09 March 2009

அமித்து அப்டேட்ஸ்

என் கிட்ட ஒரு கெட்ட பழக்கம், அதாவது அப்ப அப்ப அமித்துவுக்கு ஒரு பேர் வைப்பேன். வழக்கமா இருக்குற மாதிரி அம்முக்குட்டி, பட்டுக்குட்டி இதெல்லாம் இல்லை.
லல்லி, சுல்லிப்பொண்ணு, சின் பொண்ணு, ஆன் பொண்ணு, பையா, டூட்டூன் பப்பி (இந்த பேரை எங்கருந்து கண்டு புடிச்சேன்னு எனக்கே தெரியல!!!), இந்த வரிசையில் இப்போது வர்ஷினி... பாய். இதான் லேட்டஸ்ட்.
ஆனா மேடத்துக்கிட்டருந்து எல்லாத்துக்கும் ஒரே ரியாக்‌ஷன் தான் வரும். இப்படி நான் அந்தம்மாவை விதம் விதமா பேர் வெச்சிக்கூப்பிட்டுக்கொண்டிருக்க, அவங்க ரொம்ப சாதாரணமா என் பேரை சொல்லிக் கூப்பிட ஆரம்பிச்சிருக்காங்க. எதையாவது எடுத்துக்கிட்டு வந்து யச்சோ” எச்சோ” என்று கூப்பிட்டு காண்பிக்கிறாள். நான் அவள் கூப்பிடுவதை ரசிப்பேனா, அதை விடுத்து அவள் காண்பிக்கும் பொருளை ரசிப்பேனா. ????

காலையில் அவள்தான் முதலில் எழுவாள். சில சமயம் அம்மா என்று கூப்பிடுவாள். சில சமயம் எச்சோ என்பாள், இது ரெண்டுக்குமே நாம் அசைந்து கொடுக்கவில்லை என்றால், டாஆய் என்பாள். அதற்கு மேலும் எழவில்லை என்றாள், முகத்தில் சரமாரி அடிதான்.

வழக்கம் போல சாப்பிடுவதற்கு மிகவும் அழிச்சாட்டியம். எதைக்கொடுத்தாலும் துப்ப வேண்டியது. இப்படி ஒரு நாள் மாடியில் அவள் சாப்பாட்டை துப்பி வைத்திருந்தாள். கொஞ்ச நேரம் கழித்து, பக்கத்து வீட்டிலிருந்து குட்டி பையன் ஹமீது வந்திருந்தான். அவன் நடந்து கொண்டு வரும்போது
அமித்து துப்பி வைத்திருந்ததை காலில் மிதித்துக்கொண்டு என்னமோ சொல்லிக்கொண்டிருந்தான். இதைப் பார்த்த அமித்து மாடியில் ஓரத்தில் போட்டு வைத்திருந்த பழைய துணியை எடுத்து வந்து, அந்த சாப்பாட்டை துடைத்து விட்டு, வா என்றாளே பார்க்கணும். என்னால் என் கண்களையே நம்பமுடியவில்லை. ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்னு ஏன் வள்ளுவர் பாடினார்னு இப்பதான் புரியுது.

வீட்டில் ஏதாவது பேப்பர் ஏதாவது இருந்தால், கொஞ்சமும் சலிக்காமல் அதை எடுத்துக்கொண்டு போய் குப்பை போட வைத்திருக்கும் கவரை ஒரு கையால் பிடித்துக்கொண்டு மறுகையால் குப்பையை அதற்குள் போடுவாள். இப்படியாய் நிறைய ஆச்சர்யங்கள்...

2 வாரங்களுக்கு முன்னர் அமித்துவை அழைத்துக்கொண்டு பார்க்குக்கு போயிருந்தோம். அங்கு போனவுடன் பலூனைப் பார்த்துவிட்டு பலூன் கேட்டாள். வாங்கி கொடுத்தோம். அவளையொத்த மற்றும் பெரிய பசங்க விளையாடுவதை ஆச்சர்யத்துடன் பார்த்தாள். கொஞ்ச நேரம்தான். அவளின் அப்பாவை பிடித்துக்கொண்டு, அப்பா, ஆ... (வா)ப்பா என்று வந்த வழியை காட்டினாள். சரி வேறெதற்கோ அழைக்கிறாள் என்று நினைத்து அவளுடனயே சென்றோம். கொஞ்ச தூரம் போய்விட்டு அந்த இடத்திலிருந்த ஒரு பைக்கை தொட்டு அப்பா, அப்பா என்றாள். அவளுக்கு வீட்டு ஞாபகம் வந்து விட்டது போலிருக்கிறது. பார்க், விளையாட்டு, வேடிக்கை எல்லாமே மொத்தமே அரைமணி நேரந்தான். இப்ப மேடமே வழிகாட்டிவிட்டதால் விடு வீட்டுக்கு ஜூட். வீட்டுக்கு வந்தபின்னர் வெகு நேரம் அவளின் பாட்டியோடு விளையாடிக்கொண்டிருந்தாள். இன்னமும் எனக்கு விளங்கவில்லை, ஏன் அவளுக்கு அந்த பார்க் இவ்வளவு சீக்கிரத்தில் போரடித்தது என்று.

