03 November 2009

அமித்து அப்டேட்ஸ்

அப்பாவுடன் சேர்ந்து என்னோடு டவுடன் டேம் (தவுஸண்ட் டைம்) கா விட்டாகிறது. நானும் சும்மா விடுவதில்லை பதிலுக்கு டூ டவுடன் டேம் கா விட்டு, கொஞ்ச நேரத்துக்கு பிறகு இரண்டு விரலை வளைத்து பழமும் விட்டுவிடுவேன்.

....

புதிய தலைமுறை புத்தகத்தின் ஒரு பக்கத்தில் இறகு படம் ஒன்றினைப் போட்டு இருந்தார்கள்.

படம் பார்ப்பதற்காக திருப்பிக்கொண்டே வந்த அமித்து, ம்மா, ங்க பார்ரேன், காக்காம்முடி போட்டிக்காங்க.

வந்து படத்தைப் பார்த்த எனக்கு கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

......

சனிக்கிழமை மதியம் தூங்குவதற்காக கதவையெல்லாம் சாத்திவிட்டு அமித்துவையும் தூங்க செய்தால். எழுந்து, எழுந்து உட்கார்ந்துகொண்டாள்.

தூங்கலன்னா பூச்சிக்காரன் வருவான் வர்ஷா, அதான் அம்மா கதவெல்லாம் சாத்திட்டேன், தூங்கு. காலைல இருந்து தூங்கல இல்ல.

அமித்து: பூச்சிக்காரா அவ்வாங்களா

ஆமாம், படுத்துக்கோ

அமித்து: பூச்சிக்காரா போங்க

அம்மா: பூச்சிக்காரா வாங்க

அமித்து: பூச்சிக்காரா போங்க

அம்மா: பூச்சிக்காரா வாங்க

அமித்து: பூச்சிக்காரா போங்க

அமித்து: பூச்சிக்காரா ஆங்க

இவள் பூச்சிக்காரரை கூப்பிட்டதும் ஏன் கூப்பிடுகிறாள் என்று புருவத்தை சுருக்கி கேள்விக்குறியுடன் அவளைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

மேடம் முகத்தை கொஞ்சம் மாற்றிவைத்துக்கொண்டு, பூச்சிக்காரா ஆங்க, நான் ஆங்கூடயே போறேன், கது தெற

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

அமித்து அப்பா வீட்டுக்கு வந்தவுடன் மேற்கூறிய டயலாக்கை சொன்னவுடன், அவர் சிரித்துக்கொண்டே நீ சொன்னியாம்மா.

ம்ச்ச்.. என்று தலையை ஆட்டிக்கொண்டு, ல்ல, அபி சொல்லல ப்பா.

கிர்ரோஓஓஓஓ கிர்.......

.........

குள்ள குள்ள வாத்து பாட்டு ரொம்ப பிடித்துவிட்டது போலும். அடிக்கடி குள்ள வாத்து, குவா வாத்து என்று சொல்லிக்கொண்டிருந்தாள்

இன்று காலை குள்ள வாத்தூ, குள்ள வாத்தூ என்று ரெண்டு, மூன்று முறை அதையே ரிப்பீட்ட நான் குழந்தை மறந்துவிட்டதாக்கும் என்று நினைத்து குவா குவா வாத்து என்று எடுத்துக்கொடுக்க, சட்டென்று பதில் வந்தது மேடத்திடமிருந்து.

நீ ச்சொல்லாத............

........

ஊர்ப்பக்கம் ஒரு பழமொழி சொல்லுவாங்க, புள்ள வளர்றதுக்குள்ள தின்னு பாத்துடனும், பொண்ணு வளர்றதுக்குள்ள போட்டு பாத்துடனும் அப்படின்னு,
இப்ப இந்தப் பழமொழி கூட பொண்ணு வளர்றதுக்குள்ளா பேசி பாத்துடணும்னும் ஒரு வார்த்த சேர்த்துடலாம்னு இருக்கேன் :)

23 comments:

தாரணி பிரியா said...

