12 May 2009

மே 10

திரு எஸ்.கே அவர்களுக்கு

நன்றி, இதை எத்தனை முறை உங்களுக்கு சொன்னாலும் தகும். நேற்றைய கருத்தரங்கு நன்முறையில் முடிந்தது. நிழலாகவே எல்லாவற்றையும் ஆரம்பித்து, அதை வெற்றிகரமாக செயல்படுத்தியும் விட்டீர்கள்.உங்களின் கருத்தாக்கத்தை செயலாக்கப்படுத்திய திரு. நர்சிம் மற்றும் சக பதிவர்கள் அனைவருக்கும் நன்றிகள் சொல்லிவிடுங்கள். எப்படி ஆரம்பித்து எப்படி முடியுமோ என்று நீங்கள் ஒரு வித பதட்டத்துடனே இருந்தீர்கள்,அதற்கெல்லாம் சேர்த்து, மிகவும் நேர்த்தியாக முடிந்தது.

....

எதையெல்லாம் இதுவரை பேச கூச்சப்படுவோமோ, அதையெல்லாம் ஒரு விவாதத்திற்குள் கொண்டு வந்தபின், தயக்கம் தயக்கமில்லாமல் வெளியேறிவிட்டது.

டாக்டர் ஷாலினி ஆரம்பிக்கும் போதே, உங்களை விளித்துத்தான் தன் உரையை ஆரம்பித்தார். மிகவும் பயனுள்ள தகவல்கள், டாக்டர் ருத்ரன் பேசியது, இண்ட்ராக்‌ஷன் செஷன் இதெல்லாம் என்னை மிகவும் கவர்ந்தது. வருகை தந்து, புரிதலை ஏற்படுத்திய உங்கள் இருவருக்கும் நன்றிகள் டாக்டர்ஸ்.

பெண் பதிவர்களில், முல்லை, தீபா, வித்யா, உமாசக்தி, கிருத்திகா, ரம்யா, ரம்யாவின் அக்கா இவர்களெல்லாம் வந்திருந்தார்கள். நான் என்னுடைய அலுவலக தோழியுடன் வந்திருந்தேன்.

ஆண் பதிவர்கள் நிறைய பேர் இருந்தார்கள். அவர்களில் நிறைய பேரை அவர்களின் ஃப்ரொபைல் போட்டோ வைத்து அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது. திரு. அப்துல்லா, திரு. ஆதி, திரு. கேபிள் சங்கர், திரு. பைத்தியக்காரன் (உங்க உண்மையான பெயர் தெரியலீங்க)இவர்களுக்கெல்லாம் ஒரு ஹலோ சொல்ல முடிந்தது. திரு. ஆதிமூல கிருஷ்ணனிடம், ரமா எப்படியிருக்காங்க என்று கேட்க விழைந்து பின் கேட்காமலேயே வந்து விட்டேன். பதிவர் உழவன் போலவே ஒருவரைப் பார்த்து, ஹலோ சொல்ல நினைத்து பின் சொல்லமலேயே கடந்து விட்டேன். அவர் நீங்களா இருந்தா, சாரி உழவன். பதிவர் திரு. ஜமால் வர மிகவும் பிரியப்பட்டு, கடைசி நிமிடத்தில் உடல் நிலை சரியில்லாத காரணமாக வர முடியாமல் போய்விட்டது. பின்னர் திரு. அ.மு. செய்யது, கடைசி வரைக்கும் உங்கள் அக்காவை பார்க்க முடியவில்லை, வந்திருந்தார்களா?

நேரமின்மை காரணத்தால், சீக்கிரமே ஜூட் விட நேர்ந்துவிட்டது. மேலும் பன்க்ச்சுவாலிட்டி கீப் அப் செய்த முதல் நிகழ்ச்சி இதுதான், 4.05க்கு ஆஜராகி, பின் திரும்ப, உமாவும், வித்யாவும் அடுத்தடுத்த ஆட்டோவில் வ்ந்து இறங்கினார்கள்.
வித்யாகிட்ட கேட்காமல் விட்ட கேள்வி: அடிக்கடி ஆட்டோ வரும் ஆட்டோ வரும்னு உங்களுக்கு கமெண்ட் போடறாங்க. ஆனா நீங்களே ஆட்டோல வந்துட்டீங்களே வித்யா, ஆட்டோல வந்துட்டீங்களே.!!

திரு. நர்சிம், நிகழ்ச்சி நல்லபடியா முடியறவரைக்கும் நின்று கொண்டே இருப்பதாக வேண்டிக்கொண்டாரோ என்னவோ தெரியவில்லை, கடைசி வரைக்கும் ஒரு டென்ஷனாகவே அங்குமிங்கும் நின்று கொண்டிருந்தார். சார், ஹாட்ஸ் ஆஃப் டூ யு அண்ட் யுவர் டீம்.

இரு செலிபிரிட்டிகளுக்கும் வழங்குவதற்காக. ரம்யா பொன்னாடைகள் வாங்கி வந்திருந்தார், திரு. பத்ரி, அவர்களிருவருக்கும் புத்தகங்களை பரிசாகத் தந்தார். காபி, ஸ்வீட், காரம் என்று அவ்வப்போது வழங்கி அமர்க்களப்படுத்திவிட்டார்கள்.

அங்கு நடந்து உரையாடல்களை பதிந்திருக்கிறார்கள். அனைவரும் பயன்பெறுவதற்காக வலையேற்றுவதாக உத்தேசம் என கிழக்கு பதிப்பகம் திரு. பத்ரி சொன்னார். நன்றி சார்
அதன் மூலம் அங்கு நடந்தவற்றை நீங்கள் கேட்கமுடியும், ஆடியோ வடிவத்தில்.