நாம் உட்கார்ந்து கொண்டிருந்தால், அமித்துக்கு பிடிப்பதில்லை. முகவாயை பிடித்து, தோளை பிடித்து நம்மை எழுப்பும் முயற்சியை செய்கிறாள். முடிவு என்ன, வழக்கம் போல, கடைசியில் அமித்துதான் ஜெயிப்பாள்.

நிறைய வார்த்தைகள் கற்று வைத்திருக்கிறாள், கல், பால், பூ என்..., மேலும் சாப்பாடு வேண்டாம் என்றாள், தலையை ஆட்டிக்கொண்டே ந்னானா என்று மறுத்துவிடுகிறாள். நாம் என்னதான் அந்தர் பல்டி அடித்தாலும் அதற்கப்பால் ஒரு வாய் கூட உள்ளே போகாது. வேணாம் என்று சொல்வதில் மேடம் மிகவும் தெளிவாக இருக்கிறதைப் பார்த்தால், இன்னும் எவ்வளவு வேணாம்கள் இருக்குமோ தெரியவில்லை. யம்மா, அமித்து, என்னைக்காவது ஒரு நாள் இந்த ப்லாகை படித்து விட்டு, உங்கம்மா எழுத்தை வேணாம்னு சொல்லிடாதம்மா.
அப்புறம் அம்மா அழுதுடுவேன், ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.

32 comments:

குடந்தை அன்புமணி said...

உங்க செல்லம் அமித்து உங்க ப்ளாக்கை படித்துவிட்டு அப்படியெல்லாம் சொல்லமாட்டாள். இவ்வளவு குறும்புத்தனங்களையும் பதவு செய்திருக்கும் உங்களை பிரமிப்பாய் தான் பார்ப்பாள்.

நட்புடன் ஜமால் said...

\\வர்ஷினி... பாய்\\

ஹையா! நல்லாருக்கே ..

நட்புடன் ஜமால் said...

\\அந்த சாப்பாட்டை துடைத்து விட்டு, வா என்றாளே பார்க்கணும்\\

நெகிழ்வாய் இருக்கு

மருமகளை இப்பவே பார்க்கனும் போல் இருக்கு

நட்புடன் ஜமால் said...

\\நிறைய வார்த்தைகள் கற்று வைத்திருக்கிறாள், கல், பால், பூ என்..., மேலும் சாப்பாடு வேண்டாம் என்றாள், தலையை ஆட்டிக்கொண்டே ந்னானா\\

சகோ - என்ற வார்த்தையையும் கற்று கொடுங்கள்

எம்.எம்.அப்துல்லா said...

//என்னைக்காவது ஒரு நாள் இந்த ப்லாகை படித்து விட்டு, உங்கம்மா எழுத்தை வேணாம்னு சொல்லிடாதம்மா.
அப்புறம் அம்மா அழுதுடுவேன், ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.
//

இப்ப நாங்க அழுவுறமாதிரி :)

(ச்சும்மா...லூலூலாய்க்கு)

அப்பாவி முரு said...

வாழ்க்கையின் மைல்கல்லில் முக்கியமான ஒன்று, குழந்தையின் மழலை மொழி.குழந்தைகளின் அர்த்தமில்லாத வார்த்தைகளும் அளப்பரிய சந்தோசத்தை தரும் காலமிது.

ஒன்னுவிடாம அள்ளிக்கங்க, எதுவும் மிச்சம் விடாதீங்க.

Unknown said...

//ஈன்ற பொழுதுவக்கும்னு ஏன் வள்ளுவர் பாடினார்னு//

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்

சந்தனமுல்லை said...

:-) அமித்துவை பார்க்க வேண்டுமென்ற ஆவலைத் தூண்டியது பதிவு!

//என்னைக்காவது ஒரு நாள் இந்த ப்லாகை படித்து விட்டு, உங்கம்மா எழுத்தை வேணாம்னு சொல்லிடாதம்மா.
அப்புறம் அம்மா அழுதுடுவேன், ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.//

எதுக்கு இந்த ஃபீலிங்க்ஸூ?!

புதியவன் said...

//இதைப் பார்த்த அமித்து மாடியில் ஓரத்தில் போட்டு வைத்திருந்த பழைய துணியை எடுத்து வந்து, அந்த சாப்பாட்டை துடைத்து விட்டு, வா என்றாளே பார்க்கணும்.//

மிகவும் நெகிழ்வான நிகழ்வு...குழந்தைகளைப் பற்றிப் படிக்கும் போது நமக்கும் குழந்தை உள்ளம் தொற்றிக் கொள்கிறது...இருவருக்கும் வாழ்த்துக்கள்...

