ஏண்டா, காலைல நூறு தொவரம்பருப்பும், துணி சோப்பு ஒன்னும் வாங்கித்தர சொன்னதுக்கு மூஞ்சக்காட்டிட்டு போன, இப்ப இம்மாம் பெரிய ட்டூப வாங்கியாந்து வெச்சிக்கிட்டு இருக்க.....
ஆரம்பிச்சிட்டியா,ப்போ, காச ஸ்டாண்டுல வெச்சிருக்கன் பாரு, எடுத்துக்க என்று சுவாரஸ்யமாய் அந்த அம்மாம் பெரிய ஃபேர் அண்ட் லவ்லி ட்யூபை பிதுக்கி முகம் முழுக்க கரும்புள்ளி நோ ஒன்லி செம்புள்ளிகள் குத்த ஆரம்பிச்சிருப்பார் திரு. ஏழுமலை என்கிற பாக்கியராஜ் என்கிற பேரண்ட் லவ்லி (லோக்கலா ஒன்னா சேத்து சொல்லிப்பாருங்க இப்படித்தான் உச்சரிப்பு வரும். (அவருக்கு தெரிந்தும் தெரியாமலும் நாங்கள் டப்சா என்று பெயர் வைத்திருந்தோம்)
மனுசன் கொஞ்சம் கலரு, சுருள் முடி இடப்பக்க வகிடு க்ராப், மாசத்துக்கு ரெண்டு 250 க்ராம் ஃபேர் அண்ட் லவ்லி, ஒரு பெரிய கோகுல் சேண்டல் பவுடர் டப்பா. காலையும் மாலையும் விடுமுறை தினங்களின் போது மதியத்திலும் அந்தத் திண்ணையின் ஓரத்தில் ஒரு முகக்கண்ணாடியைப் பிடித்துகொண்டு மனுசன் பண்ற அலம்பல் தாங்கமுடியாது.
எவ்ளோ தண்ணி கஷ்டமா இருந்தாலும் அரைக்கொடத்த கவுத்து மூஞ்சக் கழுவிட்டு, நல்லா மொகத்த தொடச்சிட்டு, ட்யூபை பிதுக்கி ஒரு பாதி விரல் நீளத்துக்கு க்ரீமை வெளியே எடுத்து மூஞ்சி முழுக்க பொட்டு பொட்டா வெச்சி, அப்படியே இடதும் வலதுமா லாவகமா தேய்ப்பாரு, அப்புறம் ஒரு கையை குழியாக்கி அதுல பவுடரைக் கொட்டி ஒரு கோட் அடிச்சிப்பாரு. இப்ப மனுசனோட கண்ணையும், மீசையும் தவிர எல்லாம் வெள்ள வெளேர்னு இருக்கும். ஆச்சா அப்புறம் ரோஸ் கலர் இல்லனா சந்தன கலர்ல சைனா சில்க் ஜிப்பா வெச்சிருப்பாரு அத எடுத்து மாட்டுனார்னா நேரா தெரு முக்கு டீக்கடைக்கு போறார்னு அர்த்தம், அதுவே பேண்ட்டு, சர்ட்ட போட்டாருன்னா டோபாஸ் ப்ளேடு கம்பெனிக்கு போரார்னு அர்த்தம், அங்கதான் அவருக்கு ஃபேர் அண்ட் லவ்லியும், பவுடரும் வாங்க படியளந்துகிட்டு இருந்தாங்க. அது வாங்கனுது போங்க மீந்தது வீட்டுக்கு சாப்பாட்டுக்கொடுப்பாரு.
அவர்தான் மூத்த மகன். சோக்காளி, மீதிப்புள்ளைங்களாம் மாட்டு சாணியோடும், தவிடு புண்ணாக்கோடு பொழுதன்னிக்கும் போராட இவர் மாத்திரம் மைனராட்டும் வருவாரு போடுவாரு பொறப்படுவாரு. மனுசன் அழகுல ஒன்னும் கொறச்சலில்ல, என்னா, அவரு என்னப்பாத்தா உங்களப்பார்க்குறா மாதிரியிருக்கும் அவ்ளோதான்,அதுதான் அவருக்கு பொண்ணுப்பார்க்க போகும் போது ப்ரச்சினையாகிடுச்சு.

