05 November 2009

விருப்பும்,வெறுப்பும்

தொட‌ர்ப‌திவுக்கு அழைத்த‌ அ.மு.செய்யது, சின்ன அம்மிணி மற்றும் ஜீவன் அவ‌ர்க‌ளுக்கு ந‌ன்றி.

************************

அரசியல் தலைவர்

பிடித்தவர்: புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்
பிடிக்காத‌வ‌ர்: கலைஞர்

நடிகர்
பிடித்தவர்: தனுஷ், சூர்யா
பிடிக்காத‌வ‌ர்: சிம்பு, எஸ்.ஜே.சூர்யா

சிரிப்பு நடிகர்:
பிடித்தவர்: கல்யாணப்பரிசு தங்கவேல், நாகேஷ்
பிடிக்காதவர்: சின்னி ஜெயந்த்,தாமு

இயக்குநர்
பிடித்தவர்: பாரதிராஜா, பாசில், பாலா
பிடிக்காதவர்: இராம.நாராயணன், கஸ்தூரி ராஜா

ந‌டிகை
பிடித்தவர்: பானுமதி ராமகிருஷ்ணா, ஷோபா, சிம்ரன்
(இதில் நடிகை பானுமதி அவர்களின் பன்முகத்திறமையும், துணிச்சலும் மிகப்பிடித்தமானது, அவரைப் பற்றி பத்திரிக்கையில் படித்தறிந்த செய்தி ஒன்று: எம்.ஜி.ஆருடன் நடித்த படத்தில், எம்.ஜி.ஆர் அவர்கள் வாள் சண்டையிட்டு பானுமதியைக் காப்பாற்றுவது போன்றான காட்சி. இந்த காட்சி, கிட்டத்தட்ட
ஏழெட்டு டேக்குகள் வாங்கிவிட, பொறுமையிழந்த பானுமதி, மிஸ்டர் எம்.ஜி.ஆர், அந்த வாளை எங்கிட்ட கொடுங்க, நானே சண்டைப் போட்டு என்னைக் காப்பாத்திக்கிறேன் என்றாராம்..)

பிடிக்காத‌வ‌ர்: சரோஜா தேவி (கோப்..பா..ல் அய்யய்யோ ஆள விடுங்க கன்னடத்துப் பைங்கிளி),
நயன்தாரா (ஐயா படத்துல அழகா இருந்து இப்போ ஆயா மாதிரி ஆகிட்டாங்க)

இசையமைப்பாளர்
பிடித்தவர்: என்றென்றும் இளையராஜா
பிடிக்காதவர்: இமான் (ஒரு படத்துல இசையமைச்சு,நமீதா அக்காவுக்கு அவரே பாட வேற செஞ்சிருப்பாரு, அவர் என்ன பாடுறார்னு அவருக்கே கேட்டிருக்குமான்னு தெரியல)

நடன இயக்குநர்
பிடித்தவர்: பிரபுதேவா
பிடிக்காதவர்:கலா மாஸ்டர் (மானாட மயிலாடல வந்து ஓவரா நடிக்காதீங்கன்னு சொன்னா கேக்கறீங்களா, பாருங்க இப்ப கெமிஸ்ட்ரி ஒர்க் பண்ணல)

பாடலாசிரியர்
பிடித்தவர்: பட்டுக்கோட்டையார்,கண்ணதாசன், நா.முத்துக்குமார்
பிடிக்காதவர்:வர்றாண்டா, போறாண்டா, டமுக்கு டப்பா ன்ற ரேஞ்சுல பாட்டெழுதறவங்க எல்லோரும்.

கவிஞர்
பிடித்த‌வ‌ர்: அ.வெண்ணிலா, அறிவுமதி
பிடிக்காத‌வ‌ர்: யாரையும் சொல்லத் தெரியல.

எழுத்தாள‌ர்
பிடித்தவர்: பாலகுமாரன்,சுஜாதா,கண்மணி குணசேகரன்,ச.தமிழ்ச்செல்வன்
பிடிக்காத‌வ‌ர்: சாருநிவேதிதா


இந்தத் தொடரை, தொடர அழைப்பவர்கள் சகோ. ஜமால், உழவன், பொலம்பல்கள் எஸ்.கே மற்றும் அன்புடன் அருணா மேடம்.

21 comments:

Anonymous said...

நயந்தாரா கமெண்ட் சூப்பர் :)

சந்தனமுல்லை said...

