1. அன்புக்குரியவர்கள்: அம்மா, அப்பா, அக்கா, மற்றும் நண்பர்கள்
2. ஆசைக்குரியவர்(கள்): இருபது வயதிலிருந்து இறுதிநாள் வரை அமித்து அப்பா & இரண்டு வருடம் முன்னர் ஆசையில் பாதியை வாங்கிக்கொண்ட அமித்து.
3. இலவசமாய் கிடைப்பது: இலவசமா, அப்படின்னா, அட்வைஸைக்கூட கன்சல்டன்சியா மாத்தி பணம் புடுங்கறாங்க பய புள்ளைக :) ஆனா ஒன்னு, ப்லாக் ஆரம்பிக்கிறது முற்றிலும் இலவசம், அதிலும் நான் ஆரம்பித்தது
ஆபிஸ் கம்ப்யூட்டர், ஆபிஸ் நெட், ஆபிஸ் சேர், ஆபிஸ் ஏசி அதிலும் முக்கியமாய் ஆபிஸ் சம்பளம்
4. ஈதலில் சிறந்தது: ஆங்கோர் இயலாதவர்க்கு எழுத்தறிவித்தல்
5. உலகத்தில் பயப்படுவது: டெர்ரரான கனவுகளுக்கு
6. ஊமை கண்ட கனவு: .............. (இப்படித்தான் இருக்கும் போல)
7. எப்போதும் உடனிருப்பது: அலைக்கழிக்கும் மனது
8. ஏன் இந்த பதிவு: என் வானம் அமுதா அவர்களின் அன்பான அழைப்பால்...
9. ஐஸ்வர்யத்தில் சிறந்தது: ஐஸ்வர்யமே வேணாங்க, நல்ல உடல்நிலையும், மனநிலையும் வாழ்நாள் வரைக்கும் இருந்தா போதும்.
10. ஒரு ரகசியம்: ரகசியத்த எப்படி வெளியில சொல்றது.
11. ஓசையில் பிடித்தது: ங்ங்கா.... ங்ங்கா....
12. ஔவை மொழி ஒன்று: மொழிவது மறுக்கின் அழிவது கருமம்
13. (அ)ஃறிணையில் பிடித்தது: சிமெண்ட் தரையும், தலையணையும்
1. A – Available/Single? எதுக்கு இந்தக் கேள்வி
2. B – Best friend? : சுதாவின் மறைவிற்குப் பிறகு எனக்கு நானே
3. C – Cake or Pie?: கேக்
4. D – Drink of choice? : தாகம் அடக்கும் தண்ணீர்
5. E – Essential item you use every day? : உடையில் ஆரம்பித்து செருப்பு வரை அன்றாடம் உபயோகிப்பது அனைத்துமே முக்கியமானதுதான்.
6. F – Favorite color? : கருப்பு மற்றும் வெளிர்நிறங்கள்
7. G – Gummy Bears Or Worms?: ...........
8. H – Hometown? - செஞ்சி பிறகு சென்னை
9. J – January or February? செப்டம்பர்
10. K – Kids & their names? அமிர்தவர்ஷினி
11. L – Life is incomplete without? – அமிர்தவர்ஷினி
12. M – Marriage date? ஆனி 03
13. N – Number of siblings? அம்மாவான அக்கா ஒருவள்
14. O – Oranges or Apples? ஆரஞ்சு
15. P – Phobias/Fears? டெர்ரர் கனவுகள்
16. Q – Quote for today? : விரும்பியது கிடைக்கவில்லையென்றால் கிடைத்ததை விரும்பு (இன்றுமட்டுமல்ல, எப்போதும்)
17. R – Reason to smile? : காரணம் கர்த்தாவெல்லாம் தேவையில்லை, எங்கயாவது யாராவது நல்ல சோக்கு சொன்னாங்கன்னா கூடி நின்னு கும்மிதான் :)))
18. S - Season : : இழுத்துப்போர்த்திக்கொண்டு தூங்கச் சொல்லும் குளிர்காலமும், சூடாக நொறுக்குத்தீனியை தின்னச்செய்யும் மழைக்காலமும்
19. T – Tag 4 People? : யாரும் இல்லப்பா (யாம் பெற்ற துன்பம் பெறக்கூடாது இந்த வலைப்பூவகம்)
20. U – Unknown fact about me? தெரியவரும்போது தெரிவிக்கிறேன்
21. V – Vegetable you don't like? முருங்கைக்காய்
22. W – Worst habit? மூக்கு மேல் கோபம் (கொஞ்சம் குறைத்திருக்கிறேன் :)
23. X – X-rays you've had? மார்பு
24. Y – Your favorite food? மிளகாய் கிள்ளி சாம்பார், மீன் வறுவல்
27 comments:
//ஆபிஸ் கம்ப்யூட்டர், ஆபிஸ் நெட், ஆபிஸ் சேர், ஆபிஸ் ஏசி அதிலும் முக்கியமாய் ஆபிஸ் சம்பளம்//
;;))
யாம் பெற்ற துன்பம் பெறக்கூடாது இந்த வலைப்பூவகம்)
என்ன ஒரு நல்ல எண்ணம். ஆயில்யன் பாஸ் எங்கிருந்தாலும் முத்துலெட்சுமியுடன் சேர்ந்து செயர்க்குழு கூட்டி சீக்கிரம் பாராட்டுவிழா, பெயர்சூட்டுவிழா(அதான் பட்டபேரு) எல்லாத்துக்கும் ஏற்பாடு செய்யுங்க.