மூத்த புள்ளைக்கு முடிச்சாத்தான் அடுத்தடுத்தத தள்ள முடியும்னு அவர பெத்தவங்களும் எங்கங்கயோ பொண்ணு பாத்தாங்க, ஒன்னும் ஒத்து வரல, அவங்க ஒத்து வந்தா, இவரு கலரு வேணும்னுவாரு, படிக்கலன்னா கூட பரவால்ல, பொண்ணு கலரா இருக்கனும்கறதுதான் இவர் குறிக்கோள், ஆனா கலரா, அழகா இருக்குற பொண்ணுங்களுக்கு இவரோட மாறுகண்ணு ப்ரச்சினையாகி கண்ணாமூச்சி ஆடி
ஒரு வழியா திருக்கோயிலூர்ல ராணின்னு ஒரு பொண்ணப்பாத்து முடிச்சாங்க.
கல்யாணம் முடிச்சு ஆரத்தி எடுத்து வீட்டுக்குள்ள வரும்போது பாத்தா, அந்த அக்கா கருப்பு, ஆச்சரியமா போயிடுச்சு, இந்த அண்ண்ன் எப்படி ஒத்துக்கிச்சு அப்படின்னு குழப்பம், ஒரே பொண்ணு, சொத்து நெறைய அப்படின்னு அவங்க அம்மா ஒத்துக்க வெச்சிட்டாங்கன்னு சொல்றாங்க ஒரு சிலரு, பொண்ண மாத்திட்டாங்கன்னு சொல்றாங்க இன்னொரு சிலரு.
என்னவோ மனுசனுக்கு கல்யாணமாகி அந்தக்காவ பண்ணாத ரவுசு பண்ணாரு, எங்கயும் வெளிய கூட்டிக்கிட்டு போகமாட்டாரு, அப்படியே போனாலும், அஞ்சடி பின்னாடிதான் அந்தக்கா போகனும், எப்பப்பார்த்தாலும் வீட்டுல வேலையேதான் செஞ்சிக்கிட்டு இருக்கும் அந்தக்கா. மனுசன் மூஞ்சிக்கொடுத்துக்கூட பேசமாட்டாரு. ரொம்பவும் பாடுபடுத்துனாரு. அப்புறம் அப்படி இப்படி அவங்க இவங்கன்னு அறிவுரை சொல்லி அவங்க வீட்டுல இன்னொரு புள்ளைக்கும் கல்யாணம் ஆனவுடனே இவரும் கொஞ்சம் மனசு மாறி ராணி அக்கா கொழந்த உண்டானாங்க. வழக்கம் போல மாமியார் மருமகள்கள் சண்டைல, பலரின் பரிந்துரையின் பேரில் மாசமாக இருக்கும் ராணி அக்காவை தனிக்குடித்தனம் கூட்டிட்டுப்போயிட்டாரு.
ஆச்சு, தனியாப்போயும் அவரு அப்படியேத்தான் இருப்பதாக வழியில பார்த்து ஒரு நாள் அந்தக்கா சொன்னாங்க.உங்களுக்கு ஆம்பிளப்புள்ளையா, பொம்பளப்புள்ளையா ராணியக்கா என்று கேட்டபோது, ஏதோ ஓன்னு, கலரா பொறந்தா சரிதான், இல்லனா அதுவும் இந்தாள் கிட்ட......
பிறகொரு நாள், ராணியக்காவுக்கு ஆண்குழந்தை பிறந்து, ஆஸ்பத்திரியேலேயே அந்தக்குழந்தையை அப்பு என்று கூப்பிட்டு மிகவும் சந்தோஷமடைந்து, புள்ள கலராத்தான் இருக்கு அவர மாதிரியே என்று போய் பார்த்தவர்களிடமில்லாம் சந்தோஷித்து, பின்னர் வந்த ஜன்னியில் ஆஸ்பத்திரியிலேயே இறந்தும் போனார் ராணி அக்கா.
