18 September 2009

கனவு காணும்..............

எனக்கு தூக்கம் வருதோ இல்லையோ கனவு கண்டிப்பாக வந்துவிடும். அந்தளவுக்கு கனவு மார்ச் பாஸ் நடக்கும் நமக்குள்ள. இதுல என்ன கொடுமைன்னா, சில சமயம் எங்கயாவது போய்க்கிட்டு இருக்கும்போது ஒரு இடம், ஒரு சூழ்நிலையை கடக்கும் போது இது மாதிரி நமக்கு இதுக்கு முன்னாடி ஆகியிருக்கே.. எங்க எங்க அப்படின்னு தோணும். யோசிச்சு பார்த்தா அது மாதிரி ஒன்னு கனவா வந்து போயிருக்கும்.

என்னோட கனவுகள் நிறைய மரணம் சம்பந்தமா தான் அமையும்,, ஏன்னே தெரியாது., முழிச்சு பார்த்து கனவு ஞாபகம் இருந்து அதை யார்கிட்டயாவது சொன்னேன்னா அந்த வாரத்தில் அது மாதிரி ஒரு நிகழ்வு சொந்தத்திலேயோ அல்லது பக்கத்து அக்கதிலேயோ நடப்பது கன்ஃபர்ம்.

இதனாலயே கமல் நான் ஒரு கனவு கண்டேன்னு அக்கா கிட்ட காலைல எழுந்து சொல்ல ஆரம்பிச்சேன்னா, அலறுவாங்க, அம்மா தாயே உன் திருவாய மூடு அப்படின்ற லெவலுக்கு கொண்டுபோய் விட்டிருந்தது இந்த கனவு பீதி.

ஒரு முறை என் கனவில் என் அக்கா இறப்பது மாதிரி கண்டு, அலறி அடித்து எழுந்து அக்காவைத் தொட்டுப் பார்த்து, வேண்டாத கடவுளர்களையெல்லாம் வேண்டி, உனக்கு அத்த செய்றேன், இத்த செய்றேன்னு அக்ரிமெண்ட்லாம் போட்டு, அந்தக் கனவை வெளிய யார்கிட்டயும் சொல்லாம இருக்க நான் பட்ட பாடு. ஹைய்யோ யப்பா, நான் நானாக ஆக ஒரு வாரம் புடிச்சது.

இந்த மாதிரி ஒரு அனுபவம் என் அக்காவுக்கும் உண்டு, அது இன்னும் பீதிய கெளப்பிவிட்டுருச்சு. ஒரு முறை என் அக்காவுக்கு காய்ச்சல் அதிகமாகி படுத்த படுக்கையாகி விட, சரியாகிக்கொண்டிருக்கும் நிலையில், அதன் கனவில் கடவுள் வந்து பிப்ரவரி 11ன்னோ 21ன்னோ ஏதோ ஒரு தேதி சொல்லி அன்னிக்கு நீ இறந்துடுவ, செய்ய வேண்டியதெல்லாம் செஞ்சு முடிச்சுக்க என்று சொல்லிட்டுப் போய்ட்டாரு. அவர் பாட்டுக்கு போய்ட்டார், இங்க எங்க பாடுதான் திண்டாட்டமா ஆகிருச்சு, எங்களையெல்லாம் கூப்பிட்டு பக்கத்துல வெச்சுக்கிட்டு ஒரே அழுகை, பத்தாத குறைக்கு அவஙக் ப்ரண்டை கூப்பிட்டு, சரசா, எனக்கு ஒன்னு ஆகிடுச்சுன்னா எம் புள்ளைங்கல (என்னையும் சேர்த்துதான்) நீ தாம்ப்பா பார்த்துக்கனும் என்று அழ(த)களம். போதாக்குறைக்கு அது சமீபத்தில்தான் தனியாக நின்று ஒரு ஃபோட்டோ எடுத்து வைத்து வீட்டில் ப்ரேம் போட்டி மாட்டிவைத்தது. ஆனா வொன்னா அத வேறப் பாத்து பாத்து அழும், ஏங்க்கா அழுவுற ந்னு ஒரு நாள் ஸ்கூல் விட்டு வந்து கேக்க, நான் செத்துட்டேன்னா நீங்க அந்த ஃபோட்டோவ வெச்சிதான் அழுவீங்கல்ல ந்னு அது அழ, நான் அழ,
அக்கா பசங்க அழ, அம்மா அழ என ஒரே ஒப்பாரி மயம். அப்புறம் குறிப்பிட்ட நாள் கடக்கும் வரைக்கும் வீடே திக் திக். பக். பக்.