//5. உலகத்தில் பயப்படுவது: டெர்ரரான கனவுகளுக்கு
6. ஊமை கண்ட கனவு: .............. (இப்படித்தான் இருக்கும் போல)//
உங்க கனவுகளைப்பத்தி பதிவு போடுங்க அமித்து அம்மா. உங்க வார்த்தகள்ல கேக்க ஆசையா இருக்கு.
//"இதுவரை சொல்லாதது"//
அதான் சொல்லிட்டீங்களே! :)
//ஆபிஸ் கம்ப்யூட்டர், ஆபிஸ் நெட், ஆபிஸ் சேர், ஆபிஸ் ஏசி அதிலும் முக்கியமாய் ஆபிஸ் சம்பளம்//
உங்களோ இந்த நேர்மை எங்களுக்கு புடிச்சிருக்கு உங்க ஆபிஸ்ல சொல்லுங்க கண்டிப்பா!
//காரணம் கர்த்தாவெல்லாம் தேவையில்லை, எங்கயாவது யாராவது நல்ல சோக்கு சொன்னாங்கன்னா கூடி நின்னு கும்மிதான் :)))//
அட!
//மிளகாய் கிள்ளி சாம்பார்,//
பாஸ் ஒரு நாளைக்கு இதை பத்தி செய்முறை சொல்லிக்கொடுங்க லேப்ல செய்ய ரெடியா இருக்கேன்!
/*முற்றிலும் இலவசம், அதிலும் நான் ஆரம்பித்தது
ஆபிஸ் கம்ப்யூட்டர், ஆபிஸ் நெட், ஆபிஸ் சேர், ஆபிஸ் ஏசி அதிலும் முக்கியமாய் ஆபிஸ் சம்பளம்
*/
/*யாரும் இல்லப்பா (யாம் பெற்ற துன்பம் பெறக்கூடாது இந்த வலைப்பூவகம்)
*/
:-)))
:)
ரசித்தேன்...பல வரிகளில் சிரித்தேன்!!
/ஆனா ஒன்னு, ப்லாக் ஆரம்பிக்கிறது முற்றிலும் இலவசம், அதிலும் நான் ஆரம்பித்தது
ஆபிஸ் கம்ப்யூட்டர், ஆபிஸ் நெட், ஆபிஸ் சேர், ஆபிஸ் ஏசி அதிலும் முக்கியமாய் ஆபிஸ் சம்பளம்
/
உங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்கு, பாஸ்!! :)))
/5. E – Essential item you use every day? : உடையில் ஆரம்பித்து செருப்பு வரை அன்றாடம் உபயோகிப்பது அனைத்துமே முக்கியமானதுதான்/
என்னா ஒரு சிந்தனை!! த்சொ...த்சோ!!! :))
/24. Y – Your favorite food? மிளகாய் கிள்ளி சாம்பார், மீன் வறுவல்/
பாஸ்...மிளகாயை ஏன் பாஸ் கிள்ளறீங்க...பாவம்..! அப்புற்ம் ஒரு டவுட்...அதைக் கிள்ளிட்டு சாம்பார் பண்ணா போதுமா..மிளகாயை போட வேணாமா பாஸ் சாம்பார்லே !?!
/ஆயில்யன் said...
//மிளகாய் கிள்ளி சாம்பார்,//
பாஸ் ஒரு நாளைக்கு இதை பத்தி செய்முறை சொல்லிக்கொடுங்க லேப்ல செய்ய ரெடியா இருக்கேன்!/
நிஜமாவே அப்பாவிதான் பாஸ் நீங்க..இதெல்லாம் சொல்லிக்கொடுப்பாங்களா!! சரவணபவனுக்குப் போங்க - சாம்பார் இல்லன்னா சாம்பார் சாதமாச்சும் வாங்குங்க..அது ரொம்ப கஷட்ம்னா பக்கத்து வீட்டுலே கொஞ்சம் சாம்பாரை
கடனா வாங்குங்க..வீட்டுக்கு வாங்க..
