06 November 2008

சுயம்

பிறரின்

சுயநல

சூதாட்டத்தில்

வெட்டுப்பட்டுக்

கொண்டிருக்கிறது

வாழ்க்கை.


தவறிப்போய்

விழும்

தாயங்களும்

மீட்டெடுத்துக்

கொள்கிறது

தனக்கான

காய்களை


அதிசயமாய்

விழும்

ஆறும்

பன்னிரெண்டும்

நகர்த்திப்போகிறது

நமக்கான

இருப்பிடத்தை


வெட்டுப்படுவதும்,

விட்டுக்கொடுப்பதுமான

வாழ்க்கையில்

தொலைந்தே

போனது

சுயம்

ஆட்டம்

முடிந்ததும்

அழிக்கப்படும்

ஆட்டக்களத்தைப்

போல


(இந்தக் கவிதையை அழகாய் அலைன் செய்ய உதவிய,ஆயில்ஸ் அண்ணாவுக்கும், பப்பு அம்மாவுக்கும் (சந்தனமுல்லை) அவர்களுக்கு இந்தக் கவிதை சமர்ப்பணம்)

26 comments:

தமிழ் அமுதன் said...

''தாயம்''
ஆட்டத்த வைச்சு
''சுயம்''
நயமான கவிதை!
ஆனா! எதோ ஒரு சின்ன
''காயம்''
... தெரியுதே!

அமுதா said...

/*வாழ்க்கையில் தொலைந்தே போனது சுயம் ஆட்டம் முடிந்ததும் அழிக்கப்படும் ஆட்டக்களத்தைப் போல*/

நல்லா இருக்குங்க

ராமலக்ஷ்மி said...

அருமை அருமை அமிர்தவர்ஷினி அம்மா!

//வெட்டுப்படுவதும்,
விட்டுக்கொடுப்பதுமான
வாழ்க்கையில்
தொலைந்தே
போனது
சுயம் ஆட்டம்//

உண்மைதான்.

'மழை'யில் இனி அடிக்கடி கவிதைச் சாரல்களை எதிர்பார்க்கிறோம். வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

நன்றி ஜீவன்.
நல்ல எதுகையோடு பின்னூட்டமிட்டுருக்கிறீர்கள்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

நன்றி அமுதா

நன்றி ராமலஷ்மிம்மா. மழைச்சாரலோடுதான் இருக்கும் எப்போதும்.
நன்றி பாராட்டுக்களுக்கு,

சந்தனமுல்லை said...

//வெட்டுப்படுவதும், விட்டுக்கொடுப்பதுமான வாழ்க்கையில் தொலைந்தே போனது சுயம் //

ரொம்ப நல்லாருக்குங்க கவிதை! இதயத்திலிருந்து பேசுகிற மாதிரி..

அப்புறம், இந்த சமர்ப்பணம்-லாம் எதுக்குங்க..சொல்லப்போனா, நான் உபயோகமா ஒண்ணும் சொல்லல!! :(
அதுக்கேவா..

சந்தனமுல்லை said...

//பிறரின் சுயநல சூதாட்டத்தில் வெட்டுப்பட்டுக் கொண்டிருக்கிறது வாழ்க்கை.//

இதுவும்!! எனக்கு கவிதையை எப்படி பாராட்டுவதென்று தெரியவில்லை..ஆனா, இயல்பாய் இருக்கின்றன உங்கள் கவிதைகள்

பழமைபேசி said...

தங்கள்
நனவோடை
பாய்கிறது
பதமாக‌!

படித்தவர்
நெஞ்சம்
தொடுகிறது
இதமாக!!

இன்னும்
வரட்டும்
விதம்
விதமாக!!!

ஆகட்டும்
அதன்தன்
எண்ணிக்கை
சதமாக!!!!

Karthik said...

nalla irukunga!!!

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

விட்டுக்கொடுப்பதில் உள்ள சுகம்
விட்டுக்கொடுக்கும் போதுதான்
தெரியும்!

அருமையான கவிதை.....

