உன்னை நானும்
என்னை நீயும்
நன்றாக புரிந்துகொண்டோம்
திருமணத்திற்குபிறகு
கண் கெட்ட பிறகு
திசை நோக்கி நமஸ்காரம்
செய்யலாம்
ஆனால்
நாம்
சூரியனையே விழுங்கி விட்டு
அகப்படும்போதெல்லாம்
அனல் கக்கும்
பறவைகளானோம்
அனல் தணிய
மழை பெய்யக்கூடும்.
அதுவரை
ஒடியாதிருக்கட்டும்
நம் சிறகுகள்
இப்படிக்கு காதல்
10 comments:
வாவ் சூப்பர் அம்மா..!! :)) juz now saw u rly..!! :))
Thanks Srimaa
சொல்லிக்கிற மாதிரி கொஞ்சம் கவிதை எழுதுவேன்
கல்யாணத்திற்கு முன்.
காதல் கணவரையே கரம் பிடித்தால்
கவிதை எழுதுவதில்லை கல்யாணதிற்கு பின்.
மழலையின் வரவிற்கு பின்னர்
மீண்டும் புதுப்பிக்க ஆரம்பித்திருக்கிறேன்
என்னை நான்.
அதன் பிள்ளையார் சுழிதான்
மேற்கூறியது.
வாவ் உங்க பதிலே ஒரு கவிதையா இருக்கே..!! :)) கலக்கறீங்க... வாழ்த்துகள்..!! :))) அப்பறம் உங்களுக்கு என்னைவிட ஒரு ரெண்டு, மூணு வயசுதான் அதிகமிருக்கும்.. ஆனா நான் உங்கள அம்மா-ன்னு சொல்றதுல உங்களுக்கு ஏதாவது அப்ஜெக்ஷன் இருக்கா?? இருந்தா சொல்லிடுங்க..!! :)) நான் உங்க ப்ளாக் நேம்ல இருக்கற அமிர்தவர்ஷினிய கட் பண்ணிட்டு அந்த அம்மாவ மட்டும் எடுத்துக்கிட்டேன் ஹி ஹி ஹி..!! :))
அம்மா என்று கூப்பிடுவதில் ஆட்சேபனை ஏதும் இல்லை. ஆனால் அமித்துவை கட் பண்ணாதேப்பா.
//அதுவரை
ஒடியாதிருக்கட்டும்
நம் சிறகுகள்//
கலக்கல்.. :))))
Thanks for yr visit saravanan
அடடா செண்டிமெண்ட்...!! ;)) ஓகே அஅம்மான்னு கூப்பிடறேன்.. அ பார் அமிர்தவர்ஷினி.. அம்மா நீங்க.. ஓகேவா?? ;))))
:-))...நல்ல கவிதை..வாழ்க்கையை கவிதையாக்கும் திறமை வாய்க்கப் பெற்றிருக்கிறீர்கள்!!
ஸ்ரீமா ரைட் ரைட்
நன்றி முல்லை (அனுபவங்கள் தானே வாழ்க்கையை நடத்துகிறது)
பொதுவாக காதலர்கள் கவிதை எழுதுவதும் ( சோகக் கவிதை ? ) - கவிஞர்கள் காதல் செய்வதும் இயல்பு. கவிதை நன்றாக இருக்கிறது. நல்வாழ்த்துகள்.
Post a Comment