பிறகு ஒருமுறை என் ப்ரண்டோட தங்கை தற்கொலை பண்ணிக்கொண்டு சாகிறா மாதிரி கனவு கண்டு வீட்டில் சொல்ல, அதற்கு ரெண்டு நாள் கழிச்சு லஷ்மி (நர்ஸ்) அவளும் என் ப்ரண்ட்தான், அன்னைக்கு காலைல ஆபிஸுக்கு போகும்போது நைட் ட்யூட்டி முடிச்சுட்டு எதிர்ல வந்தா, நல்லா பேசிட்டு போனா,
சாயங்காலம் வீட்டுக்கு வந்த கொஞ்ச நேரத்துல தகவல் வருது, காதல் தோல்வி, வீட்டில் தூக்கு மாட்டிக்கிட்டா அப்படின்னு, நெடுஞ்சாண்கிடையா அவளைப்பார்க்க பார்க்க அழுகையும் ஆத்தாமையும்.. வீட்டுக்கு வந்து சொல்ல, இது தான் உன் கனவுல தோத்தரிச்சு இருக்கு போல.. இது அம்மா.

இப்படியா இன்னும் ரெண்டு இன்சிடண்ட், அதற்குப்பிறகு நாய் கடிக்கறா மாதிரி, பாம்பு கடிக்கிறா மாதிரின்னு வந்து போகும். அப்படி வந்தா ஏதோ சனியன் பிடிச்சது, விடப்போகுதுன்னு ஒரு காரணமிருக்குன்னு அக்கா சொல்லும். நமக்கிருக்குற சனியன் வாய்ல எப்பவும்தான் இருக்கே, அது எங்கே விட...

நிறைய கனவுகள் லேசா ஞாபகமிருக்கும், நூல் புடிச்சா மாதிரி அது பின்னாடி போனா மெயின் மேட்டர புடிச்சிரலாம். சில சமயம் இந்த சுவாரசியம் எனக்குப் பிடிக்கும்.

இப்போ சமீபமா ரெண்டு டெர்ரர் கனவு வந்துச்சு, அதுல ஒன்னு சிறுகதைப் பட்டறைக்கு போக இருந்த எனக்கு ஆப்பாக அமையும்னு அப்ப நினைக்கல.

கனவு இதுதான்: எங்க வீட்டுக்கு கீழ குடியிருக்குற பாட்டி, தாத்தா, பேரன் குடும்பத்துல தாத்தா இறந்து போயிடறாரு, கீழ வீட்டுல படுக்க வெச்சிருக்காங்க, ஆயா அந்த களேபரத்துலயும் போண்டா, வெஜிடபிள் பிரியாணி (!?) யெல்லாம் செஞ்சி வெச்சிட்டு எல்லாரையும் சாப்பிட சொல்றாங்க, ஆனா கொஞ்ச பேரு அழுதுகிட்டு இருக்காங்க. கொஞ்ச நேரம் கழிச்சு என் மாமியார் அழறாங்க, சங்கீதாவோட பாட்டி (அவங்க உறவின் முறை) இறந்துட்டாங்களாம், தகவல் வந்திருக்கு, வாங்க கெளம்பலாம்னு என் மாமனாரை கூப்பிடறாங்க. இதெல்லாம் கனவுல ஆனா நிஜத்துல பார்க்குற ஒலி / ஒளி எஃபெக்ட்டோட நடக்குது. நேரம் காலை 6-7 க்குள்.
மணியாகிடுச்சுன்னு மாமனார் வந்து எழுப்ப, எழுந்தவுடன் எந்த ஒரு முன்யோசிப்பும் இல்லாமல் என் மாமியார் கிட்ட சொல்லிட்டேன், இந்த மாதிரி கனவு, நீங்க கீழ கேட் கிட்ட நின்னு அழறீங்க அப்டின்னு. அவங்களும் கனவுல சாவு பாத்தா கல்யாணம் நடக்கும்னு அப்ப அத லைட்டா எடுத்துக்கிட்டாங்க, சரியா அதே வாரத்து சனிக்கிழமை மதியம் 4 மணிக்கு போன் வருது, மாமியார் வீட்டு நெருங்கிய சொந்தத்தில் ஒருத்தவங்க ஆக்சிடெண்ட் அப்படின்னு., கேட்டுட்டு கொஞ்ச நேரம் அழுதுட்டு இது அப்பவே அவ கனவுல தோத்தரிச்சுடுச்சு, நாந்தான் அத வேற மாதிரி எடுத்துக்கிட்டேன் அப்படின்னு.... கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்...... அப்புறம் அவங்க ஊருக்கு புறப்பட, நான் அமித்துவோட இங்க செட்டிலாகி, பட்டறைக்கனவு பட்டாசா போயிருச்சு. (இந்த மாதிரி நினைக்கறது ஒன்னு, நடக்கறது ஒன்னுன்னு நேத்து இன்னிக்கா நடக்குது, எப்பவுமே இப்படித்தானே, மனச தேத்திக்கிட்டேன்) நல்லவேளையா அந்த தாத்தா பத்திரமா இருக்கார் :)))))))))

