயற்சி. பாராட்டுக்கள் . இதே மாதிரி தொடருங்கள் . இந்த கவிதையை கொஞ்சம் பைன் டியூன் செய்தால் இன்னும் கவித்துவம் மிளிரும். இது என்னுடைய ஆக்க பூர்வமான யோசனை. எப்படி கவித்துவம் மிளிரும்?

வளைந்து
கொண்டுதான்
செல்கிறது
இரும்பாலும்
கற்களாலும்
ஆனாலும் கூட


நெறைய சொற்கள் எக்ஸ்ட்ரா பிட்டிங்க்ஸ் . விஷுவலாக பார்ப்பதால்
தேவையில்லை.


எனக்கு தோன்றிய கவிதை

எங்கோ
வெகு தூரத்தில்
குப்.. குப். குப். குப். குப்...........

Unknown said...

இன்னும் சில கவிதைகள்


பொன்னி குடும்பத்தினர்
மூட்டை முடிச்சுடன்
நடக்கிறார்கள்
வளைவில் நிற்காமல்
போகும் ரயில்


கூ..கூ..கூ..குப்...குப்...குப்...
சிறிது நேரத்தில்
ரயில் வரும்
தனம் ஈஸ்வரி காமாட்சி
மூன்று பெட்டிகளுடன்

ராமலக்ஷ்மி said...

படித்தது எனக்குத் தோன்றியதை அமுதா சொல்லி விட்டார்,அதனால் என்ன நானும் சொல்லிக்கிறேன் SUPER!

cheena (சீனா) said...

ஆகா ஆகா - வாழ்க்கை என்றாலே வளைய வேண்டும் - யாராக இருந்தாலும் .

நல்ல கருத்து - நல்ல சிந்தனை - கவிதை அருமை

saravana said...

அருமையான வார்த்தைகள்...
http://aadaillathavarigal.blogspot.com/