பழமைப்பேசியின் கமெண்ட்டை திரும்ப ஒரு முறை சொல்லிக்கிறேன்(ரீப்பீட்டே)

பழமைபேசி said...

அம்மா!

குடுகுடுப்பை said...

"சுயம்" நல்ல கவிதைங்க.

நான் இழந்து ஆறு வருடம் ஆகிவிட்டது.
மீட்டெடுக்க முடியுமா?

ரொம்ப நல்லா எழுதறீங்க நீங்க.

தாரணி பிரியா said...

\\வெட்டுப்படுவதும்,
விட்டுக்கொடுப்பதுமான
வாழ்க்கையில்
தொலைந்தே
போனது
சுயம் ஆட்டம்
முடிந்ததும்
அழிக்கப்படும்
ஆட்டக்களத்தைப்
போல\\


நச் வரிகள் அமிர்தவர்ஷினி அம்மா

புதுகை.அப்துல்லா said...

சொல் செல்லும் பாதையும்
கண் செல்லும் பாதையும்
அழகாய் இருக்கிறது!

( கோனார் தமிழ் உரை :

சொல் செல்லும் பாதை = கவிதை
கண் செல்லும் பாதை = புது அலைன்மெண்ட் )

Princess said...

அற்புதமாய் வாழ்க்கையின் தத்துவத்தை ஒரு விளையாட்டு மூலம் சொல்லீட்டீங்க,...திருப்பி திருப்பி படிக்கணும் போல இருக்கு

அன்புடன் அருணா said...

//விட்டுக்கொடுப்பதில் உள்ள சுகம்
விட்டுக்கொடுக்கும் போதுதான்
தெரியும்!//

இது புரியாமல்தான் பல சுகங்களை இழந்து விடுகிறோம்....
அருமையான கவிதை...
அன்புடன் அருணா

நசரேயன் said...

நல்ல அர்த்தமுள்ள அருமையான கவிதை.
அனைத்து வரிகளும் அருமை
வாழ்த்துக்கள்

ச.பிரேம்குமார் said...

கவிதை அருமையா எளிய நடையில் இருக்கு. வாழ்த்துக்கள்

ஆனா, இத்தனை Line Break தேவையா? பல வரிகளில் ஒரேயொரு வார்த்தை தான் இருக்கிறது. பொருள் பட வாக்கியங்களை ஒடித்தால் இன்னும் நன்றாக இருக்கும்

ச.பிரேம்குமார் said...

:)

பழமைபேசி said...

உங்களுக்கான மேலுமொரு பதிவு!

நட்புடன் ஜமால் said...

அம்மான்னா சும்மாவா!

SK said...

கலக்கல் :)

எப்படி இப்படி எல்லாம் எழுதறீங்க. எனக்கு ஒரு வரியா முழுசா எழுத சொன்னாலே வர மாட்டேங்குது :)

தொடரட்டும் கலக்கல்கள்

Jeevan said...

அழகான அர்த்தம்முள்ள கவிதை.
விட்டுக்கொடுப்பது வாழ்வதர்கே!

அமிர்தவர்ஷினி அம்மா said...

நன்றி முல்லை பாராட்டுகளுக்கு.

நன்றி திரு. பழமைபேசி, கவிதையாலே கருத்து சொன்னமைக்கு.

நன்றி கார்த்திக் தங்களின் முதல் வருகைக்கு
நன்றி சுடர்மணி
நன்றி தாரணிபிரியா
நன்றி குடுகுடுப்பை அண்ணா
நன்றி புதுகை அண்ணா
நன்றி அருணா, தங்களின் முதல் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும்..
நன்றி நசரேயன், தங்களின் முதல் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும்..
நன்றி பிரேம்குமார், தங்களின் முதல் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும்..
நன்றி ஜீவன்.

cheena (சீனா) said...

அருமை அருமை - கவிதை அருமை. சுழ்நிலைக் கைதி மனிதன். பல சமயங்களில் நாம் மாறுகிறோம் மற்றவர்களால். சுயம் அழிக்கப்படுவது உண்மை

Unknown said...

யக்கா இது ரொம்ப சூப்பர் :))