06 November 2009

நீளாத கை

அடித்துப்பிடித்து
ஆபிஸுக்குப்போய் வந்து
அக்கடான்னு சாஞ்சி,
அரக்கப் பறக்க தின்னாம
அள்ளி கிள்ளி ஆசையா
ஒரு வாய்
உள்ள போக

அடுத்த வாய்க்கு
அடுத்த வாய்
அபுக்குன்னு பிடுங்குவ,
உள்ள போகப்போன
ஒரு கை சோத்தை.

மூஞ்சக்காட்ட முகத்த தூக்குனா
சிரிச்சுக்கிட்டே சோத்தைப் பிடுங்கி
இப்புடி ஒரு சுத்து
அப்புடி ஒரு சுத்து
துப்புடி ஒரு துப்பு தூன்னு
பட்ட திருஷ்டி பறந்தோடி
போகட்டும்னு
வாய்க்கிட்ட கை நீட்டுவ.

இப்பலாம் சோத்தை
தின்னும்போது
நீ பிடுங்க எதிர்பார்த்தே
காத்திருக்கேன்.

உன் கைதான்
அங்கிருந்து
இங்க வரைக்கும்
நீளல ம்மா.

19 comments:

அன்புடன் நான் said...

இப்பலாம் சோத்தை
தின்னும்போது
நீ பிடுங்க எதிர்பார்த்தே
காத்திருக்கேன்.

உன் கைதான்
அங்கிருந்து
இங்க வரைக்கும்
நீளல ம்மா. //

உணர்வு மிகு கவிதை... பாராட்டுக்கள்.

அன்புடன் அருணா said...

எனக்கும் அதே எதிர்பார்ப்புதான்!

பா.ராஜாராம் said...

கவிதையுமா?

அதுவும் இவ்வளவு ஸ்ட்ராங்கா!

ரொம்ப பிடிச்சுருக்கு அமித்தம்மா!

அ.மு.செய்யது said...

//ம்மா. //



மூணு வார்த்த போதுங்க..!!!

( ஹைய் இன்னிக்கு கலக்கிட்டீங்க...சூப்பர் )

ஈரோடு கதிர் said...

அமித்து அம்மா..

அருமை அம்மா...

செல்ல நாய்க்குட்டி மனசு said...

பெண்ணை பிரிந்த தாயின் சோகம் கடைசி வரிகளில் super

தாரணி பிரியா said...

கொஞ்சம் வெயிட் செய்யுங்க. அமித்து இதையும் உங்களுக்கு செய்யுவா :)

ப்ரியமுடன் வசந்த் said...

//உன் கைதான்
அங்கிருந்து
இங்க வரைக்கும்
நீளல ம்மா.//

ஏக்கமா? பாசமா?
நல்லாயிருக்கு...

Admin said...

நல்ல வரிகள்

நட்புடன் ஜமால் said...

அந்த கடிகாரம் பார்த்து குழந்தை ஞாபகம் வரும் கவிதை ஏனோ நினைவில் வருது ...

Vidhoosh said...

:( என்னாங்க நீங்க.. இப்படியா கிண்டுவீங்க பழைய நினைப்புக்களை..
:((
வித்யா

S.A. நவாஸுதீன் said...

எனக்குள்ளும் பத்திரப்படுத்தி வைத்திருக்கும் நினைவுகளில் ஒன்று

சந்தனமுல்லை said...

நானும் அருமைன்னு சொல்லிக்கறேன்! :-))

பா.ராஜாராம் said...

sorry அமித்தம்மா...

முதல் பின்னூட்டத்தில் "கவிதையுமா?"என கேட்டுவிட்டேன்.நிறைய,நல்ல கவிதைகள் எழுதி இருக்கீங்க.வயசாகுது பக்குவம் வரலை.ஒரு flow-வில் வந்துருச்சு.மன்னியுங்கள்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

பா.ரா. சார்

உங்களை மன்னிக்கவும் வயதோ, அனுபவமோ எனக்கில்லை. நீங்கள் பின்னூட்டமாய் ஒரு ஸ்மைலியை இட்டால் கூட எனக்கு சம்மதமே.

உங்கள் அன்புக்கு நன்றி.

அமிர்தவர்ஷினி அம்மா said...

அனைவரின் பின்னூட்டத்துக்கும் நன்றி

பா.ராஜாராம் said...

நன்றி அமித்தம்மா.

அமுதா said...

/*உன் கைதான்
அங்கிருந்து
இங்க வரைக்கும்
நீளல ம்மா*/
அருமை...

Sanjai Gandhi said...

நெகிழ்ச்சியான கவிதை..

//அபுக்குன்னு பிடுங்குவ,//
சின்ன வயசுல அடிக்கடி உபயோகிக்கிற வார்த்தை. :)