ஆயில்யன் said...

//ஆனா மேடத்துக்கிட்டருந்து எல்லாத்துக்கும் ஒரே ரியாக்‌ஷன் தான் வரும்.//

அது அமித்துக்கிட்ட உள்ள கெட்ட பழக்கம் போலிருக்கு!

எம்புட்டு ஃபீலிங்க்ஸ் விடறாங்க பாவம் ஒரு ரிடர்ன் ஃபீலிங்க்ஸ் விடுவோமேன்னு இல்லாம என்னா ஒரு வில்லத்தனம்.....!

:)))))

ஆயில்யன் said...

//நட்புடன் ஜமால் said...
\\அந்த சாப்பாட்டை துடைத்து விட்டு, வா என்றாளே பார்க்கணும்\\

நெகிழ்வாய் இருக்கு

மருமகளை இப்பவே பார்க்கனும் போல் இருக்கு
//

மொதல்ல நீங்க எங்க மாப்பிள்ளையை காட்டுங்கப்பு :)))

Unknown said...

ஹை சூப்பர் இவ்ளோ பெரிய ஆள் ஆயாச்சா அமித்து மேடம்?? :)))

//யம்மா, அமித்து, என்னைக்காவது ஒரு நாள் இந்த ப்லாகை படித்து விட்டு, உங்கம்மா எழுத்தை வேணாம்னு சொல்லிடாதம்மா.
அப்புறம் அம்மா அழுதுடுவேன், ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.//

இதுக்காகவே அமித்து சீக்கிரம் படிக்க கத்துக்கணும்.. ;))))

Unknown said...

அக்கா ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க அமித்து பத்தி... :)) எனக்கு தான் இங்க வர கொடுத்து வைக்கல :(( இனி அடிக்கடி வரேன் அக்கா... :)))))))))

Vidhya Chandrasekaran said...

நான் வளர்கிறேனே மம்மி. சே நான் கூட இந்த ஜூனியர் அப்டேட்ஸ் போடனும்னு பார்க்கிறேன். ம்ம்ம் முடியவே மாட்டேங்கது:)

அப்துல்மாலிக் said...

குழந்தையின் அட்டூழியம்+சுட்டி கண்முன்னே விரிகிறது பதிவை படிக்கயில்

அன்புடன் அருணா said...

//லல்லி, சுல்லிப்பொண்ணு, சின் பொண்ணு, ஆன் பொண்ணு, பையா, டூட்டூன் பப்பி /
ம்ம்ம் இன்னும் புதுப் பேர் கண்டுபிடிச்சு சொல்லுங்க..

அன்புடன் அருணா

ராமலக்ஷ்மி said...

//கடைசியில் அமித்துதான் ஜெயிப்பாள்//

ஜெயிக்கப் பிறந்தவள்!

//உங்கம்மா எழுத்தை வேணாம்னு சொல்லிடாதம்மா.
அப்புறம் அம்மா அழுதுடுவேன், ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.//

சொல்ல மாட்டாள்:)! கூடவே அடுத்த இரண்டு வரிகளைச் சேர்த்து விட்டீர்களல்லவா? தாங்க மாட்டாள்:)!

Thamira said...

ரசனையான பதிவு.. (அச்சச்சோ.. முந்தைய பதிவுகளை கோட்டை விட்டுட்டேன் போலருக்கே, இன்னிக்கு படிச்சுடறேன்.)

இராகவன் நைஜிரியா said...

அமித்துப் பற்றி பதிவு அருமைங்க..

ஓவ்வொரு நிகழ்வையும் பார்த்து, பார்த்து பதிவிட்டு இருக்கீங்க.

குழந்தையின் சிறு சிறு செயல்களையும் உன்னிப்பாய் கவனித்து வந்துள்ளீர்கள்.

வாழ்த்துக்கள் அமித்து அம்மா.

ஜீவா said...

குழந்தைகள் எப்பொழுதுமே அழகாய் இருக்கிறார்கள் . உங்களின் எழுத்துக்களும் மிக அழகாய் உள்ளது


தோழமையுடன்
ஜீவா

குடுகுடுப்பை said...

என்னைக்காவது ஒரு நாள் இந்த ப்லாகை படித்து விட்டு, உங்கம்மா எழுத்தை வேணாம்னு சொல்லிடாதம்மா.//

பொண்ணுக்கு தமிழ் சொல்லிக்கொடுக்க போறீங்களா?

ராம்.CM said...

நெகிழ்வாய் இருக்கு..!

அமுதா said...