நிற்க. இப்போது இரண்டாம் அத்தியாயம்.
பிறந்தது குழந்தையை வைத்து வளர்க்க ஆளில்லாமல் ராணி அக்காவின் அம்மாவே சென்னைக்கு வந்து கொஞ்ச நாள் பார்த்துக்கொண்டிருக்க, அவர்களை பார்க்க வர இருந்த அவரின் தங்கை மகளையே (ராணியக்காவுக்கு நெசம்மாவே தங்கச்சி முறை) இரண்டாம் தாரமாக மணமுடித்து வைத்துவிட்டார்கள் ஏழுமலையாருக்கு.இரண்டாம் தாரம் வந்தவுடனுன் குழந்தையை ஒப்படைத்துவிட்டு ராணி அக்காவின் அம்மா தன் சொந்த ஊருக்கே சென்று விட்டார்.
இரண்டாம் தாரம் சிகப்பாக இருப்பதனால் மனுசனுக்கு சந்தோஷம்தான் போல, அஞ்சடி தூர இடைவெளியெல்லாம் தராமல் தோள் மேல் கை பிடித்து போகாத குறையாகத்தான் வந்தார்கள், போனார்கள், வென்றார்கள்.
வென்றதில் இப்போது இந்தம்மா மாசமாகி,(ஆரம்பத்தில் அக்கா புள்ளைய நல்லாத்தான் பாத்துக்கிட்டாங்க) என்னால அது முடியாது, இது முடியாது கடைசியில புள்ளையப் பாத்துக்க முடியாது என்று புலம்ப ஆரம்பிக்க நாளொரு ப்ரச்சினையை சந்தித்தார் திருவாளர் ஃபேர் அண்ட் லவ்லி. பையனின் மீது பாசம் வேறு அவனை ஊரில் கொண்டு விட தடுத்தது. ஆனால் மனைவியின் நச்சரிப்பு அதை வென்றது.
நல்ல ஞாயித்துக்கெழமையாப் பார்த்து அப்புவை மூட்டை முடிச்சு கட்டி திருக்கோயிலூருக்கு ராணியோட அம்மா வீட்டுக்கு கொண்டு போனார், ராணியின் அம்மா காரணம் விசாரித்ததில், கலரு கலருன்னு அலைஞ்சேன், கருப்பா இருந்தாலும் எல்லாமா இருந்த மகராசி போய் சேர்ந்தா, அவளுக்கு செஞ்சதுக்கு கூலி கொடுக்கத்தானோ என்னவோ கடவுள் கலரா இருக்குற பொண்டாட்டிய அனுபவிடா இப்பன்னு அனுப்பி வெச்சிருக்கான். எல்லாத்துக்கும் என்னைய மன்னிச்சுருங்க, புள்ளைய பாத்துக்கோங்க, மாசா மாசம் பணம் அனுப்பறேன், கொஞ்சம் ப்ரச்சினை முடிஞ்சவுடனே சீக்கிரம் வந்து புள்ளைய கூட்டிக்கறேன்னு சொல்லிட்டு சென்னைக்கு வந்துட்டாரு.
அதுக்கப்புறம் அவரு ஃபேர் அண்ட் லவ்லி போடறதில்லை, அவரோட ரெண்டாவது தாரம்தான் அதைப் போட ஆரம்பிச்சாங்க.
ராணியக்கா உயிரோட இருக்குற சமயத்துல கிண்டலுக்காகவாவது மஞ்சளப் பூசறதுக்கு பதிலா அதையாவது பூசிப்பாரேன், உங்க வீட்டுக்காருக்கு மனசு மாறுதான்னுப் பாப்போம் என அக்கம் பக்கத்துக்கு அக்காமார்கள் சொல்ல, அடச்சீ போக்கா, கொழ கொழன்னு அந்த சனியன யாருப் போடுவா என்று சொல்லக் கேட்டிருக்கேன்.
