டெத்தால் இல்லனா சாப்பாடு ல்ல,
சாப்பாடு இல்லனா டெத்தால் ல்ல
அமித்துவின் லேட்டஸ்ட் விளம்பர ரைமிங்க் சாங்க்.
..........
அமித்து தன் கழுத்தில் கை வைத்துக்கொண்டு, ம்மா பாப்பாக்கு ஜுரம் அடிக்குது பார்ரேன்.
இல்லமா.
ல்ல, பாப்பாக்கு ஜூரம் அடிக்குது.
நீ சும்மா சும்மா இதையே சொன்னனா, கண்டிப்பா ஜூரம் வந்துடும். அப்புறம் அம்மா மருந்து ஊத்திருவேன்.
இல்ல ஜூரம் அக்கிது.
சரி மருந்து எடுத்துவரேன் என்று என்னை மறந்து நான் ரிப்பீட்டிக்கொண்டிருக்க, மேடமும் என்னை நோக்கி ஒரு வரியை கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
முதலில் புரியாமல் பின்பு அவளிடமே க்ளாரிஃபை செய்ததில் தெரிய வந்த வாக்கியம்
ஏன் இபி அதம்(அடம்) புக்கிற ?????
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
.............
பூனையை, காக்காவை பார்க்கா நேர்ந்தால், எச்சோ, ஆங்க அம்மா எங்க?.
இங்கதாம்மா எங்கியாவது இருக்கும்.
டிஸ்கவரில் நரிகளைப் பற்றி காண்பித்துக்கொண்டிருந்தார்கள்.மூன்று குட்டி நரிகள் உலவிக்கொண்டிருந்தன. தூரத்தில் அம்மா நரி ஓடிக்கொண்டிருந்தது.
ம்மா, ஆங்க அம்மா எங்க?
அதோ போகுது பாரு, பெரிசா இருக்கே அதான் அவுங்க அம்மா. அம்மாவை காண்பித்த மகிழ்ச்சியில் நான்.
ஆங்க அம்மா ஆபிச்சுக்கு போவுதா?
:(
...............
அவளின் சின்ன சைக்கிளை ஓட்டிக்கொண்டிருப்பாள், நடுவில் இறங்கி குனிந்து எதையோ செய்வாள்.
என்னமா செய்ற ஓட்டறத விட்டுட்டு?
வண்டி இப்பேர் ஆயிச்சு,
ஓ அப்டியா
சிக் சிக்.. வண்டி ச்சரியாய்ச்சு. ட்டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்.
..........
மழை நாட்களின் போது, ஆயா பாத்தூம் வர்து.
மழை பெய்தேம்மா,சரி வா என்று குடையைப் பிடித்துக்கொண்டு டாய்லெட் அழைத்துப்போயிருக்கிறார்கள்
ரொம்ப நேரமா அமித்து ஒன்றும் செய்யாமல் இருக்க, என்னமா, பாத்ரூம் போகலியா?
இல்ல ஆய்யா, ச்ச்சும்ம்மாதான் ச்சொன்னேன்.
.......
ஏதோ ஒன்றிற்காக அவளை கிறுக்கி என்று சொன்னேன். பதிலுக்கு அவளும் கிரக்கீ என்றாள்.
இப்போது எனக்கு கிறுக்கியை விட கிரக்கீ என்பது மிகவும் அழகான சொல்லாகப்படுகிறது!!!
..........
ஒருநாள் காலை ஆபிசுக்கு கிளம்பிக்கொண்டிருக்கும் போது, அமித்து சாக்லேட்டைப் பிரித்து கையில் வைத்துக் கொஞ்சம் கொஞ்சமா சாப்பிட்டுக்கொண்டிருந்தாள்.
சாக்லேட் சாப்பிட்டா இருமல் ஜாஸ்தியாகும், தயவு செய்து கீழ போடு
நாணிக் கோணி சிரித்துக்கொண்டே மறுபடியும் சாக்லேட் வாயிடம் போனது.
வர்ஷா, நீ இப்ப சாக்லேட் சாப்பிட்ட, நான் ட்ரெயினுக்கு உன்னை கூட்டிட்டு போ மாட்டேன். யார் சொன்னாலும், நீ அழுதா கூட கூட்டிட்டு போ மாட்டேன்.
ஒரு நொடிக்கூட தாமதமில்லை, ஆக்கிலேட் ஆய், ஆந்தி வர்ரும், கீழ போட்டுர்ரேன் என்று ஜன்னலை திறந்து வெளியே வீசிவிட்டாள்.
அப்போது சிரித்தாலும்,வெரிகுட் சொன்னாலும்,அன்றையநாள் முழுவதும் குற்ற உணர்வு குறுகுறுத்துக்கொண்டே இருந்தது என்னுள்.
.........

24 comments:
/*ஏன் இபி அதம் புக்கிற?*/
:-))
//ஏன் இபி அதம்(அடம்) புக்கிற ?????//
//ஆங்க அம்மா ஆபிச்சுக்கு போவுதா?//
//மழை நாட்களின் போது, ஆயா பாத்தூம் வர்து.
