29 January 2010

அமித்து அப்டேட்ஸ்

அடி என்ச் செல்லம், அடிப்பட்டு, அடி ஏன்த் தங்கோம்

இதெல்லாம் அமித்துவுக்கு என் மீது அதிக ஆசையாகிவிட்டாலோ, அவள் விரும்பிய மாதிரி நான் நடந்து கொண்டாலோ என்னைப் பார்த்து சொல்வது. சமயத்தில் இந்த செல்லக்கொஞ்சலுக்குள் அவளின் அப்பா, ஆயா அனைவருமே அடக்கம்.

....

அமித்துவின் சேட்டை தாங்கமுடியாமல் கோபமாக பேசிவிட்டு, கிள்ளிடுவேன் என்றதற்கு

ஏன் என்கிட்ட சண்ட போட்ற எச்சோ

............

வர்ஷா, உள்ள இருந்து அந்த க்ளிப் எடுத்துட்டு வாம்மா.

இர்ம்மா, பாப்பாக்கு (அவளின் பொம்மைக்கு) சாப்பாடு ஊட்றன் இல்ல, அவ்ளே துப்பூறா

..........

நான் சம்மேல் (சமையல்) செய்றேம்மா. இரண்டு ஸ்பூன், தட்டு, கிண்ணங்கள் சகிதம் ஹாலில் உட்கார்ந்துக்கொள்ளவேண்டியது.

ஒரு தட்டில் ஸ்பூன் வைத்து, இந்தா எச்சோ, சாப்புடு.

என்னாதும்மா இது

ரச்சம் புவா, ச்சூப்பரா இர்க்கும், ஆப்டேன்.

........

ஒரு விடுமுறை நாளில் அமித்து அப்பா ஆபிஸ் கிளம்ப நேரிட, தானும் உடன் வருவதாக அழுகை.

லேட்டாயிடுச்சும்மா, அப்பா சீக்கிரம் வந்துடுவேம்மா, டாட்டா சொல்லு

அப்பா நானும் வர்ரேன் ப்பா (அழுது கொண்டே)

வர்ஷினி குட் கேர்ள் இல்ல, சொன்னா கேட்பாங்களே, அப்பாக்கு பை சொல்லு.

இல்ல, நானு பேடு கேளு (பேர்ட் கேள்), நான்னும் வர்ருவேன் ஒங்கூட

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

............

இந்தப் பூ பார்ரேன், ஆய்யா மாதிரி இர்க்கு

ஆயா மாதிரி இருக்கா?

ஆம்மாம், குண்டா இர்க்கு (அவளின் ஆயாவைப் பார்த்து சிரித்துக்கொண்டே)

............

ஒரு சின்ன சொப்பு தட்டை எடுத்துக்கொண்டு என்னிடம் நீட்டி,

இந்தாங்க, கேக்கு, எங்க பாப்பாக்கு ஆப்பி பத்தடே டூ யூ, எத்துக்கோங்க.

சரிங்க, எடுப்பதைப் போல பாவனை செய்கிறேன் நான்.

இந்தாங்க, வர்ச்சினிக்கு, ஆங்க அம்மாக்கு, அப்பாக்கு.

சரிங்க, மீண்டும் பாவனை.

பை, நேத்திக்கு வர்ரேங்க

.........

டிக்காரி டிவி வைய்யி (டிஸ்கவரி சேனல்)

ஜூப்புராவ சிங்கம் கடிக்க வேண்ணா சொல்லும்மா, பாவோம் இல்ல, கடிக்க வேண்ணா சொல்லு

...

என்னாப்பா அது

அதுவா ஒரு ஆளை முதலை அடிச்சுடுச்சும்மா

அச்சுச்ச்சோஓ, இப்ப ன்னா பண்ரதுப்பா, அம்ப போய்யி கொம்ப எத்து அடிக்கலாமா கோக்கோடைல?

...

ஒட்டகச்சிவிங்கிக்கு மேடம் வைத்திருக்கும் பெயர் ஒட்டகவஞ்சி !!!!!

...

