20 November 2008

போஸ்டர்

”கடுகிற்குள் கடலை புகுத்தும் ஆற்றலுடையவர் சின்னைய்யா”
இந்த போஸ்டர் வாசகம் இரு நாட்களாக என் கண்ணில் பட்டு கவன ஈர்ப்புக்குள்ளாகிறது.
மேற்கண்ட இவ்வாழ்த்துக்கும், வாசகத்துக்கும் உரித்தானவர் நமது F.M. ப.சி. யின் தவப்புதல்வர் கார்த்திக் சிதம்பரம். அவரின் பிறந்த நாளுக்கு ஏதோ ஒரு தொண்டரடிப்பொடி போட்ட போஸ்டர் போலிருக்கிறது. இதில் பாராளுமன்றம் தவப்புதல்வரை கூப்பிடுகிறது. ஆமாங்க அப்படிதான் போஸ்டர்ல இருந்தது. போஸ்டரில் ஒரு பக்கம் பாராளுமன்றம், எதிர்பக்கம் கா.சி. வேட்டி புரள நடக்கிறார் சாரி வருகிறார், நடுவில் அவர் அடிவருடி நம் தொண்டரடிப்பொடி கை கூப்புகிறது, மேலே மேற்கண்ட வாசகம் , கீழே ஏகப்பட்ட உ.செ, ம.செ., ப.செக்களின் பெயர்கள்.
எனக்கு ஒரு டவுட்டு: அது என்னன்னா, கடுகிற்குள்ளயே கடலை புகுத்துறவர கையில் வெச்சிக்கிட்டு ஏன் நதிநீர் இணைப்புத் திட்டத்த செயல்படுத்தாம இருக்காங்க.
ஏங்க இப்படி ஆற்றலயெல்லாம் வெச்சிக்கிட்டு வேஸ்ட் பண்றீங்க சின்னய்யா, அடுத்ததா தேர்தல்ல குதிங்க.
இந்த போஸ்டர பாத்தவுடனே எனக்கு தோன்றிய இன்னொரு இன்சிடெண்ட்.
சில நாட்கள் சே இருக்காது, வருடங்களுக்கு முன்னர், திரு. G.K. வாசன் அவர் எம்.பி (அப்படித்தான் நினைக்கிறேன்) யாகி பாராளுமன்றத்திற்கு போகும் நிகழ்வு என்று நினைக்கிறேன். எல்லா தொண்டரடிப்பொடிகளும் சேர்ந்து மகா, மெகா போஸ்டர் ஒன்னு போட்டிருந்தாங்க. அந்த போஸ்டரில் இருந்த வாசகம் எனக்கு நல்லா நினைவிலிருக்குது.
மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும், ஒரு மாசுக்குறையாத மன்னவர் மகனென போற்றி புகழ வேண்டும்.
இப்படித்தான் அடிச்சிருந்தாங்க அந்த போஸ்டரை. இதைப் பார்த்த எனக்கு சிரிப்பு, ஆத்திரம், அவமானம் என பொங்கி வர வழக்கம் போல எதுவுமே செய்யல, பேசிப் பேசி ஆற்றாமைய தீர்த்துக்கிட்டேன். அந்த வார ஜூ.வி, இதை எழுதி அதோட ஆற்றாமைய சொல்லிடுச்சி.
ஆக ஆற்றாமைக்கு ஆற்றாமை சரியாய்ப்போயிடுச்சி.
ஆனா, தமிழ் கூறும், பேசும், பாடும், நல்லுலகில் இருக்கும் தொண்டரடிப்பொடிகளே,
போஸ்டரடிங்க. ஆனா அதப் பாத்து அடிங்க. நீங்க செய்யுற ஸ்பெல்லிங் மிஸ்டேக் உங்க தலைவர்களின் இமேஜை (!?!) பாதிக்குதுல்ல.
அதனால போஸ்டரடிக்கறச்ச கொஞ்சம் பாத்து, வழக்கம் போல ஆவேசப்படாம, வாசகத்த போடுங்க.
நீங்க ஒன்னுக்கெடக்க ஒன்ன எழுதிப்போட்டு அதனால அவுங்க இமேஜ டேமெஜ் ஆக்காதீங்க.
ஆனா இப்ப மேட்டர் மேலிருப்பது அல்ல.
இப்ப பெரும்பான்மையா நமக்கு வர அபீஷியல் மெயில்ல இந்த வாசகத்த பாத்திருப்பீங்க.
let us consider the Environment before printing this e-mail, பக்கத்துல ஒரு மரத்தோட படம் இருக்கும்.
அதாகப்பட்டது, நாம எவ்வளவுக்கெவ்வளோ பேப்பர் யூஸ் பண்றோமோ அதுக்கேத்தா மாதிரி பேப்பர் தயாரிக்க மரக்கூழுக்காக மரத்தை வெட்டுவாங்கோ. சோ நாம கொஞ்சமா பேப்பர் உபயோகிச்சா கொஞ்சமா மரத்த வெட்டுவாங்க, நெறைய உபயோகிச்சா நெறைய வெட்டுவாங்க. மரம் இல்லனா மழை வராது, இந்தக் கதையும் நமக்கு தெரியும்.
(வெட்டுறதும், வெட்டுப்படுவதும், வெட்டுப்படறத பாக்கறகும் நமக்கு சகஜந்தான் வெச்சுக்கோங்க. )
இதுதான்:
“நாம பிரிண்ட் எடுக்கும் A4 sizeக்கு நாம இவ்வளவு யோசிக்கறப்போ, இந்தப் போஸ்டரெல்லாம் அடிக்க எவ்வளவு பேப்பர் செலவாகும், அதற்கு எவ்வளவு மரங்கள் வெட்டப்படும்.
முனியம்மா செத்தா போஸ்டரு, பதினாறாம் நாள் காரியத்துக்கு போஸ்டரு, செல்வி வயசுக்கு வந்தா போஸ்டரு (அடக் கருமமே) , செல்வி மஞ்ச நீராட்டுக்கு மினிஸ்டர் வந்தா போஸ்டரு.(அடக் கண்றாவியே)
இப்படி போஸ்டர் மேல போஸ்டர் அடிக்கறதனால சாரி ஒட்டுறதனால ப்ரயோஜனம் யாருக்குமே இல்ல. (போஸ்டர் அடிக்கறவனுக்கும், ஒட்டுறவனுக்கும் தவிர)
அதனால இப் பூவுலகில் மன்னிக்கவும் போஸ்டர்வுலகில் வாழும் மக்களே,
எதாகப் பட்டதாக இருந்தாலும், எந்த வகையில் எந்த வடிவத்தில் பேப்பர் உபயோகிக்க நேர்ந்தால் உபயோகிக்கும் முன்னர் கொஞ்சம் யோசியுங்கள்.
LET US CONSIDER THE ENVIRONMENT BEFORE TAKING PRINTING OUT.

