எப்புடி... நாங்களும் பேர் வைப்போம்ல....
நடந்து முடிந்த தேர்தலின் பாதிப்பு மே 16 அன்றுதான் மீண்டும் நமக்கு உரைக்கும், ஆனால் இன்னும் அதன் பாதிப்பு தாளாமல் இருப்பவர்கள் அதற்காக உழைத்த (நெசமாத்தாங்க) கவர்ன்மெண்ட் எம்ப்ளாயீஸ் தான்.
வழக்கமாக சென்னை கார்ப்பரேஷன் ஊழியர்கள் தான் இது போன்ற பணிகளில் பெரும்பாலும் ஈடுபடுத்தப்படுவார்களாம், ஆனால் இந்த முறை தேர்தல் கமிஷன் மத்திய அரசாங்க ஊழியர்களையும் விளையாட்டில் சேர்த்துவிட்டார்களாம்.
விளைவு: நிறைய பொருமல்கள். உதாரணமாக மெஷின்களை செக் செய்து அதை எடுத்துக்கொண்டு போய் அவரவர்களுக்கென்று கொடுக்கப்பட்ட ஏரியாவில் உள்ள பூத்தில் கொடுக்க வேண்டும், மீண்டும் அதை வாங்கவும் வேண்டும்.
மெஷின்களை ஏத்தி இறக்கும் வேலையையும் இவர்களே செய்ய வேண்டிய சூழலில், செம கடுப்பாகிவிட்டார்களாம். ஏங்க செஞ்சா என்ன.
பாவம் என் நண்பர், இது போன்ற வேலையில் மாட்டிக்கொள்ள, அவருக்கு அரசால் கொடுக்கப்பட்ட தொகை ரூபாய் 550/-
ஆனால் அவர் மூன்று நாட்களாய் சாப்பாடு தூக்கமில்லாமல், மேலும் மற்றவர்களை தொடர்பு கொண்டு செல் பேச ரீசார்ஜ் செய்த தொகை, வண்டி ஓட்டிகளுக்கு டீ மற்றும் சாப்பாடு செலவு என செலவு செய்த தொகை அதையும் தாண்டிவிட்டதாம். இது எப்படி இருக்கு!
இது இப்படி இருக்க, நான் ஓட்டு போட போன பூத்தில், கையில் மை வைக்கும் இடத்தில் உட்கார்ந்திருந்த ஒருவருக்கு டீ கொடுக்கப்பட்டது. அதைப் பார்த்த அவர், என்னப்பா காலையில இருந்து இதையே கொடுத்துட்டு இருக்கீங்க, வேறெதுவும் கவனிக்க மாட்டேங்கறீங்க என்றார்.
டீ கொடுத்தவர் வெளிய வாங்க சார், பாத்துக்கலாம் என்றார் !!!!!!!!!!!!!!
வாக்கு இயந்திரத்தின் கிட்டத்தில் போனவுடன், கேப்டனின் சின்னம் மறந்து போய் விட, யோசிப்பில் இருக்க, அங்கிருந்தவர்கள் புளூ பட்டனை அழுத்தும்மா, புளூ பட்டனை அழுத்தும்மா, என்று கோரஸாக சவுண்டு விட ஆரம்பித்துவிட்டார்கள். கடைசியில் பழக்க தோஷமாக என் மாமா இருந்த கட்சிக்கே போட்டுவிட்டு வந்தேன்.
.......
கலைஞர் எப்போதும் எதற்கு பெயர்வைத்தாலும் அது சுருக்கமாக (சின்னதாக) இருப்பதையே விரும்புவாராம். அண்ணா யூனிவர்சிட்டிக்கு பெயர் வைக்க அவரிடம் ஆலோசனை கேட்க, முடிவு செய்த பெயரான பேரறிஞர் அண்ணா யூனிவர்சிட்டி (ஆங்கிலச் சுருக்கம்: PAUT) என இருந்ததாம்.
கலைஞரோ இப்போ பௌட் என்பீர்கள், அப்புறம் அது அவுட் என்பீர்கள் வேண்டாம். அது அப்படியே அண்ணா யூனிவர்சிட்டியாகவே இருக்கட்டும் என்றாராம்.
இந்த தகவல் என் மேலதிகாரி தந்தது.
............
காலையில் வரும்போது சுவரொட்டிகளில் பார்த்த செய்தி: நடிகர் (?) ரித்தீஷின் படம் போட்டு, ரித்தீஷின் உயிருக்கு ஆபத்து என்றிருந்தது. உள்ளேயிருக்கும் நியூஸ் என்ன என்பதெல்லாம் தெரியவில்லை.