வர்ஷினி, இங்க வாம்மா

இர்ரு பாப்பா பக்கிறேன்ல, வரேய்றன்ல (வரையறேன்), கூப்புர்ர

ம்மா எங்க க்கூல்ல இன்னிக்கு டெஸ்ட்டு

ஓம் வொர்க்குல்லாம் முச்சிட்டேனே

எங்க மிச்சு என்ன இபி புச்சு முத்தா குத்தாங்ளே

ஒருநாள் விடிகாலை அவசர அவசரமாய் எழுப்பி, எச்சோ, நான் இன்னிக்கு க்கூலுக்கு போமாட்டேன், எங்க க்கூலு இன்னிக்கு லீவ்வு. நா போம்மாட்டேன் !!

கார்த்தி, அது எம் புக்கு, அத எக்காத, அப்பேர்ரம் எங்க மிச்சு அப்பாய்ங்க !!!

(இவ்வளவு கூத்துக்கும் மேடம் ஸ்கூல் போகவில்லை என்பதுதான் ஹைலைட்டே. அக்கம் பக்கத்து குழந்தைகள் ஸ்கூல் போவதை வைத்தும், அவர்கள் பேசுவதை வைத்துமே மேடம் பில்டப் ஸ்டார்ட் ஆகிவிட்டது)

....

சாண்டாக்ளாஸ் மாஸ்க்கை அமித்துவின் தாத்தா போட்டுக்கொள்ள,

கழ்ட்டூ, இதெல்லாம் பச்சங்க தான் போடுவாங்க, கழ்ட்டு தாத்தா

........

ஏன் கதுவ ச்சாத்துற, ஆயா வர்ருவாங்கல்ல, கதுவ தெற.

அவளின் கால் கொலுசை கழட்டி நீட்டாக வைத்துவிட்டு பார்ரூ பாம்பு மார்ரியே இர்க்கு. இபி கொல்ச கழ்ட்னா ஆயா அப்பாய்ங்க.

........

மாரல் ஸ்டோரி புக்கில் படத்தோடு இருக்கும் சீச்சி இந்தப் பழம் புளிக்கும் நரிக்கதையை எடுத்துக்கொண்டு

த்தோ, ஒரு ஊல்ல ஒரு நர்ரி இந்துச்சா, இபியே வந்துச்சா, அப்பேர்ரம் ஒரு எலி வந்துச்சா, அப்ப ஒர்ரு சிங்கம் வந்துச்சா, மாட்டிக்கிச்சா, ம்ம்ம்ம், அப்பேர்ரம் அபியே எட்டி எட்டி பாத்துச்சாம், வட எத்துன்னு போச்சாம். அப்போ அப்போ ஒர்ரு ....தாட்சை (திராட்சை) இந்துச்சா....

டேய், கதய மாத்தி மாத்தி சொல்லி காமெடி பண்றடா - இது சஞ்சு

ஏய், பாப்பா கத சொல்றன்ல, ஆம்பரின்னு சொல்லூற. பாரூ எச்சோ, அக்காவ, பேச்சுறா, ஏய் பேச்சாத.

........

கார்த்தி, சஞ்சு, அமித்து மூவரும் விளையாடி முடித்தபின் கார்த்தி (எதிர் வீட்டுச் சிறுவன்) தூக்கம் வருது பாப்பா, நான் போயி சாப்ட்டு தூங்கப்போறேன் பை. உடன் சஞ்சுவும் பை சொல்லிவிட்டு கிளம்பிவிட,

என் பெண்டுலாம் போய்ட்டாங்க, நானும் ப்போர்ரேன் எச்சோ

ஃபெண்டா, யார் அது?

கார்த்தி, சஞ்சூ ஆங்கல்லாம் என் பெண்டு, நாம் போய்யி விளாடப்போறேன் ஆங்க வீட்டுல.

....

இப்பல்லாம் நான் கேள்வி கேட்கறதோட சரி, மேடம்கிட்ட இருந்து வர்ர ரிப்ளையை பார்த்துவிட்டு மேற்கொண்டு எதுவும் கேட்கமுடியாமல் அப்படியே ங்ஙே’வாகிவிடுகிறேன்.

38 comments:

சந்தனமுல்லை said...

/
இர்ம்மா, பாப்பாக்கு (அவளின் பொம்மைக்கு) சாப்பாடு ஊட்றன் இல்ல, அவ்ளே துப்பூறா/

அதானே...நீங்க வேற ஏன் டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டு! :-))))))

/ஒருநாள் விடிகாலை அவசர அவசரமாய் எழுப்பி, எச்சோ, நான் இன்னிக்கு க்கூலுக்கு போமாட்டேன், எங்க க்கூலு இன்னிக்கு லீவ்வு. நா போம்மாட்டேன் !!/

அமித்து அம்மா..ரொம்ப பிரகாசமா இருந்து இருக்குமே உங்க முகம்...வாங்கின பல்புக்கு! :-))

மாதவராஜ் said...