14 comments:

கபீஷ் said...

நச் மேட்டர். அப்படியே ஆஃபிஸ்ல பிரிண்டர் ஓசின்றதானலேயே அநியாயத்துக்கு print out எடுக்குறவங்கள பத்தியும் எழுதணும்(முக்கவாசி பேரு இப்படித்தான்)

ஆயில்யன் said...

//நாம பிரிண்ட் எடுக்கும் A4 sizeக்கு நாம இவ்வளவு யோசிக்கறப்போ, இந்தப் போஸ்டரெல்லாம் அடிக்க எவ்வளவு பேப்பர் செலவாகும், அதற்கு எவ்வளவு மரங்கள் வெட்டப்படும்///

கரெக்டா சொல்லியிருக்கீங்க பாஸ்!

நாம அதுக்குன்னு ரொம்பத்தான் வேஸ்ட் பண்றோம்!

புதுகை.அப்துல்லா said...

நச்!நச்!நச்!

:))

அமுதா said...

/*LET US CONSIDER THE ENVIRONMENT BEFORE TAKING PRINTING OUT.*/
OK....

தமிழ் அமுதன் said...

செம மேட்டர்!
சூப்பர்!

இத பாருங்க

''ஓய்வு அரியதவனே''

இந்த தலைப்பில ஒரு போஸ்டர்! பார்த்தேன்

கலைஞரை வாழ்த்தி! ''ரி''

Unknown said...

அக்கா கலக்கிட்டீங்க.. நெத்தியடி கேள்வி பட்ருக்கேன்.. பட் இப்ப தான் பார்க்கறேன்... Super.. :))))))

விஜய் ஆனந்த் said...

:-)))...

Princess said...

நச்! நச்! நச்! நச், நச், நச்!!!!!

Appidi Podunga!!!

Anonymous said...

சரியாச்சொன்னீங்க அ.அம்மா, கடுகுல கடலை நுழைக்கமுடியறவங்க மத்தியில இருந்தும் காவிரியை வரவழைக்க முடியலையே.

ராமலக்ஷ்மி said...

வேடிக்கையா ரசிக்கும் படியும், நெத்தியடியா எல்லோருக்கும் உறைக்கும் படியும் சொல்லியிருக்கீங்க.

SK said...

இங்கே ஒரு ஏழு

அங்கே ஒரு பதினாறு யாரு வர்ற என்னோட

நட்புடன் ஜமால் said...

//முனியம்மா செத்தா போஸ்டரு, பதினாறாம் நாள் காரியத்துக்கு போஸ்டரு, செல்வி வயசுக்கு வந்தா போஸ்டரு (அடக் கருமமே) , செல்வி மஞ்ச நீராட்டுக்கு மினிஸ்டர் வந்தா போஸ்டரு.(அடக் கண்றாவியே)
இப்படி போஸ்டர் மேல போஸ்டர் அடிக்கறதனால சாரி ஒட்டுறதனால ப்ரயோஜனம் யாருக்குமே இல்ல. (போஸ்டர் அடிக்கறவனுக்கும், ஒட்டுறவனுக்கும் தவிர)//


எம்மாவ் அருமை

KarthigaVasudevan said...

அடடா....அடடா...செம கலக்கல் .ரொம்ப நல்லா இருக்கு மேடம் .

//*LET US CONSIDER THE ENVIRONMENT BEFORE TAKING PRINTING OUT.*//

sure i will follow...

அமிர்தவர்ஷினி அம்மா said...

நன்றி கபீஷ் முதல் வருகைக்கு

நன்றி ஆயில்ஸ் அண்ணா

நன்றி புதுகை அண்ணே

நன்றி அமுதா

நன்றி ஜீவன்
''ஓய்வு அரியதவனே''

இந்த தலைப்பில ஒரு போஸ்டர்! பார்த்தேன்

கலைஞரை வாழ்த்தி! ''ரி''//
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா

நன்றி ஸ்ரீமா
நன்றி ஸாவரியா
நன்றி விஜய் ஆனந்த்

நன்றி சின்ன அம்மிணி முதல் வருகைக்கு

நன்றி ராம் மேடம்
நன்றி எஸ்.கே
நன்றி ஜமால்
நன்றி மிஸஸ். டவுட்,
ஃபாலோ பண்றேன் சொன்னதுக்கு.