12 November 2008

அழிக்கப்பட்ட வாசகம்

ஏனைய கவிதைகளிலும்
இன்ன பிற கதைகளிலும்
பிறிதொருவர் டைரியிலும்

அடிக்கோடிட்ட வாக்கியங்களை
விட
அழுத்தமாய் அடிக்கப்பட்ட
வாக்கியங்களே
கவன ஈர்ப்பிற்குள்ளாகும்.

இது
இயல்பினதுதான்
என்றாலும்
இப்போது
ஏனைய
வலைப்பதிவுகளிலும்
இந்த
வாசகத்தைப் பார்க்க நேரிடின்
”Comment deleted : This post has been removed by the author”
ஆர்வமிகுதி
அதிகமாகத்தான் செய்கிறது
“அப்படி”
என்னதான்
எழுதிப்போட்டிருப்பாங்களோ
என.

13 comments:

ராமலக்ஷ்மி said...

//அழுத்தமாய் அடிக்கப்பட்ட
வாக்கியங்களே
கவன ஈர்ப்பிற்குள்ளாகும்.//

அருமை.

//“அப்படி”
என்னதான்
எழுதிப்போட்டிருப்பாங்களோ
என.//

சில சமயம் கூகுளின் சதியால் ஒரே கமெண்ட் இரண்டு மூன்று முறை ரீபீட் ஆகி விடுவதுண்டு.

Unknown said...

யக்கா சேம் பின்ச்.. எனக்கும் அப்படி தான் மண்ட காயும்.. இதுதான் எதார்த்த கவிதையா?? ஹை நல்லாருக்கு.. :))))))))

அமிர்தவர்ஷினி அம்மா said...

நன்றி ராமலஷ்மிம்மா

முதல் வருகைக்கும்
எனக்கு
தெரியாததை
புரிய வைத்ததிற்கும்

ஆயில்யன் said...

”Comment deleted : This post has been removed by the author”
ஆர்வமிகுதி
அதிகமாகத்தான் செய்கிறது
“அப்படி”
என்னதான்
எழுதிப்போட்டிருப்பாங்களோ
என//

:)

ஆயில்யன் said...

இப்ப நான் உங்க ஆர்வத்தை அதிகப்படுத்த வேண்டி ஒரு கமெண்ட் போட்டுட்டேனே!!!:))))

விஜய் ஆனந்த் said...

:-)))...

குடுகுடுப்பை said...

கவிதையில உங்களோட ஆர்வத்தை வெளிப்படுதிட்டீங்க

அமுதா said...

நானும் உங்க மாதிரி தான்.
//“அப்படி”
என்னதான்
எழுதிப்போட்டிருப்பாங்களோ
என.//

பழமைபேசி said...

அழிஞ்ச வாசகத்தை
அறியக் குடுக்கலையின்னு
அழகழகா சொல்லுப்போட்டு
அம்சக் கவிதையெழுதி
அசர வெச்சீங்க! நீங்க‌
அசர வெச்சீங்க!!

தமிழ் அமுதன் said...

சில சமயம் எழுத்து பிழையுடன்
போஸ்ட் செய்து இருக்கலாம்.
நான் அப்படி செய்து இருக்கேன்.

ரிதன்யா said...

நல்லாருக்குங்க
என்க்கு இப்படித்தான் தோணும்
யோசிக்கத்தான்
எழுத இல்ல

சந்தனமுல்லை said...

ஹஹ்ஹா!!

//அடிக்கோடிட்ட வாக்கியங்களை
விட
அழுத்தமாய் அடிக்கப்பட்ட
வாக்கியங்களே
கவன ஈர்ப்பிற்குள்ளாகும்.//

அட, ஆமாம்!

நல்லாருக்கு உங்க இன்ஸ்டன்ட் கவிதை!

SK said...

ம்ம்ம்

எப்படி இப்படி எல்லாம் :-)

பரிட்ச்சை எப்படி எழுதினீங்க :-)