இப்பதான் முல்லை அவர்களின் பதிவு படித்து ரசித்து வந்தேன். இங்கும் கொள்ளையழகாய் குழந்தை திகட்டவே திகட்டாமல்....

sathishsangkavi.blogspot.com said...

//வர்ஷினி குட் கேர்ள் இல்ல, சொன்னா கேட்பாங்களே, அப்பாக்கு பை சொல்லு.

இல்ல, நானு பேடு கேளு (பேர்ட் கேள்), நான்னும் வர்ருவேன் ஒங்கூட//

பாப்பாகிட்ட தினமும் பன்னு வாங்குவீங்க போல....

KarthigaVasudevan said...

க்யூட் அமித்து...
அவ பேசறதை நேர்ல பார்த்தா மாதிரி என்ன ஒரு அழகு மழலை உங்க எழுத்துல! சூப்பர் சாரதா. :)
//இந்தப் பூ பார்ரேன், ஆய்யா மாதிரி இர்க்கு

ஆயா மாதிரி இருக்கா?

ஆம்மாம், குண்டா இர்க்கு (அவளின் ஆயாவைப் பார்த்து சிரித்துக்கொண்டே)//

நீங்க தான சொல்லிக் கொடுத்திங்க அமித்துக்கு !!! :)))

கமலேஷ் said...

என் கண்ணுல பாப்பாவோட
சேட்டைகள் அப்படியே விரிகிறது...சொல்ல தெரியாத ஒரு சந்தோசமான உணர்வு...

அன்புடன் அருணா said...

சரி சரி பை, நேத்திக்கு வர்ரேங்க! :) சூப்பர்!

விக்னேஷ்வரி said...

ஹாஹாஹா... கொள்ளையழகு மொத்தமும். அன்பு முத்தங்கள் அமித்துக்கு.

க ரா said...

குழந்தைகளின் உலகம் அற்புதமானது. நீங்கள் அதை அழகாக பதிவிட்டு இருக்கிறிர்கள். பகிர்விற்கு நன்றி.

ப்ரியமுடன் வசந்த் said...

குழந்தை கண்நூறுபட்டுடும் சுத்திபோடுங்க சகோ...

முழுசும் குழந்த மாரியே பேசி சாரி வாசிக்கவச்சுட்டீங்க..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஒரே ஆம்பரி தான் வர்ஷினியோட.. :))
அச்சோ வந்து எச்சோவை மிரட்டறமாதிரி என்னை மிரட்டிரப் போறா..

அ.மு.செய்யது said...

Ha ha ha this z the best !!!

//நேத்திக்கு வர்ரேங்க //

பெட்டர் நீங்க பின்நவீனத்துவம் அமித்துகிட்ட இருந்து கத்துக்கலாம்.

என்னா கட்டுடைப்பு.

பா.ராஜாராம் said...

அப்பா..

ஒரு முழு நீள நகைச்சுவை படம் பார்த்த நிறைவு அமித்தம்மா.

டாப் டு பாட்டம் கலக்கல் அமித்து!

வேலை டயர்ட் எல்லாம் போயி ஒரு fresh feeling!

thanks அமித்தம்மா,அமித்து குட்டீஸ்!

காமராஜ் said...

//(இவ்வளவு கூத்துக்கும் மேடம் ஸ்கூல் போகவில்லை என்பதுதான் ஹைலைட்டே. அக்கம் பக்கத்து குழந்தைகள் ஸ்கூல் போவதை வைத்தும், அவர்கள் பேசுவதை வைத்துமே மேடம் பில்டப் ஸ்டார்ட் ஆகிவிட்டது)//

மத்ததெல்லாம் அமித்து அப்டேட்ஸ் .
இது மட்டும் அமித்தம்மா அக்மார்க்.

வர்ஷாவுக்கு அன்பும் வணக்கமும்.

செந்தில் நாதன் Senthil Nathan said...

