22 May 2009

அமித்து அப்டேட்ஸ்

பொதுவாக அமித்துதான் எங்களுக்கு அலாரமே, சாதாரணமாய் எழும்போது ஒரு கத்தல் இருக்கும்.
கடந்த நாட்களில் ஒருநாள் அமித்து விழிப்பதை காணக் கொடுத்துவைத்தது. எழுவதற்கு முன்னர் ஒரு சின்னப் புரளல், பின்பு ஒரு சிணுங்கல், அப்புறம் மெதுவாக இமை பிரித்தாள்.பின்பு சுற்றும் முற்றும், மேலே ஓடிக்கொண்டிருந்த ஃபேன், ஃஷெல்பில் இருந்த பொம்மை, புக் இப்படி ஒவ்வொன்றாய் அவளின் பார்வை போனது. கொஞ்சம் நேரம் கழித்து அப்பா என்றாள். பின்பு என்னை நோக்கி எச்சோ என்றாள். எங்களிருவரிடமுமிருந்து பதிலில்லை என்றபின் அவளே ஆயா (எ)ங்க, தாத்தா எ)ங்க, அப்பு எ)ங்க என்று ஆரம்பித்து அவளே பதில் சொல்லிவிட்டாள் கீழ்ழே. பின்பு அவளின் அப்பாவை எழுப்பி அப்பா, கீழ்ழே என்ற கத்தல் தொடங்கியது.

அடிக்கடி ஃப்ரிட்ஜை திறக்கச் சொல்கிறாள். அம்மா பிட்ஜூ பிட்ஜூ என்கிறாள், நாம் தேவைக்காக திறக்கும்போது ஓடிவந்து நமக்குமுன் உள்ளே புகுந்து உள்ளிருக்கும் பண்டங்களையெல்லாம்
வெளிநடக்கச் செய்கிறாள். அப்படித்தான் ஒருநாள் காலையில் ம்மா சாக்கி என்றாள், சாக்லேட் இல்லம்மா, காலி என்றேன். காட்டு என்றாள், அவளைத்தூக்கி வழக்கமாக சாக்லேட் வைக்கும் இடத்தை காட்டினேன்.
பின்பு மாம்பழம் இருந்ததை வெளியெ எடுக்கச்சொன்னாள். நான் எடுத்து கொடுத்துவிட்டு சமையலறைக்கு சென்றேன். பின்னாடியே வந்து, ம்மா, கத்தி (எ)ங்க என்றாள். அவளின் ஆயா கத்தி எதுக்கும்மா உனக்கு
என்றார்கள். அதற்கு பழ்ழம் என்றாள். பின்பு ஒரு பொம்மை கத்தியை கொடுத்தவுடன் தான் மேடம் சமையலறையை விட்டு நகர்ந்தார்கள்.

ஞாயிற்றுக்கிழமை சமைப்பதற்காக மீனை சுத்தம் செய்து வைத்திருந்தேன். அது அமித்துவின் கண்ணில் பட்டுவிட்டது. அடிக்கடி அதனருகில் போய் போய் பார்த்துவிட்டு வந்தாள். ஒருமுறை பார்த்துவிட்டு
வந்தபின் அவளின் அப்பாவிடம், அப்பா, (உ)ள்ள மீன், மீன் என்றாள். அவளின் அப்பா சரிம்மா என்றார். பிறகும் போய் பார்த்துவிட்டு வந்தாள். நான் வர்ஷினிம்மா மீன் என்ன செய்யுது என்றேன். சிறிது நேரம்
கழித்து அப்பா மீன் ஊங்குது என்றாள், எப்படி தூங்குதும்மா என்றதற்கு தன் உடம்பையே ஒரு பக்கம் சாய்த்து, அதனை விட அவளின் தலையை மேலும் சாய்த்து மீன் தூங்குகிறது என்றாள்.
அவள் செய்ததைப் பார்த்து விழிகள் விரிய பார்த்து நின்றோம் நானும் அவளின் அப்பாவும்.

காற்று நிரப்பியிருந்த ஏரோப்ளேன் பொம்மை ஒன்றை சபரி வாங்கி கொடுத்திருந்தான் வர்ஷினிக்கு, இரண்டு நாள் கூட ஆகவில்லை, வர்ஷினி அதை கடித்து காற்று இறக்கிவிட்டதாக புகார் வந்திருந்தது.
கீழ்வீட்டு ஆச்சி ஒருநாள், உன் பொண்ணு என்ன செஞ்சா தெரியுமா, அந்த ஏரோப்ளேன் பொம்மையிலிருந்து காத்த எறக்கிட்டா. இரு நானே அவளை அதை கேக்கறேன் என்று, வர்ஷினி, ஏரோப்ளேன் காத்து
எறக்கினது யாரும்மா என்றார்கள், அதற்கு அவள் பாப்பா என்றாள். அதற்கு ஆச்சி, பாப்பாவா ? என்றார்கள். அதற்கு அமித்துவோ, ஆம்மா, நான்னு, பாப்பா என்றாளே பார்க்கனும். சிரிப்படங்க வெகுநேரமாயிற்று.

