19 May 2009

என்ன செய்தால் தகும்?

பொய் பரப்பும் தமிழ் ஊடகங்களே!
பார்த்த மாதிரியே செய்திகளை சித்தரிக்கும் பத்திரிக்கைகளே!
அவர் இறந்திருக்கத்தான் வேண்டும் என்பதை உறுதிபடுத்துவதில் அப்படியென்ன அவா உங்களுக்கு
மற்றவரின் கற்பை களங்கப்படுத்தி பணம் சம்பாதிக்கிறீர்கள்,
வளைத்து வளைத்து ஃபோட்டோ எடுத்து மற்றவரின் மரணத்திலும் சம்பாதிக்க ஆரம்பித்தீர்கள்
ஆடு குட்டி போட்டாலும் அதில் ஒரு பரபரப்பை வெளியிட்டீர்கள்
எல்லாம் சரி

மாபெரும் தலைவனின் மரணம் என்று சொல்லியா பணம் சம்பாதிப்பீர்கள்
எந்த மொழியை நீங்கள் பணம் பண்ண முதலீடாக வைத்துக்கொண்டிருக்கிறீகளோ, எந்த மொழியில் நீங்கள் அவர் மரணம் என்றறிவித்தீர்களோ
அந்த மொழி பேசும் மக்களுக்காக போரடியவனுக்கா நீங்கள் மரணம் என்றறிவிக்கிறீர்கள்.

காசுக்கு மொழியை விற்கும் உங்களுக்கு, களம் கண்ட வீரனின் செய்தியைப் பரப்ப எந்தவொரு அருகதையுமில்லை

எங்களின் சொச்ச நம்பிக்கைகளை குழிதோண்டி புதைத்து, அதில் உங்களின் பங்காக ஒரு கைப்பிடி மண்ணையும் போட்டு போகிறீர்களே???
உங்களையெல்லாம் என்ன செய்தால் தகும்?

மாவீரனுக்கு என்றும் மரணம் இல்லை
நம்புவோம்.

22 comments:

நர்சிம் said...

நம்பிக்கை தரும் செய்திகளைத் தந்து கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றி.. இனப் போரை இழிவுபடுத்தும் விதமாக ஆங்கில,ஹிந்தி சேனல்களின் வர்ணனைகள் மிகுந்த வருத்தம் அளிக்கிறது..மதக்கலவரத்தை தூண்டுபவர்களை ‘ஜி’போட்டு விளிக்கிறது.. தாலி அறுப்பவர்களை மேடம் போட்டு விளிக்கிறது..இனப்போராளிகளை கொலைகாரக் கூட்டம் என்கிறது.. என்னத்தச் சொல்ல?

நல்ல வேளை.. சுபாஷ் சந்திர போஸை மரியாதையாகத் தான் பேசுகிறார்கள் இந்திச் சேனல்காரர்கள்..இன்று வரை.

நட்புடன் ஜமால் said...

\\எங்களின் சொச்ச நம்பிக்கைகளை குழிதோண்டி புதைத்து, அதில் உங்களின் பங்காக ஒரு கைப்பிடி மண்ணையும் போட்டு போகிறீர்களே???
உங்களையெல்லாம் என்ன செய்தால் தகும்?\\

காலங்கள் பார்த்து கொள்(ல்லு)ளும்

குடந்தை அன்புமணி said...

//மாவீரனுக்கு என்றும் மரணம் இல்லை நம்புவோம்.//


இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று காலை உரையாற்றிய ராஜபக்சே பிரபாகரன் மரணம் பற்றிய எத்தகவலும் கூறவில்லை. இனியாவது பொய்ப்புரை பரப்புபவர்கள் நம்புவார்களா?

ஜீவா said...

அமித்து அம்மா

என் மனதில் தோன்றியதை நீங்கள் பதிவாக செய்ததற்கு நன்றி.நமது மீடியாக்கள் பிணம் தின்னும் கழுகுகள் போல எல்லாவற்றிலும் ஆதாயம் தேடுகிறார்கள்.

ஜீவா said...

அமித்து அம்மா

என் மனதில் தோன்றியதை நீங்கள் பதிவாக செய்ததற்கு நன்றி.நமது மீடியாக்கள் பிணம் தின்னும் கழுகுகள் போல எல்லாவற்றிலும் ஆதாயம் தேடுகிறார்கள்.

Unknown said...

ராஜபக்சேவை இத்தகைய ஊடகவியலாளர்களின் வீட்டிற்கு அழைத்து அவர்தம் குழந்தைகளை கொதிக்கும் தாரில் அமிழ்த்து எடுத்து விருந்து படைப்போமா?அவர்தம் மனைவிமார்களின் குருதி எடுத்து பருக கொடுப்போமா?அதுதானே ராஜபக்சேவுக்கு பிடிக்கும்...