நல்லா எழுதியிருக்கீங்க!

தமிழ் அமுதன் said...

//கல்யாணப்பரிசு தங்கவேல்//

அதென்னது அந்த படத்துல மட்டும் ...?

///நயன்தாரா (ஐயா படத்துல அழகா இருந்து இப்போ ஆயா மாதிரி ஆகிட்டாங்க)//

ஆமாங்க கொஞ்சம் கவலையாதான் இருக்கு ..?

ஆனா..! உங்களுக்கு புடிச்ச நடன இயக்குனர் அட்ஜெஸ்ட் பண்ணிக்குவாரு.!

அமிர்தவர்ஷினி அம்மா said...

//கல்யாணப்பரிசு தங்கவேல்//

அதென்னது அந்த படத்துல மட்டும் ...?

அதுலதாங்க அவர் எழுத்தாளர் பைரவனா வருவாரு ;)


:))))))))))))

தமயந்தி said...

"

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நயனதாரா ஆயா.. :))

லேபிள் : கூப்பிட்டனுப்பியது
சூப்பர்.. :)

அ.மு.செய்யது said...

//பிடிக்காதவர்:கலா மாஸ்டர் (மானாட மயிலாடல வந்து ஓவரா நடிக்காதீங்கன்னு சொன்னா கேக்கறீங்களா, பாருங்க இப்ப கெமிஸ்ட்ரி ஒர்க் பண்ணல)//

நானும் சொல்லலாம்னு நினைச்சேன்..!!!

சத்ரியன் said...

//கவிஞர்
பிடித்த‌வ‌ர்: அ.வெண்ணிலா, அறிவுமதி
பிடிக்காத‌வ‌ர்: யாரையும் சொல்லத் தெரியல.//

அமிர்தவர்ஷினி அம்மா,

பிடிக்காதவர் பட்டியலில் " நேக்கா" எஸ்ஸாயிட்டீங்களே!

பா.ராஜாராம் said...

பானுமதி...!!!
நயன்தாரா :-)

"உழவன்" "Uzhavan" said...

//(ஐயா படத்துல அழகா இருந்து இப்போ ஆயா மாதிரி ஆகிட்டாங்க)//
 
:-)))
 
அடுத்த தொடர் பதிவா?? ம்ம்.. ரைட்டு :-)

☀நான் ஆதவன்☀ said...

பாஸ் சாமிகுத்ததுக்கு ஆளாகாம பதிவு போட்டுட்டீங்க போல.

அன்புடன் அருணா said...

சிக்க வச்சுட்டீங்களா அமித்தம்மா!! வர்றேன்....எழுதிடறேன்.

Unknown said...

///பட்டுக்கோட்டையார்,///
நீங்களாவது அவரை ஞாபகம் வைத்திருக்கிறீர்கள். சினிமாவில் உருப்படியாக கருத்துச் சொன்ன ஒரே ஆள் பாட்டுக்கோட்டை என்றழைக்கப்பட்ட அந்த விவசாயி மட்டுமே.அதுக்காக பெரிய நன்றி அமித்து அம்மா

அமுதா said...

நல்லா இருக்கு

Thamira said...

பல வரிகள் சுவாரசியம்.!

நசரேயன் said...

//பிடித்தவர்: தனுஷ், சூர்யா//
S.J.சூர்யா??

Unknown said...

பிரபுதேவா நயன்தாரா பற்றிய ஜீவனுடைய பின்னூட்டம் பயங்கர காமடியா இருந்தது

நட்புடன் ஜமால் said...

ஹையோ பாவம் 9

----------

பைரவா - மேட்டர் சூப்பர்

சென்ஷி said...

:)))))))

நல்லா எழுதியிருக்கீங்க!

ஆயில்யன் said...

/////நயன்தாரா (ஐயா படத்துல அழகா இருந்து இப்போ ஆயா மாதிரி ஆகிட்டாங்க)//

ஆமாங்க கொஞ்சம் கவலையாதான் இருக்கு ..?///

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்! :))

ஆயில்யன் said...

//டமுக்கு டப்பா ன்ற ரேஞ்சுல பாட்டெழுதறவங்க எல்லோரும்.///

ஒய்! பாஸ் ஒய்!


தட்டி பார்த்தேன் கொட்டாங்குச்சி எல்லாம் உங்க காலத்துல சூப்பர் டூப்பர் ஹிட் பாட்டு தெரியும்ல!!! :))