20 October 2008

அது ஒரு காலம் கண்ணே கார்காலம்



ஒரு மழைக்காலத்தின்
இரவில்

மெல்லிய குளிரின்
கனம் தாங்காமல்
கம்பளி போர்த்திக்கொண்ட
போது
உணர்ந்தேன்
நண்பனே

நம் கடைசிப்பிரிவின்
கைக்குலுக்கல்களின்
வெம்மையை
.

12 comments:

புதுகை.அப்துல்லா said...

அட ஆயிரம் அர்த்தம் வருதே!

சந்தனமுல்லை said...

மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள்!!
கவிதை மிக இயல்பாய் வருகிறது உங்களுக்கு!..பொறாமையாயும் இருக்கிறது எனக்கு சிலசமயம்!!

குடுகுடுப்பை said...

நல்லா இருக்கு கவிதை.

//அட ஆயிரம் அர்த்தம் வருதே!//

சரியா சொன்னீங்க.

தமிழ் அமுதன் said...

நல்லாஇருக்கு! அமிர்தவர்ஷிணி அம்மா!
நல்லாஇருக்கு!

Unknown said...

முயற்சிக்கு வாழுத்துக்கள்
அ.மேடம் !

அமிர்தவரிஷினி என்பதால் மழை கவிதையோ?

இதே மாதிரி ஜாடையில் நெறைய கவிதை வந்து விட்டது.

தயவு செய்து வித்தியாசமாக முயற்சியுங்கள்.

நான் ஒரு புதிய பதிவர் .
என்னுடைய கவிதைகள் /கதைகள்/
கட்டுரைகள் படித்து விமர்சிக்கலாம்.

raviaditya.blogspot.com

Divyapriya said...

first time here...
நல்லா இருக்கு :))

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

நல்ல கவிதை! எளிமையான வரிகளில் ஆழமான கவிதை!

அமிர்தவர்ஷினி அம்மா said...

நன்றி புதுகை அண்ணா. (ப்ளீஸ் அந்த 1000 அர்த்தத்தையும் சொல்லவும்)

நன்றி முல்லை

நன்றி குடுகுடுப்பை. நீங்களும்தான்.

நன்றி ஜீவன்.

நன்றி முதல் வருகைக்கு திவ்யப்ரியா.

நன்றி ரவிசங்கர். (இந்தக்கவிதை இப்போது எழுதியதல்ல. எழுதி 4 வருடங்கள் ஆகிவிட்டன. ஒருநாள் அறிவுமதி அண்ணாவின் நட்புக்காலம் படித்து அதன் தாக்கத்தில் எழுதியது. இதை அவரிடமே சொல்லி கவிதை இருந்த டைரியை நீட்டினேன். படித்துவிட்டு பென்சிலால் ஒரு டிக் செய்துவிட்டு நல்லா இருக்கும்மா என்றார்)

நன்றி முதல் வருகைக்கு சுடர்

அமுதா said...

நல்லா இருக்கு...

Unknown said...

கவிதை நாலு வருடம் பழசுதான்.ஆனால் காதல் இதை விட ரொம்ப பழசு. நிறைய படியுங்கள்.கிழ் உள்ள ஹைகூ பர்ருங்கள். நான் எழுதவில்லை:-

விழுந்த மலர்
திரும்ப கிளைக்கு செல்கிறது
வண்ணத்து பூச்சி!

என்னுடைய “ஒரு ரயில்வே கேட்” கவிதையை பற்றி கொஞசம் சொல்லுங்கள்.

ந்ன்றி சகோதரி!

அன்புடன் அருணா said...

மிக அருமையான வரிகள்
அன்புடன் அருணா

cheena (சீனா) said...

நல்ல கவிதை. நட்பின் பிரிவு அவ்வப்பொழுது மனதினை வருத்தும். நெஞ்சினில் நிழலாடும்.