பேப்பர் எப்பம்மா வந்துது? அமித்துவின் பதில் காலீல.
அப்பா இந்தங்கோ பேப்பேர் எதையாவது கொண்டு போய் யாரிடமாவது கொடுக்கச் சொன்னால், அவர்கள் அதை வாங்கும் வரை இ)ந்தங்கோ இ)ந்தங்கோ இதே ரிப்பீட் ஆகும்.

பாப்பா பேர் என்னம்மா? அர்ச்சினி.

நான் ஆபிஸ் போனவுடன், இப்போதெல்லாம் அவளின் பாட்டியிடம் ஆயா, எச்சோ (எ)ங்க, எச்சோ (எ)ங்க என்று அடிக்கடி விசாரிப்பு நடக்கிறதாம். யாராவது உன் அம்மா எங்க, அப்பா எங்க என்று கேட்டாள், ஆப்பீச் என்று பட் டென பதில் வருகிறதாம்.

அமித்துவுக்கு பகல் நேர தூக்கம் ரொம்பவும் கம்மி, லேசில் தூங்க மாட்டாள், இல்லையென்றால் நேரங்கெட்ட நேரத்தில் தூங்கி சரியாக சாப்பிடமாட்டாள். இதனால் அவளை தூங்க வைக்க வேண்டுமென்றால் உள்ளே கொண்டு படுக்க வைத்து, கதவை சாத்திவிட்டு, வெளிய பூச்சிகாரன் வந்திருக்கிறான் என்றால் தான் கொஞ்சம் தூங்குவாள். இது கொஞ்சநாளாக போய்க்கொண்டிருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை அதையே செய்ய முற்பட படுத்திக்கொண்டிருந்த நான் வர்ஷினி கதவை சாத்திட்டு வா, தூங்கலாம் என்றேன். கதவருகே விளையாடிக்கொண்டிருந்த அவளும் கதவை சாத்தினாள், இரண்டு அடி என்னை நோக்கி வந்தவள், மீண்டும் போய் கதவை திற்ந்து ஊச்சி ஆரா, ப்போ, போ என்று சொல்லிவிட்டு மறுபடியும் கதவை சாத்தினாள். நேற்று இரவு அவளுக்கு நன்றாக தூக்கம் வந்துவிட்டது, தூங்கும் போது நடுவில் அவளாகவே அரைக்கண்ணை திறந்து ஊச்சி ஆரா ப்போ என்றுவிட்டு என்னைப் பார்த்து சிரித்தாள். என்னத்த சொல்ல?

நேற்று சாயந்திரம் அமித்துவின் அப்பா சீக்கிரம் வந்துவிட்டதால், அவர் அவளை பைக்கில் முன்னர்
உட்கார வைத்துக்கொண்டு, ரெயில்வே ஸ்டேஷனுக்கு என்னை அழைத்துப்போக வந்திருந்தார்கள். அமித்துவை குறித்த நேரத்துக்கு முன்னரே பார்த்த சந்தோஷத்தில் அவளை அங்கேயே கொஞ்சிக்கொண்டிருந்தேன், அவளோ முதலில் என்னைப் பார்த்து குஷியாகி சிரித்து விட்டு, பின்னர் ம்மா, போ, போ என்றாள், நான் எங்க என்றேன். பின்னானி பின்னானி போ என்று அவளோட சின்னக் கையை பின்னோக்கி காண்பித்தாள்.
ம்ஹூம், அம்மா சொல்லி கேட்காத பொண்ணெல்லாம், பொண்ணு சொல்லி கேட்குற அம்மாவாகியாச்சுன்னு நெனச்சுகிட்டே பின்னாடி உட்காந்தேன்.

24 comments:

Kovilpatti Anandhan said...

very nice narration. made me think about my son... ( He is 3 1/2 yrs now...)...

Best wishes for your baby...

கார்க்கிபவா said...

அமித்து பெரியவள் ஆனவுடன் இதையெல்லாம் படிக்க கொடுங்க.. அவ்ளோ அருமையா இருக்கு..

/அம்மா சொல்லி கேட்காத பொண்ணெல்லாம், பொண்ணு சொல்லி கேட்குற அம்மாவாகியாச்சுன்னு நெனச்சுகிட்டே பின்னாடி உட்காந்தேன்//

கிகிகி..

துளசி கோபால் said...

ச்சோஓஓஓஓஓஓஓ ஸ்வீட் பாப்பா.

நட்புடன் ஜமால் said...

\\தன் உடம்பையே ஒரு பக்கம் சாய்த்து, அதனை விட அவளின் தலையை மேலும் சாய்த்து மீன் தூங்குகிறது என்றாள்.
\\

\\இ)ந்தங்கோ இ)ந்தங்கோ \\

ச்சோ சீவீட்

Dhiyana said...

கலக்கல்..

//அம்மா சொல்லி கேட்காத பொண்ணெல்லாம், பொண்ணு சொல்லி கேட்குற அம்மாவாகியாச்சுன்னு//

எல்லார் வீட்டிலேயும் இப்படித் தானா?

Thamiz Priyan said...

