அமித்துமேல் நெறைய கம்ப்ளெயின்ட் வர ஆரம்பிச்சுடுச்சு.
அதில் ஒன்று : அவள் ஆண்பால், பெண்பால் என்று எல்லா பாலரையும், பெரியவர்களையும், ஏய், டேய் என்று சொல்லுவது.
சரி இதைத் திருத்தலாம் என்று, அமித்துவை மடியில் போட்டுக்கொண்டு
டேய் குட்டா
சே நானே இப்படி கூப்பிட்டா, இவளும் இதைத்தானே பாலோ பண்ணுவா, (மொதல்ல நாம திருந்தனும்) என்று
சே நானே இப்படி கூப்பிட்டா, இவளும் இதைத்தானே பாலோ பண்ணுவா, (மொதல்ல நாம திருந்தனும்) என்று
அமித்து குட்டி
நீங்க ஏன் இப்படில்லாம் பேசுறீங்க
நீங்க ஏன் இப்படில்லாம் பேசுறீங்க
ஏய், டேய் எல்லாம் பேசக்கூடாதுடா
நீங்க அழகா வணக்கம் சொல்றீங்க
அழகா குட்மார்னிங் சொல்றீங்க
அழகா குட்நைட் சொல்றீங்க
நீங்க அழகா வணக்கம் சொல்றீங்க
அழகா குட்மார்னிங் சொல்றீங்க
அழகா குட்நைட் சொல்றீங்க
ஆனா
என்று நான் சொல்லி முடித்து அவள் முகத்தைப் பார்க்கையில்
அவளின் கையை நெற்றியில் வைத்து வைத்துக்கொண்டிருக்கிறாள்
அவளின் கையை நெற்றியில் வைத்து வைத்துக்கொண்டிருக்கிறாள்
(குட்மார்னிங் சொல்லு, குட்நைட் சொல்லு - நெற்றியில் கை வைத்து ஒரு சிரிப்பை உதிர்ப்பாள், இது வாடிக்கை நிகழ்வு)
(நான் அவளை குட்நைட்டா சொல்ல சொன்னேன்)
நான் என்ன சொல்ல
மீண்டும் எப்படி சொல்ல நான் அவளுக்கு சொல்ல வந்ததை.
நான் கற்றுக்கொடுக்க வந்தேன் ஒரு அன்னையாக
ஆனால் மாறிப்போனேன் ஒரு குழந்தையாக.
ஆனால் மாறிப்போனேன் ஒரு குழந்தையாக.
13 comments:
//நான் கற்றுக்கொடுக்க வந்தேன் ஒரு அன்னையாக ஆனால் மாறிப்போனேன் ஒரு குழந்தையாக.//
அதுதான் நடக்கும். மறுபடி வளர்வீர்கள் குழந்தையுடன் சேர்ந்து :))!
கவிதையாவே ஒரு பதிவு.
பதிவின் முடிவிலே ஒரு கவிதை.
நன்றி ராமலஷ்மிம்மா.
உங்களின் கருத்துக்கும், வருகைக்கும்
முதல் பின்னூட்டதிற்கும்
குழந்தைங்க இந்த மாதிரி
பேசுறத ரசிக்கணும்! திருத்துறேன்னு
சொல்லி அவங்கள டிஸ்டர்ப்
பண்ண கூடாது!
வளர! வளர! தானா திருந்திடுவாங்க!
நான் கூட குழந்தையா இருக்கும்
போது எல்லோரையும் வாடா,போடா
ன்னுதான் பேசுவேனாம் இப்போ
அப்படி பேசுறது இல்ல! திருந்திட்டோம்ல!
//நான் கற்றுக்கொடுக்க வந்தேன் ஒரு அன்னையாக ஆனால் மாறிப்போனேன் ஒரு குழந்தையாக.//
கவிஞர் அமித்து அம்மா வாழ்க
//நான் கூட குழந்தையா இருக்கும்
போது எல்லோரையும் வாடா,போடா
ன்னுதான் பேசுவேனாம் இப்போ
அப்படி பேசுறது இல்ல! திருந்திட்டோம்ல!//
ஆனா சிங்கமணி வீட்ல ஒருத்தர அப்படிதான் கூப்புடுறாங்களாம்
குடுகுடுப்பை said...
//நான் கூட குழந்தையா இருக்கும்
போது எல்லோரையும் வாடா,போடா
ன்னுதான் பேசுவேனாம் இப்போ
அப்படி பேசுறது இல்ல! திருந்திட்டோம்ல!//
ஆனா சிங்கமணி வீட்ல ஒருத்தர அப்படிதான் கூப்புடுறாங்களாம்
ஆஹா.... உங்களுக்கு எப்படி இதெல்லாம் ....?
(பாருங்க இந்த அமிர்தவர்ஷிணி அம்மா ஆள் வைச்சு அடிக்கிறத)
குடுகுடுப்பை said...
//நான் கூட குழந்தையா இருக்கும்
போது எல்லோரையும் வாடா,போடா
ன்னுதான் பேசுவேனாம் இப்போ
அப்படி பேசுறது இல்ல! திருந்திட்டோம்ல!//
ஆனா சிங்கமணி வீட்ல ஒருத்தர அப்படிதான் கூப்புடுறாங்களாம்
ஆஹா.... உங்களுக்கு எப்படி இதெல்லாம் ....?
(பாருங்க இந்த அமிர்தவர்ஷிணி அம்மா ஆள் வைச்சு அடிக்கிறத)
எல்லாம் அவ(ர்)ன் செயல், யாமறியோம் பராபரமே.
நான் கூட குழந்தையா இருக்கும்
போது எல்லோரையும் வாடா,போடா
ன்னுதான் பேசுவேனாம் இப்போ
அப்படி பேசுறது இல்ல! திருந்திட்டோம்ல!
நெசம்மாவா, நம்பமுடியலயே
நன்றி குடுகுடுப்பையாரே
நான் பேச நினைத்ததெல்லாம்
நீங்கள் பேசியதற்கு
/*நான் கற்றுக்கொடுக்க வந்தேன் ஒரு அன்னையாக ஆனால் மாறிப்போனேன் ஒரு குழந்தையாக.*/
உண்மைதான்... நன்றாக உள்ளது
:-))...ரொம்ப நல்லா கவிதையாவே இருக்கு உங்க பதிவு! ம்ம்..நெஜம்தான்..அவங்ககிட்டே கத்துகிடு நாமதான் வளரணும்..அமித்து ரொம்ப குட்டிப்பாப்பாங்க..அவ பேசறதை ரசிச்சா போதும்..நீங்க சீர்திருத்தவாதியா மாறவேணாம்..Lol!
ம்ம்..ஒருவேளை போதும் பேசனதுன்னு குட்நைட்-ன்னு சொல்றாளோ என்னவோ!!
அருமையா எழுதியிருக்கீங்கக்கா,
என் மகளும் இப்படித்தான், இன்னும் அவங்க அம்மாவ வாடி போடிதான், என்னையும் பேர் சொல்லிதான் கூப்பிடுவாங்க. எனக்கும் சந்தோஷம் பேர் சொல்ல ஒர் பெண் என்று!
மழலைகலீன் உலகமே தனி - அதனை அனுபவியுங்கள் - ஆராயாதீர்கள் - திருத்த முயலாதீர்கள் - தவறல்லவே திருத்துவதற்கு - செல்லக் குட்டி அமித்துவின் போக்கிலேயே விடுங்கள். அதுதான் அமித்துவின் உலகம்.
Post a Comment