15 October 2008

சினிமானுபவங்கள்

என்னைய எழுத சொல்லி வற்புறுத்திய (!?!) சந்தனமுல்லை மற்றும் குடுகுடுப்பையாருக்கும் நன்றி. (ஏண்டா சொன்னோம்னு இருக்குல்ல)

எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்.

முதல் அனுபவம்: என்ன படம்னுலாம்னு நினைவில்லை. ஊர்ல எங்க அம்மாவோட பாத்தது. தரை (மண்) டிக்கெட், சேர்(கட்டை சேர்) டிக்கெட், என்னை சேர்ல உக்கார வெக்கலைன்னு அழுதுகிட்டே தூங்கிட்டேன்.
அப்புறம் எதோ ஒரு சாமி படம். இது நல்ல ஞாபகமிருக்கு. கடைசியில ராதாரவின்னு நினைக்கிறேன். அவரை சுட்டுடுவாங்க. அவர் சுடப்பட்டு உடம்பெல்லாம் ரத்தமாகி செத்துடுவார். இதைப் பாத்துட்டு அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு இன்னொரு படம் பார்க்கிறேன். அதில் அதே ராதாரவி உயிரொடு இருக்கிறார்.
எனக்கு அந்தப் படத்தில் மனம் செல்லவேயில்லை. எனது மனம் முழுதும் எப்படி செத்தவர் திரும்பி வந்தார்னுதான் சந்தேகம்.

கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
தசாவதாரம். நான், அமித்து, அமித்து அப்பா மற்றும் அவரின் நண்பர் குடும்பம், மாயஜால் அரங்கில் பார்த்தோம். நான் பாதிவரை படம் பார்க்கவில்லை. அமித்துவை தான் பார்த்துகொண்டு இருந்தேன். இடைவேளை வரை ஒரு சிறு அழுகை கூட இல்லாமல் சும்மா சூப்பரா ரசிச்சாங்க.

கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?பிரிவோம் சந்திப்போம். வீட்டில் வீ சி டியில் பார்த்தேன். கொசு கடித்ததைதான் உணர்ந்தேன்

மிகவும் தாக்கிய தமிழ் சினிமா?

அந்தக் கொடுமைய எப்படி சொல்றது."செல்வம்"ன்னு ஒரு படம். இயக்குனர் அகத்தியன் இயக்கியது.எனக்கு அந்த நடிகரை ஆம் நன்தா அவரை ரொம்ப பிடிக்கும் (ஹி ஹி)அதனால ஃப்ரெண்டோட பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ. சக்தி அபிராமி தியேட்டர்.3 1/2 மணி ஷோ. 3 3/4 வரை ஆரம்பிக்கவே இல்லை. அப்புறம் ஒரு வழியா 4 மணிக்கு ஆரம்பிச்சாங்க.மொத்தம் 12 பேர் அந்த ஹாலில்.நான், எனது ஃப்ரெண்ட், ஒரு 45 வயது பெண்மணி, 6 வாலிபர்கள், மீதி மூவர் நடுத்தர வயது ஆண்கள்.ப்பா மண்டை காஞ்சிடுச்சி. நானும் எம் ஃப்ரெண்டும் ஒருத்தர ஒருத்தர் பாத்து சிரிச்சிக்கிறதை தவிர வேறு வழி இல்லை.இதுல கொடும என்னன்னா, படம் முடிஞ்சி வெளியே வந்தா,நடிகர் நந்தா, அப்படத்தின் இயக்குனர், ப்ரொடியூசர் எல்லாம் இருக்காங்க.அதில் அப்பட ப்ரொடியூசர் மேடம் படம் நல்லா இருக்கா என்று கேட்டாரே பார்க்கலாம். ஒரே ஓட்டம்தான். ஆனா அந்த ப்ரொடியூசரை பாக்க ரொம்ப பாவமா இருந்துச்சி.

மற்றபடி என்னை பாதித்த சினிமா

உதிரிபூக்கள், நீங்கள் கேட்டவை, குருதிப் புனல், அன்பே சிவம்

உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா-அரசியல் சம்பவம்?

அப்ப அப்ப நடக்கிற நடிகர்களின் அரசியல் ப்ரவேசங்கள்


தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

ஆனந்த விகடனின் சினிமா விமர்சனம்.

கிசுகிசு ஏரியா நோ. ஒற்றை எழுத்து நடிகை, மீசை நடிகர் என்று ஆரம்பித்தவுடன் யாராயிருக்கும் அவர் என்று ஆராய்வதிலே பாதி நேரம் வேஸ்ட். அதனால் இந்த ஏரியா கொஞ்சம் அலர்ஜி.

தமிழ் சினிமா இசை?

MSV யில் இருந்து இப்போதைய யோகி.பி வரை நல்ல பாடல்கள் எதுவாக இருப்பினும் ஐ பாடில் டவுன்லோட் தான்.

தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

நான் பார்த்த வேற்று மொழி திரைப்படம் ஜுராசிக் பார்க் மற்றும் கடந்த வாரம் சன்னில் பார்த்த அனகோன்டா.

தாக்கிய படங்கள் ஜாக்கி சானுடையது. உபயம் விஜய் டிவி.

தமிழ் சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

நா. முத்துக்குமார் மற்றும் அறிவுமதியுடன் கொஞ்சம் தொடர்பு இருந்தது.அதுவும் கவிதைக்காகவும் கவிதை நூல்களுக்காகவும். இதனால் நான்தான் மேம்பட்டேன்(!?!)


தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ஏதோ அப்ப அப்ப அமீர், தங்கர், சேரன், சசிகுமார் மாதிரி வந்து ஏதோ செய்றாங்க.
ஆனா நம்ம ஹீரோங்க எல்லாம் பன்ச் டயலாக் பேசியும், ஹீரோயினுங்க குட்டை பாவாடை டேன்ஸ் ஆடியே அதையெல்லாம் காலி பண்ணிடறாங்க.

அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாசாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

பத்திரிக்கைகள் சர்க்குலேசன் தான் பாதிக்கப்படும்.

அப்புறம் உலக தொலைக்காட்சி வரலாற்றில் என்ற புகழ் பெற்ற வாசகம் வழக்கொழிந்து போயிருக்கும்.

தமிழ் மக்கள் மெகா சீரியலில் மூழ்கி முழு பைத்தியமாக வாய்ப்புகள் அதிகம்.

நான் அழைப்பது

ரம்யா

மற்றவரை எல்லாம் ஏற்கனவே அழைத்துவிட்டார்கள்.

12 comments:

புதுகை.அப்துல்லா said...

//ஊர்ல எங்க அம்மாவோட பாத்தது. தரை (மண்) டிக்கெட், சேர்(கட்டை சேர்) டிக்கெட், என்னை சேர்ல உக்கார வெக்கலைன்னு அழுதுகிட்டே தூங்கிட்டேன்.
//

அட !நம்பள மாதிரியே நீங்களும் சென்னைக்கு வந்தேறியா?

தமிழ் அமுதன் said...

சூப்பர் கலக்கிட்டிங்க! அப்புறம் அந்த மண்ணுதரை தியேட்டர்ல பார்த்த படம் பேரு என்ன? சொன்னாதான்!!

அப்புறம் எதோ ஒரு சாமி படம். இது நல்ல ஞாபகமிருக்கு. கடைசியில ராதாரவின்னு நினைக்கிறேன். அவரை சுட்டுடுவாங்க. ''அவர் உடம்பெல்லாம் செத்துடுவார்''

அது எப்படிங்க? உடம்பெல்லாம் செத்துடுவார்? சின்ன வயசுல பார்த்தது சரி விடுங்க!!

குடுகுடுப்பை said...

என்னைவிட உங்களுக்கு சினிமா அறிவு அதிகம்.

நல்லா எழுது இருக்கீங்க

அமிர்தவர்ஷினி அம்மா said...

இல்லை புதுகை அண்ணா, நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையே.
எங்களின் சொந்த ஊர் (அம்மா, அப்பா பிறந்து வளர்ந்தது) செஞ்சி பக்கத்தில்.
வருடத்தில் ஒரு வாரம் திருவிழாவை முன்னிட்டு அங்கே போய் டேரா.
அந்த கால கட்டத்தில் நடந்தேறிய வைபவமே அது.

அமிர்தவர்ஷினி அம்மா said...

நன்றி ஜீவன்

அந்தப் படம் ம்ஹீம் ஞாபகமே வர்ரவேயில்லை.

சரி சரி சரி ஆபிஸ் வாழ்க்கையிலே இதெல்லாம் சகஜமப்பா.

அமிர்தவர்ஷினி அம்மா said...

நன்றி குடுகுடுப்பை.

அமுதா said...

நல்லா எழுதி இருக்கீங்க...

சந்தனமுல்லை said...

//எனது மனம் முழுதும் எப்படி செத்தவர் திரும்பி வந்தார்னுதான் சந்தேகம்.
// :-)..யராவது ரெண்டு பேர் சண்டை போட்டாங்கன்னா, ஹீரோதன் ஜெயிக்கனும்னு ரொம்ப கஷ்ட்டப்பட்டு வேண்டிப்பேன்.அப்போ பேர்லாம் வேற தெர்ரியது..ஆனா இந்த கலர் ட்ரெஸ் போட்டவங்க தான் ஜெயிக்கனும்னு வேண்டுதல் வேற!!


//நடிகர்களின் அரசியல் ப்ரவேசங்கள்//

உண்மைதான்! இங்க வீட்டுல கத்து கொடுத்த நல்ல பழக்கம் என்ன்னைக்கும் நடிகனுக்கு மட்டும் ஓட்டு போடாதே!!


நல்லா எழுதியிருக்கீங்க!! நல்ல சிந்தனைகள்!!

ஆயில்யன் said...

சந்தனமுல்லை said...
//எனது மனம் முழுதும் எப்படி செத்தவர் திரும்பி வந்தார்னுதான் சந்தேகம்.
// :-)..யராவது ரெண்டு பேர் சண்டை போட்டாங்கன்னா, ஹீரோதன் ஜெயிக்கனும்னு ரொம்ப கஷ்ட்டப்பட்டு வேண்டிப்பேன்.அப்போ பேர்லாம் வேற தெர்ரியது..ஆனா இந்த கலர் ட்ரெஸ் போட்டவங்க தான் ஜெயிக்கனும்னு வேண்டுதல் வேற!!
//

ரிப்பிட்டிக்கீறேன் !

தங்கச்சி சொல்றமாதிர்யேத்தான் நானும் கூட :))))

ஆயில்யன் said...

//உண்மைதான்! இங்க வீட்டுல கத்து கொடுத்த நல்ல பழக்கம் என்ன்னைக்கும் நடிகனுக்கு மட்டும் ஓட்டு போடாதே!!///


குட்!

வெரிகுட்!

வெரிவெரிகுட்:)

Anonymous said...

//யோகி.பி//

:-) நல்லா இருக்கு...!!!

cheena (சீனா) said...

நோ கமெண்ட்ஸ்