இடுப்பில் அமித்து
கையில் குழைத்த பருப்பு சாதம்
எனக்கு ஒரு கை சாதம்
அவளுக்கோ அது நான்கு வாய் சாதம்
அம்மு, அங்க பாரு டாமி டாமி
ம் ஓய் ம் ம் ம் ஓய்
ஒரு வாய் உள்ளே போய் விடும்
டாமி கிட்டே போவது
எனக்கு பயம் தரும் விசயமாதலால்
தூரமாய் இருந்தே மறுபடியும் டாமி டாமி
டாமி பாரும்மா
இந்த டாமி கூப்பிட்டா வருதா பாரும்மா
ஓய் ஹோய்என்று சொல்ல வாயை திறக்கும்
வேளையில் இன்னொரு வாய்உள்ளே போகும்
அதற்கப்புறம்டாமி கூப்பிடுவது போர் அடித்துவிடும்
அம்மு மியாவ் டா குட்டி
இரண்டு காலையும் உதறி கொண்டே -ம்ம்ம் என்பாள்
இப்பொது ஒரு வாய்உள்ளே போகும்
இப்போதுடாமி, மியாவ் இரண்டும் போரடித்துவிடும்
அம்மு அம்மு அங்க பாருடா ஆட்டோ
அதோ பாருடா ஏரோப்ளேன்-
ம்ஹும்வாயை திறந்தால் தானே.
அம்மு அம்மு கோழிடா
ம் கொய்யீ இப்போ ஒரு வாய்
இடையிடையே ஏதாவது
இரு சக்கர வாகனம் வந்தால் இல்லை
ஏதேனும் சின்னப்பசங்க வந்தால்
என்று ஓரிரு வாய் உள்ளெ போகும்
இதற்கப்புறம் எல்லா உணவும் பூமிக்கு உரம்தான்
மழைக்காலங்களில்
இந்தப் பாச்சா எதுவும் பலிக்காது
எனவே இந்த மாதிரிசமயங்களில்
எங்களுக்கு கை கொடுப்பது பம்பரம்
அவரின் தாத்தா பம்பரம் விடுவார்
அது சுத்தும் போது
ஹாய் என்று அமித்து கத்தும் போது
ஒரு வாய் உள்ளே போய்விடும்
இதுபோல் சென்ற
மழைக்காலங்களில் ஒரு நாள்
சோறுட்டல் நிகழும்போது
நான் அவள் வாய் திறந்ததை 2,3 முறை தவறவிட்டு விட்டேன்
அதற்கு அவரின் தாத்தா
என்னம்மா நீ அவ வாயை திறக்கற போது ஊட்ட மாட்டேன்ற.
விட்டுடறே
உனக்கு அவளுக்கு சோறுட்டவே தெரியலம்மா.
-ம்ஹீம் என்னிடம் இருந்து பதிலே வரவில்லை. பதில் சொல்லவும் தெரியவில்லை.
ஏனோ வெண்ணிலாவின் கவிதை ஒன்று மட்டுமே ஞாபகம் வந்தது.
நானும் அந்த நாயும்குழந்தைக்கு சோறூட்டும்
அந்த மையப்புள்ளியில்சந்தித்துகொள்கிறோம்.
கையில் எடுக்கும் ஒவ்வொரு கவளமும்
உள்ளே போகவேண்டும் என்று நானும்
கீழே விழவேண்டும் என்று நாயும்
அவரவர்க்கான எதிர்பார்ப்பில்
18 comments:
கவிதையெல்லாம் நல்லாத்தான்
சொல்லுறீங்க ஆனா குழந்தைக்கு
சோறுட்டதான் கஷ்ட படுறீங்க!
குழந்தைங்க சாப்பிடுற மாதிரி
ருசியா சமைச்சா அவங்க ஏன்
சாப்பிட அடம் பண்ண போறாங்க?
கடைசில வெண்ணிலாவின் கவிதை வெகு அருமை.
ஜீவன் இப்படி வாரிட்டாரே உங்களை:))!!
ஊட்டாதீங்க, குழந்தைய தானா சாப்பிட பழக்குங்க. அப்புறம் ஜீவன் மாதிரி உங்கூட்டுகாரர நல்ல சமைக்க சொல்லுங்க
unga kashtam enakku puriyuthu.....
Naan Nila-va switch kitta kondu poyi niruthippen.....light podu chellam....podum pothu vai thirappa.....good job..ippo light off pannu chellam.....appo marupadi vai thirappa.....oru 5-6 vai ipdi pogum....appuram thannila kaiya nanaikka vachu oru 5 vai......colour colour-a leaves eduthu kuduthu oru 5 vai....good luck
குடுகுடுப்பை said...
ஊட்டாதீங்க, குழந்தைய தானா சாப்பிட பழக்குங்க. அப்புறம் ஜீவன் மாதிரி உங்கூட்டுகாரர நல்ல சமைக்க சொல்லுங்க
அமிர்தவர்ஷிணி அம்மா என்னைய எப்படி திருப்பி
வாரலாம்னு யோசிச்சுகிட்டு இருக்கும் போது
இப்படி ஒரு மேட்டர எடுத்து கொடுத்துட்டிங்களே!