ஹைய்யா.. அமித்து வேலையை ஆரம்பிச்சிட்டாங்க போல இருக்கு... ஹா ஹா ஹா வாழ்த்துக்கள்!

Anonymous said...

உலகத்திலேயே சந்தோஷமான வேலை நம் குழந்தைகளின் குறும்புகளை ரசிப்பது தான். தவற விடாமல் ரசித்து பதியுங்கள்..

சந்தனமுல்லை said...

அமித்து அசத்தறாங்க!!

//ம்ஹூம், அம்மா சொல்லி கேட்காத பொண்ணெல்லாம், பொண்ணு சொல்லி கேட்குற அம்மாவாகியாச்சுன்னு //

ஹஹ்ஹா!

சந்தனமுல்லை said...

//எப்படி தூங்குதும்மா என்றதற்கு தன் உடம்பையே ஒரு பக்கம் சாய்த்து, அதனை விட அவளின் தலையை மேலும் சாய்த்து மீன் தூங்குகிறது என்றாள். //

அழகு!!

குடந்தை அன்புமணி said...

அமித்து அப்டேட்ஸ் கலக்கல்.

SK said...

இன்னும் எங்க அம்மணி ஆரம்பிக்கவே இல்லை.. இனி தான் ஆரம்பம்..

அசத்துங்க
அமித்து :)

புதியவன் said...

//பாப்பா பேர் என்னம்மா? அர்ச்சினி.//

அழகு...

மழலை மொழியில் நனைந்தேன்...

"உழவன்" "Uzhavan" said...

அமித்து கண் முன்னால் நிற்கிறாள் :-)

மணிநரேன் said...

கலக்கல்...;)

Deepa said...

அமித்துவின் மழலை கொள்ளை அழகு! ரொம்பவும் ரசித்தேன்.

//கார்க்கி said...
அமித்து பெரியவள் ஆனவுடன் இதையெல்லாம் படிக்க கொடுங்க.. ..//

இந்தக் காரணத்துக்காகவே எனக்கும் நேஹாக் குட்டி பத்தி எழுத லேசா ஆசை எட்டிப் பார்க்கிறது! :-)

Vidhya Chandrasekaran said...

cho chweet

செந்தில்குமார் said...

அமித்து அம்மா,

உங்க பதிவ படிக்கும்போது அப்படியே அமித்து இதெல்லாம் செய்யறத கற்பனை பண்ண முடியுது... அழகான மழலை மொழி-ல பதிவு செஞ்சிருக்கறது அருமை..

எங்க ஆளு (மகன்... வயது பத்து மாதங்கள்) இப்போ தான் குட்டி குட்டி குறும்புகள் செய்ய ஆரம்பிச்சிருக்கான்... கண்டிப்பா அதுல சுவையான விஷயங்கள பதிவு செய்யறேன்..

சுத்தி போடுங்க அமித்துவுக்கு...

ஆகாய நதி said...

அமித்து அப்டேட்ஸ் சூப்பர் கலக்கல்..
அவளோட மழலையை ரசித்தேன் :)

அ.மு.செய்யது said...

கியூட்டான பதிவு ...

அமித்து வளர்ந்தவுடன் இந்த "அமித்து அப்டேட்ஸ்" பதிவுகளை ஒரு புத்தகமாக்கி, திருமணத்திற்கு சீராக கொடுத்து விடுங்கள்.

இதை விட வேறென்ன வாழ்வில் சந்தோஷம் இருக்க முடியும் ??

அமுதா said...

/*அம்மா சொல்லி கேட்காத பொண்ணெல்லாம், பொண்ணு சொல்லி கேட்குற அம்மாவாகியாச்சு..*/
:-))
அர்ச்சினி பொண்ணு க்யூட்

தமிழ் அமுதன் said...

//ம்ஹூம், அம்மா சொல்லி கேட்காத பொண்ணெல்லாம், பொண்ணு சொல்லி கேட்குற அம்மாவாகியாச்சுன்னு நெனச்சுகிட்டே பின்னாடி உட்கார்ந்தேன் .///

பொண்ணு சொல்லி கேக்குற
அம்மாக்கள் மட்டும் இல்லேங்கோ அப்பாக்களும் தான்!

Thamira said...

ரசனை.! வேறு வார்த்தைகளில்லை..

விக்னேஷ்வரி said...

அமித்து நல்லா பேச ஆரம்பிச்சுட்டா. பதிவுகளோட சேர்த்து அமிதுவோட ஃபோட்டோவும் போட்டா, நாங்களும் பார்த்து மகிழ்வோம்.

அம்மா சொல்லி கேட்காத பொண்ணெல்லாம், பொண்ணு சொல்லி கேட்குற அம்மாவாகியாச்சு //

அழகான எண்டிங்.

Malini's Signature said...

உங்க பதிவை படிக்கும் போது குட்டியை நேரில் பார்ப்பது போல உள்ளது :-).

/அம்மா சொல்லி கேட்காத பொண்ணெல்லாம், பொண்ணு சொல்லி கேட்குற அம்மாவாகியாச்சு/

எங்க வீட்டுலெயும் இதே தான் :-)