அமித்து வளர்கிறாளே அமித்து அம்மா. இனி அடிக்கடி கிர்ர்ர்ர்ர்ர்ர் சொல்ல வேண்டி இருக்கும் பழகிகோங்க‌

☀நான் ஆதவன்☀ said...

//மேடம் முகத்தை கொஞ்சம் மாற்றிவைத்துக்கொண்டு, பூச்சிக்காரா ஆங்க, நான் ஆங்கூடயே போறேன், கது தெற//

நல்லா தெளிவா தான் இருக்குறா :)

குவா குவா வாத்து பாட்டை ரெக்கார்ட் பண்ணி போடலாமே பாஸ்?

Unknown said...

//ஊர்ப்பக்கம் ஒரு பழமொழி சொல்லுவாங்க, புள்ள வளர்றதுக்குள்ள தின்னு பாத்துடனும், பொண்ணு வளர்றதுக்குள்ள போட்டு பாத்துடனும் அப்படின்னு,
இப்ப இந்தப் பழமொழி கூட பொண்ணு வளர்றதுக்குள்ளா பேசி பாத்துடணும்னும் ஒரு வார்த்த சேர்த்துடலாம்னு இருக்கேன் :)//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :)))))

ஆயில்யன் said...

//மேடம் முகத்தை கொஞ்சம் மாற்றிவைத்துக்கொண்டு, பூச்சிக்காரா ஆங்க, நான் ஆங்கூடயே போறேன், கது தெற
//

அதான் சரி !:)))

Ungalranga said...

எங்கள் வீட்டு ரவுஸு பார்ட்டி கவுமியை ஒவ்வொரு முறையும் நினைவுப்படுத்துகிறது உங்கள் வரிகள்..!!


//ஊர்ப்பக்கம் ஒரு பழமொழி சொல்லுவாங்க, புள்ள வளர்றதுக்குள்ள தின்னு பாத்துடனும், பொண்ணு வளர்றதுக்குள்ள போட்டு பாத்துடனும் அப்படின்னு, இப்ப இந்தப் பழமொழி கூட பொண்ணு வளர்றதுக்குள்ளா பேசி பாத்துடணும்னும் ஒரு வார்த்த சேர்த்துடலாம்னு இருக்கேன் :)//

உண்மைதான் ...பழகட்டும்!! குழந்தைதானே!!

ஆயில்யன் said...

//ஊர்ப்பக்கம் ஒரு பழமொழி சொல்லுவாங்க, புள்ள வளர்றதுக்குள்ள தின்னு பாத்துடனும், பொண்ணு வளர்றதுக்குள்ள போட்டு பாத்துடனும் அப்படின்னு, இப்ப இந்தப் பழமொழி கூட பொண்ணு வளர்றதுக்குள்ளா பேசி பாத்துடணும்னும் ஒரு வார்த்த சேர்த்துடலாம்னு இருக்கேன் :)//

இப்படி பேசுறதை படிச்சு படிச்சு நாங்களும் ஆபிஸ்ல

நா வூட்டுக்கு போறேன்

ல்ல நா மிடியாது

நீ ச்சொல்லாத எப்டி ஒர்க் பண்ணுறதுன்னு
நீ ச்சொல்லாத

- ரேஞ்சுல ஆகப்போவுது அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

சந்தனமுல்லை said...

/பூச்சிக்காரா ஆங்க, நான் ஆங்கூடயே போறேன், கது தெற/

:-)))))

/சட்டென்று பதில் வந்தது மேடத்திடமிருந்து.

நீ ச்சொல்லாத............/

ஹஹ்ஹா!!

KarthigaVasudevan said...

:))))))))))

Nothing to say pa.

Unknown said...

அமித்து அப்டேட்ஸ்ன்னு இருந்தாலே வேகமா ஓடி வந்து படிக்கிற அளவுக்கு அமித்து ரசிகன் ஆகிட்டு வர்றேன்.

nice post once again

அ.மு.செய்யது said...

//மேடம் முகத்தை கொஞ்சம் மாற்றிவைத்துக்கொண்டு, பூச்சிக்காரா ஆங்க, நான் ஆங்கூடயே போறேன், //

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் !!!!!!