அடுத்ததா இன்னொரு கனவு: அது செம்ம டெர்ரர்.. எங்க வீட்டுத் தெருமாதிரி தான், ஆனா கொஞ்ச வேற மாதிரி சாயலும், முருங்கை மரம்....... ரெண்டு.... ஹைய்யோ வேண்டாம் சாமி, இதுவும் பலிச்சுருச்சுன்ன்னா...............

ஆனா என் அப்பாவோ, மாமாவோ, தோழியோ இறக்கும்போது அதற்கு முந்தைய நாட்களில் எதுவுமே தோத்தரிக்கல....... :(((((((((

தினம் தினம் கனவுகளுக்கும் அதைத் தொடர்ந்து கடவுளிடம் கை கூப்புதலுக்கும் பஞ்சமில்லாமல் நாட்கள் நகர்கிறது… , ஹூம்.


பி.கு: போதுங்களா சின்ன அம்மிணியக்கோவ்..........

21 comments:

Anonymous said...

அமித்து அம்மா, பயங்கர டெரர் கனவாத்தான் இருக்கு. ஹாஸ்டல்ல என் தோழிக்கு இப்படித்தான் குடும்பத்தில ஒருத்தங்க இறந்து போற மாதிரி கனவு வந்துச்சு. அப்ப தோழிகள் சொன்னாங்க அந்த கனவுல இறந்து போறமாதிரி வர்றவங்களுக்கு ஆயுசு கெட்டியாம்.

உங்க ஒவ்வொரு கனவையும் ஒரு பதிவா போடலாம் போல இருக்கே.
நன்றி அமித்து அம்மா

அமுதா said...

ஒரே டெர்ரர் கனவா சொல்லிட்டீங்களே???

ஆயில்யன் said...

//சில சமயம் எங்கயாவது போய்க்கிட்டு இருக்கும்போது ஒரு இடம், ஒரு சூழ்நிலையை கடக்கும் போது இது மாதிரி நமக்கு இதுக்கு முன்னாடி ஆகியிருக்கே.. எங்க எங்க அப்படின்னு தோணும்.//


அதே!
அதே!!

எனக்கும் பல நேரங்களில் இது போன்ற உள்ளுணர்வு நிகழ்வுகள் நடந்திருக்கு என்ன காரணம் என்றே தெரியவில்லை :(

ஆயில்யன் said...

//என்னோட கனவுகள் நிறைய மரணம் சம்பந்தமா தான் அமையும்,, ஏன்னே தெரியாது., முழிச்சு பார்த்து கனவு ஞாபகம் இருந்து அதை யார்கிட்டயாவது சொன்னேன்னா அந்த வாரத்தில் அது மாதிரி ஒரு நிகழ்வு சொந்தத்திலேயோ அல்லது பக்கத்து அக்கதிலேயோ நடப்பது கன்ஃபர்ம்.//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் பாஸ் நீங்க டெரரர்தான் பாஸ்!

தமிழ் அமுதன் said...

ஏன் இப்படி பயம் காட்டுறீங்க...........!

இனிமேல நேத்து நான் ஒரு கனவு கண்டேன்னு யாருகிட்டயாவது சொல்லி பாருங்க
பின்னங்கால் பிடரி யில் அடிக்க ஓட போறாங்க....!


///எனக்கு தூக்கம் வருதோ இல்லையோ கனவு கண்டிப்பாக வந்துவிடும். ///

தூக்கத்துல வந்தாதான் கனவு ..! மத்த நேரத்துல வந்தா அது கற்பனை...!;))

ஆயில்யன் said...

//நிறைய கனவுகள் லேசா ஞாபகமிருக்கும், நூல் புடிச்சா மாதிரி அது பின்னாடி போனா மெயின் மேட்டர புடிச்சிரலாம்.///

நூல் அறுந்துடாது பாஸ் ?

ஆயில்யன் said...

//பி.கு: போதுங்களா சின்ன அம்மிணியக்கோவ்........../


போதும் சாமியோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பயங்கரமா இருக்குங்க.. :(

ப்ரியமுடன் வசந்த் said...

கனவு காணும் வாழ்க்கை யாவும் நடந்து போகும் சோகங்கள்....கனவு கூட பாரமென்று தூக்கம் மறக்கும் இரவுகள்......