26 comments:
அழகான நடை. நிறத்தில் எல்லாம் இருக்கு என எண்ணி, பின் நிறத்தில் என்ன இருக்கு என உணரும் சராசரி மனிதனின் வாழ்வை அருமையாய்ச் சித்தரித்திருக்கிறீர்கள்!
கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம். யாருக்கு பிரயோஜனம்..
என்று தணியும்.....???
--வித்யா
:((
ஹ்ம்ம்ம்...
வழக்கம்போல சுவாரஸ்யம் குறையாத நல்ல நடை.
ம்ம்ம்...இப்பிடில்லாம் இருக்காங்க!!!
hm...
ரொம்ப அருமையான கதை அமித்து அம்மா. பல்வேறு உணர்வுகளை அடக்கியதாக இருக்கிறது.
மிக முக்கியமான கருவும் கூட.
ரொம்ப நல்லாயிருந்தது, ஆரம்பித்தவிதம். உள்ளே இழுத்தது மேலும் படிக்க. சம்பாஷனை முடிந்து விவரிப்பு வரும்போது ஏனோ ஒரு அன்னியத்தனம் தெரிகிறமாதிரி இருக்கிறது எனக்கு. மிக இயல்பான, எல்லாருக்கும் பரிச்சயம் இருக்கிற மாதிரி ஒரு கதை, கதையாடல்!? அழகாய் வருகிறது, இழையாய் வருகிறது உங்களுக்கு நகையுணர்வு (sense of humour??) க்டைசி வரை ஒரு எள்ளலுடனே முடித்திருக்கலாம் என்று தோன்றுகிறது. ஒரு நாடகபாணியான சித்திரங்கள், இரண்டாவது அத்தியாயத்தில் இருந்து அறுந்து தொங்குகிறது.
உங்கள் நடைக்கு ஒரு ஜே!!
அன்புடன்,
ராகவன்
amirthavarshini
nice
but look behind u
there the sales personsof fair and lovely agitating u
nijamavay f&l sigappakuthaa 0r illaiyaa --tell me
எங்கூர்காரவுக பேசுற மாதிரியே எழுத்துநடை இருக்கு...
//அதுக்கப்புறம் அவரு ஃபேர் அண்ட் லவ்லி போடறதில்லை, அவரோட ரெண்டாவது தாரம்தான் அதைப் போட ஆரம்பிச்சாங்க.//
வாழ்க்கை எல்லாருக்கும் பாடங்களைக்கற்றுக்கொடுக்கிறது.
எங்கள் எதிர் வீட்டில் ஒரு அண்ணா அப்போது கல்லூரி போய்க்கொண்டிருந்தார்கள். அப்பொது நாங்கள் பேர் அண்ட் லவ்லி போட ஆரம்பிக்காத வயது. அவரைப்பார்த்து பெரியவர்கள் கிண்டல் செய்யும்போது நானும் சிரித்திருக்கிறேன்.
லவ்லி-யாத்தான் இருக்கு...
//திரு. ஏழுமலை என்கிற பாக்கியராஜ் என்கிற பேரண்ட் லவ்லி//
இந்த பேரால கத முழுக்க நம்ம நடிகர் பாக்கியராஜ் தான் ஞாபகத்துக்கு வந்தார்!!
நிறம் !!! குட் ஒன் அமித்து அம்மா !!!
எந்த நெருடலும்
இல்லாம ரொம்ப கேஷூவலா எழுதியிருக்கீங்க...
இந்த ஸ்டைல் எனக்கு பிடிச்சிருக்கு !!!
அனைவரின் கருத்துக்கும் நன்றி.
// மாசத்துக்கு ரெண்டு 250 க்ராம் ஃபேர் அண்ட் லவ்லி, //
மாசத்துக்கு அரைகிலோ ..! வீட்டுக்கு காப்பி பொடி வாங்குரதுபோல வாங்கி போட்டு அப்பி இருக்காரு ..!
கலக்குங்க ...கலக்குங்க ...!