வனம் said...

வணக்கம்

\\காசுக்கு மொழியை விற்கும் உங்களுக்கு, களம் கண்ட வீரனின் செய்தியைப் பரப்ப எந்தவொரு அருகதையுமில்லை\\

ம்ம்ம்ம் நானும் வழிமொழிகின்றேன்
இராஜராஜன்

Vidhya Chandrasekaran said...

சுய விளம்பரத்துக்காக எதையும் செய்வார்கள் இவர்கள்.

Deepa said...

//காசுக்கு மொழியை விற்கும் உங்களுக்கு, களம் கண்ட வீரனின் செய்தியைப் பரப்ப எந்தவொரு அருகதையுமில்லை//

சத்தியம்

Dhiyana said...

அவர்களை என்ன செய்தால் தகும்?

விக்னேஷ்வரி said...

செய்தி உண்மை ஆகிடுச்சுனு நினைக்கிறேன். :(

ஆகாய நதி said...

நீங்கள் கூறுவது பாதியளவு சரியான சாடல் என்றாலும் இந்த விஷயத்தில் அவர்களுக்குக் கிடைத்த ஆதாரங்களைக் கொண்டே மீடியாக்கள் கூறியதாக நான் எண்ணுகிறேன்...

இப்போது அதுவும் உண்மையாகி விட்டது...

ஒரு போராளியின் மரணத்திலாவது ஈழத் தமிழர்களுக்கு விடிவு காலம் அளிக்கிறதா இலங்கை அரசு என்று பார்ப்போம் :(

அ.மு.செய்யது said...

உணர்வுகளையெல்லாம் கொட்ட வேண்டும் போலிருக்கிறது.

நம் தமிழர்களுக்கு ஆதரவாக மற்ற எந்த இந்திய மாநிலங்களிலும் ஆதரவு இல்லை.

அவர்களைப் பொறுத்தமட்டில், அவர்கள் "இலங்கை" தமிழர்கள் அவ்வளேவே.

நர்சிம் அவர்களின் கருத்தோடு ஒத்து போகிறேன்.

மற்றபடி, மாவீரன் மடிந்தாலும், தமீழீழ போராட்டம் தொடரும் என்று உலக தமிழர்களனைத்தும் போர்க்கொடி தூக்க ஆரம்பித்திருக்கின்றனர்.

ஐரோப்பா முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் களை கட்ட ஆரம்பித்திருக்கின்றன.

அ.மு.செய்யது said...

//குடந்தை அன்புமணி said...
//மாவீரனுக்கு என்றும் மரணம் இல்லை நம்புவோம்.//


இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று காலை உரையாற்றிய ராஜபக்சே பிரபாகரன் மரணம் பற்றிய எத்தகவலும் கூறவில்லை. இனியாவது பொய்ப்புரை பரப்புபவர்கள் நம்புவார்களா?
//

இல்லை அன்புமணி..

புலிகளுடனான போர் முடிவுக்கு வந்து விட்டது என்று சூசகமாக தெரிவித்தது போதாதா ??

அதுவும் கொச்சை தமிழில்.

நசரேயன் said...

//மாவீரனுக்கு என்றும் மரணம் இல்லை//

உண்மை

ச.முத்துவேல் said...

அமித்து அம்மாவுக்கு இப்படியொரு அறச்சீற்றம் கொண்ட முகமா? மகிழ்ச்சி.

சந்தனமுல்லை said...

உங்களையெல்லாம் என்ன செய்தால் தகும்?

"உழவன்" "Uzhavan" said...

இரண்டு நாட்களாக மனம் இறுக்கமாகவே இருக்கிறது :-(

Thamira said...

மீடியா எப்போதுமே ஒரு பசி கொண்ட வேங்கையாகத்தான் இருக்கிறது, இருக்கும்.!

கார்க்கிபவா said...

:((

Jackiesekar said...

காசுக்கு மொழியை விற்கும் உங்களுக்கு, களம் கண்ட வீரனின் செய்தியைப் பரப்ப எந்தவொரு அருகதையுமில்லை

எங்களின் சொச்ச நம்பிக்கைகளை குழிதோண்டி புதைத்து, அதில் உங்களின் பங்காக ஒரு கைப்பிடி மண்ணையும் போட்டு போகிறீர்களே???
உங்களையெல்லாம் என்ன செய்தால் தகும்?//

நன்றி வீர தமிழச்சி

மக்கள் தளபதி/Navanithan/ナパニ said...

//மாபெரும் தலைவனின் மரணம் என்று சொல்லியா பணம் சம்பாதிப்பீர்கள்//

"வாய்க்கரிசியை சமைத்து உன்னும்..." என்று யாரோ சொன்னதுதான் நினைவிற்கு வருகிறது.