கனவுகள் பலிக்காமல் இருக்கட்டும்.....

En Parvai said...

நானும் இப்படி கனவு கண்டு டெரர் ஆனதுண்டு.ஆனால் கடவுள் புண்ணியத்தில் தப்பாக நாடந்தது இல்லை.ஆனால் உள்ளுணர்வு அப்படியே நடக்கும்.அதனால் எப்பவும் நால்லதே நினைக்க முயற்சி செய்யிரேன்.

சந்தனமுல்லை said...

ஆகா..அப்படியே அமிர்தவர்ஷினியானன்ந்தம்மான்னு ஒரு மரத்துக்கீழே டெண்ட் போடலாமா பாஸ்!!!செம கலெஷன் பாஸ்..உங்களாலே முடியும் பாஸ்..கண்டிப்பா முடியும்..!!! :)

சந்தனமுல்லை said...

இந்த இடுகையை அப்துல் கலாம் படிச்சா எப்படி ஃபீல் பண்ணுவார்...அவ்வ்வ்வ்! :))

சந்தனமுல்லை said...

/ல்லவேளையா அந்த தாத்தா பத்திரமா இருக்கார் :)))))))))
/
என்ன ஒரு வில்லத்தனம்!! :)))

butterfly Surya said...

நிறைய பதிவுகளை தொடர்ந்து படிச்சா இப்படி வருதாம்.

அமிர்தவர்ஷினி.. யம்மா..

"உழவன்" "Uzhavan" said...

என்ன கொடுமை அமித்துமா?? சாகப் போற நாள் தெரிஞ்சா வாழ்கிற நாள் நரகம்னு சொன்ன மாதிரியல்லவா கனவுக்குப்பின் இருந்திருக்கும்.
 
எனக்கும் இந்தக் கனவின் மீது ஒரு மரியாதை ஏற்பட்டது எப்போதென்றால், யாரோ ஒருவர் என்னை எழுப்பி, உனக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது என்று சொல்வதுபோல் ஒருநாள் கனவு கண்டேன். கனவு கண்ட இரண்டு மூன்று நாளில் கனவு கண்டதுபோலவே அகமதி பிறந்தாள்.
 
ஆனா உங்க கனவெல்லாம் ஒரே டெரர்தான் போங்க :-)

செல்ல நாய்க்குட்டி மனசு said...

foreign ல கனவு கண்டா பதிஞ்சு வைக்க ஒரு இடம் இருக்காம்
பின்னாடி கனவு பலித்தா அங்கேயே தகவல் தெரிவிக்கணும்
நிறைய கனவுகள் பலித்தா பெரிய ஆளாய் ஆகிடலாம்
முயற்சி செய்யலாமே

அ.மு.செய்யது said...

//சில சமயம் எங்கயாவது போய்க்கிட்டு இருக்கும்போது ஒரு இடம், ஒரு சூழ்நிலையை கடக்கும் போது இது மாதிரி நமக்கு இதுக்கு முன்னாடி ஆகியிருக்கே.. எங்க எங்க அப்படின்னு தோணும். யோசிச்சு பார்த்தா அது மாதிரி ஒன்னு கனவா வந்து போயிருக்கும்.//

இது மூளையில் நிகழும் ஒருசொவித பிரதிபலிப்பு ஆகும்.இதற்கு தேஜா உ என்று சொல்வார்கள்.

சிக்மண்ட் ஃபிராய்டு ரேஞ்சுக்கு ஒரு சைக்காலஜி பதிவு போட்ருக்கீங்க...கனவுகள்....ஜனகராஜ்கு மாதிரி
சில கனவுகள் பலிச்சா என்ன ஆவுறது ??

மாதவராஜ் said...

எங்கம்மாவும் இது போல கனவு கண்டு பாடா படுத்துவாங்க. சென்சிட்டிவ்வானவங்களுக்கு இப்படி கனவு வரும்னு கேள்விப்பட்டு இருக்கேன். அதை இப்படி எழுத முடியும்னு இப்பத்தான் பார்க்கிறேன்.

கலை said...

அடடே, நீங்களும் நம்ம இனம்தானா? நான் காணும் கனவுகளை சொல்லி மாளாது. சமீபத்திய கனவு எழுதியிருக்கேன். முடிந்தால் அங்கேயும் பாருங்க :).

நட்புடன் ஜமால் said...

எனக்கு இரண்டு கனவுகள் அப்படியே தெரிந்த ஞாபகம் இருக்கு.

அதுல ஒன்னு செம டெரர் ...

Bee'morgan said...

ஹைய்யோ.. அமித்தும்மா.. ஏன் இப்படி ஒரு டெரர் பதிவு.. :(