ஹ்ம்ம்ம் :((
/அது வாங்கனுது போங்க மீந்தது வீட்டுக்கு சாப்பாட்டுக்கொடுப்பாரு/
/இவர் மாத்திரம் மைனராட்டும் வருவாரு போடுவாரு பொறப்படுவாரு/
/அடச்சீ போக்கா, கொழ கொழன்னு அந்த சனியன யாருப் போடுவா என்று சொல்லக் கேட்டிருக்கேன்/
the title fair and lovely is optly..not just optly,thougtfully chosen.
memorable story!
ஹ்ம்... நிறத்தின் நிஜங்கள் சில சமயம் வலிகள் தான்
விளம்பரம் பார்த்து, அதன் மீது மோகம் கொண்டு வீணா போய்றாதீங்க - அப்படிங்கிற கருத்தை நல்ல சொல்லிருக்கீங்க அமித்துமா.
மக்களே சிந்தியுங்கள்.
இதுல உங்களின் புது முகம் பார்க்கிறேன் அமித்தம்மா.(கொஞ்சமாத்தான் உங்களை வாசித்திருக்கேன் என்றாலும்)மெலிய அங்கத நடையுடன் தொடங்கி,சுளீரென முடிக்கிற இந்த ஸ்டைல் அருமையாய் வாய்த்திருக்கு.சில இடங்களை நிறைவு செய்யாமல் வாசகனின் உணர் நீட்ச்சிக்கு அனுமதித்து இருப்பது,நல்ல பக்குவம்!அமித்து!.."அம்மா எழுத்தாளர் ஆயட்டாங்கடோய்..."
அருமை அமித்தம்மா!
/அடச்சீ போக்கா, கொழ கொழன்னு அந்த சனியன யாருப் போடுவா என்று சொல்லக்கேட்டிருக்கேன்/
இத ஃபேர் & லவ்லி கம்பெனிக்காரங்க படிக்கணும்.
ரெண்டாவது மனைவிக்கு பெறந்த கொழந்த என்ன கலருங்க?
//ஆம்பிளப்புள்ளையா, பொம்பளப்புள்ளையா ராணியக்கா என்று கேட்டபோது, ஏதோ ஓன்னு, கலரா பொறந்தா சரிதான், இல்லனா அதுவும் இந்தாள் கிட்ட......//
என்ன ஒரு சலிப்பு நிறைந்த வார்த்தைகள்
எனக்கு பல ஆண்டுகள் முன் நடந்த சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது. தலை பிள்ளை பெண் பிள்ளையாய் போனது என்று பேசாமல் இருந்த கணவன். அடுத்து குழந்தை(கள்) உண்டானாள் தாய்!! பிறந்தன மூன்று ஆண் குழந்தைகள் ஒரே பிரசவத்தில். அந்த தாய் முகத்தில் தெரிந்த நிம்மதி எனக்கு மறக்க முடியாத ஒன்று
ரொம்ப அழுத்தமான கதை, அல்லது நிஜம்.
ஒரே சீராக தடம் மாறாது இழுத்துக்கொண்டு
போகிறது கனமாக.
கண்ணே கலைமானே பாட்டுக்கேட்ட மாதிரி.
மத்தியானமே பதிவைப் பாத்துட்டேன். மெல்ல ஆற அமர படிப்போம்னு இப்பத்தான் படிக்க ஆரம்பிச்சேன். நல்லாயிருக்கு.
//அது வாங்கனுது போங்க மீந்தது வீட்டுக்கு சாப்பாட்டுக்கொடுப்பாரு.//
//என்னா, அவரு என்னப்பாத்தா உங்களப்பார்க்குறா மாதிரியிருக்கும் அவ்ளோதான்,//
என்று ரசித்து நகர்ந்து, ராணியக்காவின் மரணத்தில் மனம் கனத்துப் போனேன். பிறகு அடர்த்தியில்லாமல் சாதாரணமானது போல் இருக்கிறது. முடிய வேண்டிய இடம் இதுவல்ல எனத் தோன்றுகிறது. யோசித்துப் பாருங்களேன்.
interesting!
Hmmm...
very sad :((
Post a Comment