Deepa said...

:-) super.
last line romba apt!

Karthik said...

S.U.P.E.R.B. :))))

பா.ராஜாராம் said...

நீங்கள் வரிசையாய் அமித்து அப்டேட்ஸ்-சே,போடலாம் அமித்தம்மா.அவ்வளவு audict பண்ணிக்கிட்டு இருக்கு.உங்கள் மற்ற வாசகர்களிடம் நான் பேசிக்கிறேன்..

தாங்ஸ்டா-அமித்து!

வல்லிசிம்ஹன் said...

super baby. amiththu amma you are lost:)

Rajalakshmi Pakkirisamy said...

/சட்டென்று பதில் வந்தது மேடத்திடமிருந்து.

நீ ச்சொல்லாத............/

ha ha ha

Anonymous said...

நீங்கள் வாங்கிய பல்ப் அத்தனையும் அழகு. :)

அன்பேசிவம் said...

ம்ம்ம்.. குட்டிப்பாப்பாவிற்கு இப்போ என் வாழ்த்துகள்.

அமுதா said...

டூ டவுடன் டேம் சூப்பர்

அமிர்தவர்ஷினி அம்மா said...

நன்றி தா.பி.

நன்றி ஆதவன், எனக்கு ரெக்கார்ட் பண்றதும், பின்பு அதை வலையேத்தற தொழில்நுட்பமும் தெரியாது பாஸ்.

நன்றி ஸ்மைலி ஸ்ரீமா

நன்றி ஆயில்ஸ் பாஸ்

நன்றி ரங்கன்

மீண்டும் நன்றி ஆயில்ஸ் பாஸ்

நன்றி முல்லை

நன்றி கார்த்திகா

நன்றி கே.வி.ஆர்

நன்றி அ.மு.செ

நன்றி தீபா

நன்றி கார்த்திக்

நன்றி பா.ரா

நன்றி வல்லிசிம்ஹன் மேடம்.
(அன்னைக்கு உங்களோட பேசாம முடியாம போனதுல எனக்கும் வருத்தமே)

நன்றி ராஜலட்சுமி

நன்றி முரளிகுமார்

நன்றி சின்னம்மிணி

நன்றி அமுதா

நட்புடன் ஜமால் said...

சட்டென்று பதில் வந்தது மேடத்திடமிருந்து.

நீ ச்சொல்லாத............
]]

ஹா ஹா ஹா
--------------------

இப்ப இந்தப் பழமொழி கூட பொண்ணு வளர்றதுக்குள்ளா பேசி பாத்துடணும்னும் ஒரு வார்த்த சேர்த்துடலாம்னு இருக்கேன் :)

அதென்ன இருக்கேன் அதான் சேர்த்தாச்சில்ல

CS. Mohan Kumar said...

ரொம்ப அழகா இருந்தது இந்த பதிவு. எனது பெண்ணுக்கு 11 வயது ஆகிறது. அவளது சின்ன வயது குறும்புகளை அப்போது நான் தனியே ஒரு diary-ல் எழுதி வைத்தேன்.

இப்போது என் பெண் அதை படித்து சிரிக்கிறாள். உங்கள் பெண் உங்கள் -blog - லேயே பின்னர் படித்து சிரிப்பாள்.

I am also a blogger. Pl. visit my blog when you have time and give your comments.

மோகன் குமார்

http://veeduthirumbal.blogspot.com/

தாங்கள் முதலில் வாசிக்க இந்த பதிவை பரிந்துரை செய்கிறேன்

"யாரை பிடிக்கும்?" மாறும் விதம்
Link:
http://veeduthirumbal.blogspot.com/2009/10/blog-post_20.html

Dhiyana said...

///பூச்சிக்காரா ஆங்க, நான் ஆங்கூடயே போறேன், கது தெற/
//

இனிமேல் பூச்சிக்காரனைக் கூப்பிடுவீங்க? தேவையாப்பா இது?

இரசிகை said...

:)

nice................