கனவாய்ப்போனதில்
பாவாடை சட்டை சிறுமியாய்
முன்பு குடியிருந்த வீட்டுக்கு
போகிறேன்
எல்லோரும் தன் பழைய வயதோடே..
எங்கோ ஒரு உணவகத்தில்
பிடித்த உணவை உண்கிறேன்
முகம் தெரியாத பலரோடு
சிரித்து, பேசி, பயந்து, ஓடி...
கோவிலில் இருக்கும்
பித்தளை விக்ரகங்களெல்லாம்
உயிர்ப்போடு
பேசி சிரிக்கின்றன
என்னோடு
மரித்த மாமா
வந்தமர்ந்து
சாப்பிட்டுக்கொண்டே பேசுகின்றார்
தன் தோரணை மாறாமல்.
இறந்தவள்
தவறாமல் வந்து
சொல்லிக்கொண்டே இருக்கிறாள்
தான் உயிரோடு இருப்பதாக
அப்பாவும் வருகிறார்
அதிசயமாக.
நெருங்கியவர்களின் மரணம் போல
ஒன்றைக் கண்டு
வியர்த்து விதிர் விதிர்த்து
நீரருந்தி
நெற்றியில் விபூதி இட்டு
மீண்டும்
உறங்கிப்போனதை
தவிர்த்துப் பார்த்தால்
மற்றதெல்லாம்
கனவாய் போனதில்
வருத்தம்தான்.
முதற்காதல்
மணற்துகள்களை
நகக்கணுக்களிலிருந்து
உதறி விட்டபிறகும்
கடற்கரை வெளியில்
மணற்வீடு கட்ட
தோண்டிய போது
கையில் பட்ட
ஈரம்
இன்னும் காயாமலே
இருக்கிறது
மனதுக்குள்.
22 comments:
\\கையில் பட்ட
ஈரம்
இன்னும் காயாமலே
இருக்கிறது
மனதுக்குள். \\
அருமை ...
இரண்டாவது(ம்) சூப்பர்:)
நல்லாயிருக்குது அமித்து அம்மா!
இரண்டு கவிதைகளுமே அருமை.
/*மரித்த மாமா
வந்தமர்ந்து
சாப்பிட்டுக்கொண்டே பேசுகின்றார்
தன் தோரணை மாறாமல்
*/
என்னவென்று சொல்லுவது?
/*நெருங்கியவர்களின் மரணம் போல
ஒன்றைக் கண்டு
வியர்த்து விதிர் விதிர்த்து
நீரருந்தி
நெற்றியில் விபூதி இட்டு
மீண்டும்
உறங்கிப்போனதை
தவிர்த்துப் பார்த்தால்
மற்றதெல்லாம்
கனவாய் போனதில்
வருத்தம்தான்*/
அருமையாகக் கூறினீர்கள்...
அருமை அமித்து அம்மா.
அசத்தல்!
கனவுகளைப் பற்றி இதே உணர்வுகள் எனக்கும் உள்ளன. நீங்கள் மிக அழகாக சொல்வடிவம் தந்துள்ளீர்கள். நன்றி!
இரண்டாவது கவிதை(யும்) மிக அற்புதம். கொடுங்கள் கையை!
முதல் கவிதை ரசித்துப் படித்தேன்...
கனவுகள் பெரும்பாலும் ஒன்றுகொன்று தொடர்பு இல்லாமல்தான் தோன்றும்!
ஆனால்! அதை ஒரே கவிதையாக்கி நீங்கள் சொல்லி இருக்கும் விதம் ஒரு பிரமிப்பை
ஏற்படுத்துகிறது! ''royal tuch'' உங்கள் சிறந்த படைப்புகளில் இதுவும் ஒன்று!
இரண்டாவது கவிதையும் மிக அருமைதான்! ஆனால்! முதல் கவிதை இரண்டாவதை பின்னுக்கு தள்ளி விடுகிறது!!
//கடற்கரை வெளியில்
மணற்வீடு கட்ட
தோண்டிய போது
கையில் பட்ட
ஈரம்
இன்னும் காயாமலே
இருக்கிறது
மனதுக்குள்.//
வெகு அழகு...
மணற்துகள்களை
நகக்கணுக்களிலிருந்து
உதறி விட்டபிறகும்
கடற்கரை வெளியில்
மணற்வீடு கட்ட
தோண்டிய போது
கையில் பட்ட
ஈரம்
இன்னும் காயாமலே
இருக்கிறது
மனதுக்குள்.
ரசனைமிகு கவிதை.. அழகு.
ஐயோ.. இது கனவா??? இப்படி நாம் எத்தனை முறை சொல்லியிருப்போம்.. நல்லாயிருந்தது அமித்துமா!!
முதற்காதல்.. நல்ல பீலிங்ஸான கவிதை... போன வாரம் பீச்சுக்கு போனீங்களோ??? :-)
அமித்துமா.. இரண்டு கவிதைகளையும் இரண்டு பதிகளாகவே போட்டிருக்கலாமே.. ம்ம்.. பதிவு போட ஏகப்பட்ட சரக்கு கைவசம் வச்சிருக்கீங்க போல.. அதான் ஒரே பதிவா போட்டுட்டீங்க.
இரண்டு கவிதைகளும் நல்லா இருக்கு. மிக எளிதான வார்த்தைகளில் மனதை ஈர்கின்றது வரிகள்
"மற்றதெல்லாம்
கனவாய் போனதில்
வருத்தம்..
இன்னும் காயாமலே
இருக்கிறது
மனதுக்குள். "
அழகாக வந்துள்ளன..
வாழ்த்துகள்
//வியர்த்து விதிர் விதிர்த்து//
இந்த வார்த்தை பிரயோகம் ரசித்தேன்.
//மணற்துகள்களை
நகக்கணுக்களிலிருந்து
உதறி விட்டபிறகும்
கடற்கரை வெளியில்
மணற்வீடு கட்ட
தோண்டிய போது
கையில் பட்ட
ஈரம்
இன்னும் காயாமலே
இருக்கிறது
மனதுக்குள். //
சோ கியூட்...குறைந்த வரிகளில் ஃபீலிங்ஸை ஏற்படுத்திடுச்சு..
ஒரு ஃபார்ம்ல தான் இருக்கீங்க..
அமித்து அம்மா,
விஷயங்களை அழகாக கோர்த்து கவிதையாக்கிய விதம் அருமை.. பாராட்டுக்கள்...
அருமையாக உள்ளது.
இரண்டு கவிதைகளும் அருமை.
Vow...amithummaa...இரண்டு கவிதையும் அற்புதம். வித்யா சொன்னது போல் இரண்டாவது(ம்) அருமை. கவிதாயினிக்கு வாழ்த்துக்கள்.
ரொம்ப அழகான கவிதை...
கடற்கரை வெளியில்
மணற்வீடு கட்ட
தோண்டிய போது
கையில் பட்ட
ஈரம்
இன்னும் காயாமலே
இருக்கிறது
மனதுக்குள்.
அருமை
ரசித்தேன்..
கோவிலில் இருக்கும் பித்தளை விக்ரகங்களும்,
தோரணை மாறாத மரித்த மாமாவும்,
மிக யதார்த்தமான வெளிப்பாடுகள்.அற்புதம் அமித்து அம்மா!
அமித்துக்கு ராஜா மாமாவின் அன்பை தாருங்கள்!
Post a Comment