மறக்காம பச்சை மிளகாயை எடுத்து பக்கத்துலே வச்சிட்டு மிளகாயை அப்போபோ கிள்ளிடுங்க..இப்போ சாப்பிடுங்க..சிம்பிள்!! அமித்து அம்மா, உங்க வேலையை மிச்சம் பண்ணியிருக்கேன்!! :))))
//ஆபிஸ் கம்ப்யூட்டர், ஆபிஸ் நெட், ஆபிஸ் சேர், ஆபிஸ் ஏசி அதிலும் முக்கியமாய் ஆபிஸ் சம்பளம்//
ellorum seirathuthan irunthalum ippadiya unnmaiyai pottu udaikirathu
//6. ஊமை கண்ட கனவு: .............. (இப்படித்தான் இருக்கும் போல)//
இப்படித்தான் இருக்கும்போல உங்க குசும்பு...
ஒரு டெர்ரரா தான் பதிவு இருக்கு
//ஆரம்பிக்கிறது முற்றிலும் இலவசம், அதிலும் நான் ஆரம்பித்தது
ஆபிஸ் கம்ப்யூட்டர், ஆபிஸ் நெட், ஆபிஸ் சேர், ஆபிஸ் ஏசி அதிலும் முக்கியமாய் ஆபிஸ் சம்பளம்//
நம்மள மாதிரி ஊருல நெறைய பேரு இருக்காங்க போல :-)
12. M – Marriage date? ஆனி 03
அட.. ஜூன் 17 ஆ?? :-) காலண்டர் பார்க்காமலே செல்றேன்.
நிறைய தெரிந்து கொண்டேன்...
மூக்கு மேல கோவமா....இனிமே உசாரா இருக்கணும் போல...
/ மிளகாய் கிள்ளி சாம்பார்/
ஹையோ! சூப்பருங்க. இந்த வார்த்தையச் சொன்னதுக்கு நன்றி.
அப்படியே ஊர் நினைவு வந்துவிட்டது.
கிள்ளிப் போட்ட சாம்பாருன்னே பேர் இதுக்கு.தெரியாதவங்களுக்கு சிரிப்பா இருக்கலாம். இத்தனைக்கும் அந்த சாம்பார்ல ஒன்னுமே இருக்காது. ஆனா, எனக்கு ரொம்பப் புடிக்கும்.
இயல்பான வெளிப்பாடுக்கு பாராட்டுக்கள்.
12. M – Marriage date? ஆனி 03
-----------------
அதான் ஆணி ஜாஸ்தியா பாஸ்
13. N – Number of siblings? அம்மாவான அக்கா ஒருவள்]]
நெகிழ்ந்தேன் சகோதரி.
ரொம்ப நல்ல நகைசுவையுடன் எழுதி இருக்கீங்க..வாழ்த்துக்கள்..
அன்புடன்,
அம்மு.
////ஐஷ்வர்யமே வேணாம் உடல் நலமும் மன நலமும் போதும்//
//
சரியா சொன்னீங்க அமித்து அம்மா..
அன்புடன்,
அம்மு.
//மொழிவது மறுக்கின் அழிவது கருமம்
இது மட்டும் புரியலை.
ஒரே தொடர் மழையா இருக்கே! :))
//. ஐஸ்வர்யத்தில் சிறந்தது: ஐஸ்வர்யமே வேணாங்க, நல்ல உடல்நிலையும், மனநிலையும் வாழ்நாள் வரைக்கும் இருந்தா போதும்.//
உண்மை அமித்து அம்மா!!
ரசித்தேன்!!
//விரும்பியது கிடைக்கவில்லையென்றால் கிடைத்ததை விரும்பு (இன்றுமட்டுமல்ல, எப்போதும்)//
ஈசியா சொல்லிட்டீங்க...ஆனா...ரொம்ப கஷ்டம்....
ரசித்தேன்!
குறிப்பாக:
//எப்போதும் உடனிருப்பது: அலைக்கழிக்கும் மனது//
//ஈதலில் சிறந்தது: ஆங்கோர் இயலாதவர்க்கு எழுத்தறிவித்தல்//
3-vathu pathil......
niraya sirichchenga:)
aani.3-(hey ennoda birthday date nga....)june 17 maarave maaraathu!!
appuram 17-vathu pathil...lil
nalla joke-ngirathuthaan reason:)
superb...!!
Post a Comment