ஆனால் ஒன்று மட்டும் புரிந்தது, எங்கே அவர் நின்ன தொகுதியில் தோத்துப்போய் மறுபடியும் நடிக்க வந்துவிடுவாரோ என்று பயந்து, அவரது ரசிக சிகாமணிகளே இது போன்ற எதாவது செயல்களை செய்ய
துணிந்திருக்கலாமோ ???
..................
கடைசியில கவிதை எழுதனுமில்ல, அதானே விதி (அட, நீங்க படிக்கப்போறதை சொல்லலீங்க) இது போன்று எழுதுவதில் கடைசியா அப்படித்தானே முடிக்கனும்.
ஃபார் எ சேஞ்ச். ஒளவையார் எழுதின மூதுரை.
நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல்; தான் கற்ற
நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு - மேலைத்
தவத்து அளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்
குலத்து அளவே ஆகும் குணம்.

18 comments:
அஜசியல்ல ஜகஜம் டாயி ...
ம்ம்ம் நடக்கட்டும்..
காரசாரமா இருந்தது அமித்துஅம்மா
கலக்குங்க... கலக்குங்க... காரசாரமா கலக்குங்க
//செலவு செய்த தொகை அதையும் தாண்டிவிட்டதாம். இது எப்படி இருக்கு!
//
:))
//வித்யா said...
ம்ம்ம் நடக்கட்டும்..
//
இத தவிர வேர பின்னூட்டம் தெரியாதா? :)))
காரசாரத்தின் எல்லா சாராம்சமும் சூப்பர் அமித்து அம்மா:)!
ஆகா..காரசாரமா இருக்குப்பா! :-)
///டீ கொடுத்தவர் வெளிய வாங்க சார், பாத்துக்கலாம் என்றார் !!!!!!!!!!!!!!//
என்ன நினைச்சி இவ்ளோ ஆச்சர்யம்?
///ஆனால் ஒன்று மட்டும் புரிந்தது, எங்கே அவர் நின்ன தொகுதியில் தோத்துப்போய் மறுபடியும் நடிக்க வந்துவிடுவாரோ என்று பயந்து, அவரது ரசிக சிகாமணிகளே இது போன்ற எதாவது செயல்களை செய்ய
துணிந்திருக்கலாமோ ???///
இவர் நிஜமா ஜெயிச்சுடுவார்னு சொல்லி கிறாங்க!! உஷாரா இருந்து கோங்கோ ! ;;))
அப்புறம் அந்த ப்ளூ பட்டன் எந்த கட்சி!!!
நல்ல காரம் தான்...
இனிப்பா இருந்தது.. ஒரே மாதிரி சொன்னா போரடிக்குதுல்ல..
காரசாரம் மட்டுமில்லை அறுசுவையும் இருந்தது. :-)
அமித்து அம்மா,
பதிவு நல்லா காரசாரமாக தான் இருக்கு...
ஆகமொத்தம், கேப்டன் சின்னத்த மறந்து வேற யாருக்கோ குத்திட்டு வந்துட்டீங்க... ஹ்ம்ம்.. அவரும் பாவம் எவ்வளோ வாட்டி டிவி-ல வந்து 'முரசு' கொட்டி சொல்லிட்டு போனாரு.. இப்படி கவுத்திட்டீங்களே மேடம்... :)
ரித்தீஷ உங்ககிட்டயும் மாட்டிக்கிட்டாரா... கவிதையோட முடிக்கணும்ங்கிறது விதி... உங்க பாணியில சூப்பரா இருக்கு. கலக்குங்க அமித்துஅம்மா!
காரசாரமான பதிவு:)
தலைப்பு அருமை!
நீங்களும் மிக்சர் போட்டுட்டீங்களா???
பிஸியா???வலைப் பூ பக்கம் ஆளையே காணோமே???
அன்புடன் அருணா
//கேப்டனின் சின்னம் மறந்து போய் விட//
அமித்துமா.. இதல்லாம் ஓவரு ஆமா.. எங்க கேப்டன இப்படியா அசிங்கப்படுத்துறது? :-))
//தோத்துப்போய் மறுபடியும் நடிக்க வந்துவிடுவாரோ என்று பயந்து//
நிச்சயமா இராமநாதபுர மக்கள் இதற்காகத்தான் அவருக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வச்சிருப்பாங்க.. நாயகன் ரித்தீஷ் அவர்களே.. டெல்லிப் பக்கமே இருந்துக்கோங்க, கோடம்பாக்கம் பக்கம் தயவு செய்து வராதீங்க.
என்னது இது.. நீங்களுமா ??
Post a Comment