/*நான் அவள் கூப்பிடுவதை ரசிப்பேனா, அதை விடுத்து அவள் காண்பிக்கும் பொருளை ரசிப்பேனா. ????*/
அழகு


/*இப்படியாய் நிறைய ஆச்சர்யங்கள்...*/
ஒண்ணுமே தெரியாமல் இருந்துட்டு ஒவ்வொண்ணா கத்துக்கறதைப் பார்ர்கறப்போ ஆச்சர்யமா தான் இருக்கு...

/*ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்னு ஏன் வள்ளுவர் பாடினார்னு இப்பதான் புரியுது..*/
:-)

/*கடைசியில் அமித்துதான் ஜெயிப்பாள்.*/
ஜெயிக்கட்டும்... அமித்துக்கு என்னோட அன்பு முத்தங்கள்

தமிழ் அமுதன் said...

//காலையில் அவள்தான் முதலில் எழுவாள். சில சமயம் அம்மா என்று கூப்பிடுவாள். சில சமயம் எச்சோ என்பாள், இது ரெண்டுக்குமே நாம் அசைந்து கொடுக்கவில்லை என்றால், டாஆய் என்பாள். அதற்கு மேலும் எழவில்லை என்றாள், முகத்தில் சரமாரி அடிதான///

இப்போவே அம்மாவ நல்ல புரிஞ்சு வைச்சு இருக்கு அமித்து...

///என்னைக்காவது ஒரு நாள் இந்த ப்லாகை படித்து விட்டு, உங்கம்மா எழுத்தை வேணாம்னு சொல்லிடாதம்மா.
அப்புறம் அம்மா அழுதுடுவேன், ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.///

அப்படியெல்லாம் சொல்லாது!! இந்த பதிவெல்லாம் பத்திர படுத்தி அமித்துக்கு விவரம் தெரியும் போது காட்டுங்க. அமித்துக்கு பெரிய பொக்கிஷமா இருக்கும்.

"உழவன்" "Uzhavan" said...

manathai varudum ninaivukal :-)

Karthik said...

//ஒரு நாள் இந்த ப்லாகை படித்து விட்டு, உங்கம்மா எழுத்தை வேணாம்னு சொல்லிடாதம்மா

எனக்கு டவுட்டே இல்லைங்க..!

narsim said...

good flow..

//ந்னானா என்று மறுத்துவிடுகிறாள்//

கலக்கல்!

SK said...

அருமை அமித்து மற்றும் பதிவு :)

தமிழ்நதி said...

உங்கள் மகள் உங்களையும் உங்கள் எழுத்தையும் கொண்டாடுவாள். ஆனால், அவளுக்கு நீங்கள் தமிழ் சொல்லிக்கொடுங்கள் அமித்து அம்மா. தமிழுக்கு தமிழகத்தில் என்ன மதிப்பென்று தெரிந்தபடியால்தான் சொல்கிறேன். இன்னமும் கொஞ்சம் தமிழ் எஞ்சியிருக்கும் அரசாங்கப் பாடசாலையில் மகளைச் சேர்க்கமாட்டீர்கள். நீங்கள் சொல்லிக்கொடுத்தாவது தமிழைப் படிக்கவையுங்கள். வேண்டுகோள் தவறெனில் மன்னிக்கவும்.

அகநாழிகை said...

உங்கள் பதிவுகளை தொடர்ந்து வாசித்து வருகிறேன். பின்மொழியிடுவது இதுதான் முதல் முறை. மனதில் நினைப்பதை எந்த புனைவுகளுமின்றி அப்படியே எழுதி விடுவதுதான் உங்கள் எழுத்தின் சிறப்பு. ‘ஆணுக்குள்ளும் ஒரு தாய்மை‘ என்ற உங்கள் சிறு பதிவு என்னுள் பல சிந்தனையை ஏற்படுத்தியது. தோழி உமாவின் வலைத்தளம் முலமாக உங்கள் பதிவுகளை படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. வில் ஸ்மித் நடித்த “The Pursuit of Happiness” படம் பற்றிய எனது கருத்தினை பதிவு செய்துள்ளேன். படித்து தங்கள் கருத்தினை கூறுமாறு அன்புடன் கோருகிறேன். நன்றி.
www.aganaazhigai.blogspot.com

- பொன். வாசுதேவன்

Sanjai Gandhi said...

அட அட.. படிக்கவே ரொம்ப அழகா இருக்குங்க.. :)

//இதைப் பார்த்த அமித்து மாடியில் ஓரத்தில் போட்டு வைத்திருந்த பழைய துணியை எடுத்து வந்து, அந்த சாப்பாட்டை துடைத்து விட்டு, வா என்றாளே பார்க்கணும். //

குழந்தைகள் பாசமே தனி தான்.. :)

அபி அப்பா said...

நான் இதுக்காகவே ஒரு பதிவே போடுறேன்.