மழை பெய்தேம்மா,சரி வா என்று குடையைப் பிடித்துக்கொண்டு டாய்லெட் அழைத்துப்போயிருக்கிறார்கள்
ரொம்ப நேரமா அமித்து ஒன்றும் செய்யாமல் இருக்க, என்னமா, பாத்ரூம் போகலியா?
இல்ல ஆய்யா, ச்ச்சும்ம்மாதான் ச்சொன்னேன்.//
ஹா...ஹா..ஹா
//இப்போது எனக்கு கிறுக்கியை விட கிரக்கீ என்பது மிகவும் அழகான சொல்லாகப்படுகிறது!!!//
கிளாசிக்!
தானை தலைவி அமித்து...வாழ்க!!!
அமித்து அப்டேட்ஸ் - கொள்ளை அழகு.
:-))) ரசித்தேன்!
///ஆங்க அம்மா ஆபிச்சுக்கு போவுதா?//
;;))
கற்றுக்கொண்டே இருக்கிறேன் என் பெண்ணிடம் இருந்தும் உங்கள் பெண்ணிடம் இருந்தும். பகிர்தலுக்கு நன்றி.
:))
-வித்யா
ஏன் இபி அதம்(அடம்) புக்கிற ?????
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்//
:)))))) so cute
//ஏன் இபி அதம்(அடம்) புக்கிற//
//ஆங்க அம்மா ஆபிச்சுக்கு போவுதா?//
//இல்ல ஆய்யா, ச்ச்சும்ம்மாதான் ச்சொன்னேன்.
//
மிகவும் பிடித்திருந்தன..
இப்பிதி பதித்து பதித்து ஒரு புது தமிழ் எனேக்கு பயக்கமாவபோது! :))
ஏன் அதம் புக்கிற - :)
ஆபிஸுக்கு போகுதா :(
ரசிக்கும்படியான அழகான பதிவு பாஸ்.
பாஸ் முடிஞ்சா போட்டோ போடுங்க பாஸ்.
பப்புக்கும்,அமித்துக்கும் சாக்லேட் கொடுக்காமல் போனதற்காக அமீரகத்தில் மாபெரும் பேரணி
பப்பு & அமித்து பேரவை
துபாய் கிளை
:-))
இப்போது எனக்கு கிறுக்கியை விட கிரக்கீ என்பது மிகவும் அழகான சொல்லாகப்படுகிறது!!!
எனக்குப் புல்லாங்குழல் கேட்கிறது. அழகு. அமித்தம்மா
அழகு அப்டேட்ஸ்!
அமித்து அப்டேட்ஸ் - ரொம்ப நல்லாயிருக்கு அமித்தம்மா.
:-) அத்தனையும் முத்துக்கள்!
//நாணிக் கோணி சிரித்துக்கொண்டே மறுபடியும் சாக்லேட் வாயிடம் போனது.
//
:-))) அமித்துவை இப்படி மனக்கண்ணில் பார்த்து ரசித்துச் சிரித்தேன்!
அது எப்படித் தான் ஆகாத வேலை செய்யும் போது மட்டும் கண்களில் குறும்பும், மயக்கும் ஒரு சிரிப்பும் வருகிறதோ இந்தக் குட்டிகளுக்கு!
////ஆங்க அம்மா ஆபிச்சுக்கு போவுதா?////
பஞ்ச் டயலாக்..!!!!
ஹா ஹா..!!! இதையெல்லாம் லைவ்வா கேக்கணும்ன்ற ஆசை நிறைய இருக்கு.!!
//ஏன் இபி அதம்(அடம்) புக்கிற ?????//
ஹா ஹா ஹா...அழகு:)
//ஏன் இபி அதம்(அடம்) புக்கிற ?????//
அதானே!! காய்ச்சல் அடிக்குதுன்னு சொன்னா நம்பணும்.
//பப்புக்கும்,அமித்துக்கும் சாக்லேட் கொடுக்காமல் போனதற்காக அமீரகத்தில் மாபெரும் பேரணி
பப்பு & அமித்து பேரவை
துபாய் கிளை//
பாருங்க , உங்களுக்கு எதிர்ப்பா ஒரு அணி திரளுது
//ஏன் இபி அதம்(அடம்) புக்கிற ?????//
அடம் புடிக்காதீங்க அமித்து அம்மா:))!
அமித்து பிறந்தநாள் நெருங்கிட்டே வருது போலிருக்கே !!!!!
ஏன் இபி அதம்(அடம்) புக்கிற ????? //
ஆங்க அம்மா ஆபிச்சுக்கு போவுதா? //
:))))
மனதிற்கு மகிழ்ச்சியாய் இந்நாளை ஆரம்பிக்க வைத்த அமித்துவிற்கு நன்றிகள் பல.
வர்ஷா காமெடியில கலக்குறா போங்க. காமெடி ஸ்கிரிப்டுக்கு டயலாக் எழுதும் பொறுப்ப அவளிடம் குடுங்க.
sweeeeeeeeeeeeet...........
Post a Comment