5 மணிக்கு ஆரம்பித்த கூட்டம் 8 மணிக்கு இனிதே முடிந்தது.

விரியத்துவங்கும் குழந்தைகளின் உலகத்தை ஒரு புரிதலோடு விரிவாக்க, துவக்கப்புள்ளி வைத்த சிதறல்கள் தீபா, புள்ளியை வட்டமாக்க முதல் முயற்சி எடுத்த எஸ்.கே,
வட்டத்தை நேர்த்தியாக வரைந்து முடித்த திரு. நர்சிம் மற்றும் சக பதிவர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

நட்புடன்
அமித்து அம்மா.

18 comments:

Anonymous said...

நடந்தவைகளை நேர்த்தியாக விவரித்திருக்கிறீர்கள். நன்றி.

கார்க்கிபவா said...

இந்தப் பதிவுக்கு என் கண்டனங்களை தெரிவித்து வெளிநடப்பு செய்கிரேன் :))

சந்தனமுல்லை said...

உங்களை நேரில் சந்தித்ததில் மகிழ்ச்சி...:-)

Unknown said...

ஆமாங்கோவ்...!!! அந்த உரையாடல... நானுமும் டோண்டூ சாரோட பதிவுல படுச்சேன்...!! நெம்ப அருமையான கருத்தரங்கம்...!!!நெம்ப விசியங்கள தெருஞ்சிக்க முடுஞ்சிது...!!!!

எங்கள மாதிரி நெம்ப தூரம் இருக்குரவிங்கோ வர முடியலனாளுமும் ..... இப்புடி பதிவுல படுச்சு தெரிஞ்சுக்க முடியுது...!!! நெம்ப தேங்க்ஸ்ங்கோ அம்முனி...!!!!!



வாழ்க வளமுடன்....!!!!!!

குடந்தை அன்புமணி said...

உங்கள் பாணியில் விவரித்திருக்கிறீர்கள். முழுவதுமாக அறிந்துகொள்ள ஆடியோவை எதிர்பார்த்து... இளம் தந்தையான நான் காத்திருக்கிறேன்...!

Vidhya Chandrasekaran said...

உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி அமித்து அம்மா. அடுத்த மீட்டிங் நாம பேசினா மாதிரி கலக்கிடலாம். நிகழ்ச்சியும் பயனுள்ளதாக இருந்தது. நண்பர்களுக்கு வாழ்த்துகளும் நன்றியும்.

அப்துல்மாலிக் said...

நல்லபடியாக நடந்து முடிந்ததில் முழு திருப்தி

இதற்காக உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்

விரைவில் மொத்த அப்டேட்ஸை ஆடியோ வடிவிலோ எழுத்து வடிவிலோ எதிர்ப்ப்பார்த்துக்காத்துக்கோண்டிருக்கிற பல்லாயிரக்கணகான பிளாக்கரில் நானும் ஒருவன்..

"உழவன்" "Uzhavan" said...

அமித்து அம்மா.. நான் தான் உழவன்.. நீங்கள் வெளியேறும் தருவாயில் என்னைப் பார்த்தீர்களோ?? எனக்கும் நீங்கள் தான் அமித்து அம்மாவா என்ற ஐயம் வேறு. அதனால்தான் என்னாலும் பேச இயலாமல் போய்விட்டது. மறுநாள் டோண்டு சார் பதிவைப் பார்த்தபின்புதான் நீங்களும் வந்திருந்தீர்கள் என்று உறுதியாகத் தெரிந்தது. சந்திக்க முடியாமல் போனது துரதிஷ்டம்தான். இன்னொரு முறை வாய்ப்பு கிடைக்காமலா போய்விடும்? அப்போது சந்திப்போம். நானும் இப்போதுதான் இக்கலந்துரையாடலைப் பற்றி பதிவிட்டேன்.

அன்புடன்
உழவன்

Deepa said...

நேர்த்தியான பதிவு. நன்றி அமித்து அம்மா.

//வித்யா said...
உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி அமித்து அம்மா. அடுத்த மீட்டிங் நாம பேசினா மாதிரி கலக்கிடலாம்.//

Repeat!

Poornima Saravana kumar said...

நல்ல பகிர்வு அமித்து அம்மா:)

கார்க்கிபவா said...

பிறந்த நாள் வாழ்த்துகள் மேட்ட்ட்ட்டம்...

anujanya said...

இன்னிக்கு தான் பாத்தேன் உங்க பதிவை. நல்லா எழுதி இருக்கிறீர்கள்.

அப்புறம், பிறந்த நாள் வாழ்த்துகள் சகோ.

அனுஜன்யா

குடந்தை அன்புமணி said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அமிர்தவர்ஷினி அம்மா!!

ராமலக்ஷ்மி said...

அருமையான தொகுப்பு.

அத்தனை பேருக்கும் பாராட்டுக்கள்.

பிறந்தநாள் காணும் உங்களுக்கு என் இனிய நல்வாழ்த்துக்கள்!

Unknown said...

நேர்த்தியான பதிவு. நன்றி அமித்து அம்மா.

//வித்யா said...
உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி அமித்து அம்மா. அடுத்த மீட்டிங் நாம பேசினா மாதிரி கலக்கிடலாம்.//

Repeat!

Repeat !

Many Many Happy Returns of The Day dear dear dearmost Amithummaa...இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

நர்சிம் said...

// கார்க்கி said...
பிறந்த நாள் வாழ்த்துகள் மேட்ட்ட்ட்டம்...
//

?????

SK said...

நன்றி அமித்து அம்மா பதிவுக்கு

"உழவன்" "Uzhavan" said...

அமித்து அம்மாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

(தகவல் தந்த சந்தனமுல்லைக்கு நன்றி)

வாழ்த்துக்களுடன்,
உழவன்