என்னண்ணே ? நியாயமா ?
நான் சொல்ல நினைச்சதை அப்படியே குடுகுடுப்பையார் சொன்னதினாலெ
குடுகுடுப்பயாருக்கு ஒரு ஷொட்டு
ஜீவனுக்கு ஒரு கொட்டு
நன்றி ராமலஷ்மி மேடம்
Thanks for coming nila amma.Thanks for your first visit
கவிதையெல்லாம் நல்லாத்தான்
சொல்லுறீங்க ஆனா குழந்தைக்கு
சோறுட்டதான் கஷ்ட படுறீங்க!
குழந்தைங்க சாப்பிடுற மாதிரி
ருசியா சமைச்சா அவங்க ஏன்
சாப்பிட அடம் பண்ண போறாங்க
ம் அப்படியா சரி
உங்க வீட்ல சிங்கமணிக்கு ஏதும் வேலையே இல்ல போல,
எல்லாம் ரங்கமணியே பாத்துப்பாரோ.
வெண்ணிலாவின் கவிதை அருமை. ஒரு காலத்தில இப்படிதாங்க சோறுட்டும்பொழுது, சில சமயம் கதை, சில சமயம் வேடிக்கை, சில சமயம் எல்லா பறவை குரல் கொடுத்து என்று ரொம்ப கஷ்டப்பட்டேன். வளர வளர தான் கொஞ்சமாவது டேஸ்ட்டுனு ஒண்ணு செட் ஆகி கொஞமாவது சாப்பிடறாங்க.. அந்த ஸ்டேஜ் வரும் வரை எஞ்சாய்..
ஒவ்ஒரு விட்டிலையும் குழந்தைகளுக்கு சோருஊட்டுவது
பெரிய படலம்அக உள்ளது. எங்க அம்மாவும் எனக்கு சோருஊட்டும் சிரமங்களை சொல்வாங்க, நான் அவ்வளவு பன்னுவேனாம் ஒரு வாய் வாங்க.
haha... this is so sweet!
அமிர்தவர்ஷினிஅம்மான்ன பேர பாத்த உடன் நான் எதோ ஒரு வயசான அம்மா கோயில் குளம் பத்தில்லாம் எழுதுவாங்க போலன்னு நெனச்சு இந்த பக்கம் வராம விட்டுட்டேன்.
கடைசில பாத்தா புள்ளபித்து புடிச்சுக்கெடக்கும் நம்ம சாதிக்காரவுக :)
அதுவும் கயல்விழி பதிவில் உங்க பின்னூட்டம் பாத்தபின் இன்னும் உங்கள் மேல் ப்ரியம் அதிகமாகிவிட்டது.
குழந்தை தானே சாப்பிடறது நல்லதுதான். ஆனா அதுக்கு தெரியாம அதை பாத்து ரசிச்சு பாருங்க.
கடவுளை நேர்ல பாத்தாகூட அவ்ளோ சந்தோஷம் ஆனத்தம் வராது.
நிலா தயிர் சாப்பிடும் போட்டோ நிறய அந்த டைப்பில் இருக்கு.
//Naan Nila-va switch kitta kondu poyi niruthippen.....light podu chellam....podum pothu vai thirappa.....good job..ippo light off pannu chellam.....appo marupadi vai thirappa.....oru 5-6 vai ipdi pogum....appuram thannila kaiya nanaikka vachu oru 5 vai......colour colour-a leaves eduthu kuduthu oru 5 vai....good luck//
பொன்னாத்தாவோட வெவரத்த பாத்தீங்களா? என்னா ஒரு வில்லத்தனம்? அவங்க ஊட்டுகார எப்படி ரவுண்ட் கட்டி அடிக்கறாங்கன்னு தெரியல. ( ப்ளாக் ல சண்டைக்கோழின்னு பேர் வெச்சுட்டீங்க பொன்னாத்தா, அதுனாலதான் இப்படி ஒரு கமெண்ட் :P )
இந்த தடவை ஊருக்கு வரும் போது அம்மாவை சோறு ஊட்ட சொல்லி கேக்க போறேன். :-)
ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க. கலக்குங்க.
கடைசி நான்கு வரிகள் நெஞ்சை உறுத்தும் யதார்த்தம்...
நன்றி SK, Carryon
நன்றி ஸ்ரீராம் முதல் வருகைக்கு
நன்றி நிலா ப்ரெண்ட் முதல் வருகைக்கு.
நன்றி அமுதா
நன்றி ஜீவன்
ஆகா ஆகா - செல்லத்துக்கு பப்பு மம்மு ஊட்றது சுகம்தானே ! கவலை வேண்டாம் - கடைசிக் கவிதை எல்லாம் கற்பனையில் தான் - நிஜ வாழ்வில் இல்லை.
Post a Comment