//பை, நேத்திக்கு வர்ரேங்க//

//ஒருநாள் விடிகாலை அவசர அவசரமாய் எழுப்பி, எச்சோ, நான் இன்னிக்கு க்கூலுக்கு போமாட்டேன், எங்க க்கூலு இன்னிக்கு லீவ்வு. நா போம்மாட்டேன் !!
//

ரசித்தேன்...

நட்புடன் ஜமால் said...

இர்ம்மா, பாப்பாக்கு (அவளின் பொம்மைக்கு) சாப்பாடு ஊட்றன் இல்ல, அவ்ளே துப்பூறா
]]

ஆஹா! என்னே ஒரு தெளிவு

ஆப்டேன்

ஒட்டகவஞ்சி - நல்லாயிருக்கே(புனைவர்கள் கவணித்திற்கு)


நீங்க ஆகுங்க ‘ஙே’ நாங்க நேத்திக்கி வாறோம் பை

Vidhoosh said...

////இந்தப் பூ பார்ரேன், ஆய்யா மாதிரி இர்க்கு

ஆயா மாதிரி இருக்கா?

ஆம்மாம், குண்டா இர்க்கு (அவளின் ஆயாவைப் பார்த்து சிரித்துக்கொண்டே)////
இதுல தெரிஞ்சிருச்சுங்க உங்க வில்லத்தனம். :))

ரொம்ப ரசிக்கிறேன்.

☀நான் ஆதவன்☀ said...

ஒட்டகவஞ்சி! :)))))

பை பை அமித்து அம்மா
இனி நான் நேத்திக்கு வர்ரேன் :))

Anonymous said...

//ஜூப்புராவ சிங்கம் கடிக்க வேண்ணா சொல்லும்மா, பாவோம் இல்ல, கடிக்க வேண்ணா சொல்லு//

ஐய்யய்யோ, அதெல்லாம் குழந்தையைப்பாக்க விடாதீங்க

"உழவன்" "Uzhavan" said...

:-))
 
கொடுத்து வைச்சிருக்கனும்

தமிழ் அமுதன் said...

///இர்ம்மா, பாப்பாக்கு (அவளின் பொம்மைக்கு) சாப்பாடு ஊட்றன் இல்ல, அவ்ளே துப்பூறா///

;;;))

பின்னோக்கி said...

அனைத்தும் கவிதை. இதனைப் படிக்க போர் அடிப்பதே இல்லை. சிறந்த நகைச்சுவை குழந்தைகளிடம் தான் இருக்கிறது.

இவ்வளவையும் மறக்காமல் தொகுப்பது கடினம். அருமை.

Karthik said...

:) good one...

ஸ்வர்ணரேக்கா said...

//அடி என்ச் செல்லம், அடிப்பட்டு, அடி ஏன்த் தங்கோம்//

//ரச்சம் புவா, ச்சூப்பரா இர்க்கும், ஆப்டேன்.//

பாப்பா நல்லா follow பண்றா உங்கள...

Deepa said...

ஆமாம், கேட்கக் கேட்க (படிக்க்வும்) திகட்டாத மதுரமான மொழி அமித்து மொழி!

//இல்ல, நானு பேடு கேளு (பேர்ட் கேள்), நான்னும் வர்ருவேன் ஒங்கூட//
//அடி என்ச் செல்லம், அடிப்பட்டு, அடி ஏன்த் தங்கோம்// கிறங்கடிக்கிறாள்!
செல்லத்துக்கு திருஷ்டி சுற்றிப் போடுங்கள். :-)

வேலன். said...

அமித்து அப்டேட்ஸ் அட்டகாசம்
வாழ்க வளமுடன்,
வேலன்.

Dhiyana said...

அமித்து குட்டி வளர்ந்துக்கிட்டே இருக்காங்க.. பொம்மை விளையாட்டு அதுக்குள்ளே ஆரம்பிச்சாச்சா?

அம்பிகா said...

குழலினிது, யாழினிது, என்று சும்மாவா சொன்னாங்க.
மிக ரசனையான பதிவு அமித்தம்மா.

அமிர்தவர்ஷினி அம்மா said...

அனைவரின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி :)

அமுதா said...

மழலை மொழியை அழகா எழுதி இருக்கீங்க. சமையல், பேட் கேர்ள், பர்த்டே எல்லாம் யாழ் அப்படியே இன்னும் பண்ணும் :-)

தாரணி பிரியா said...

குட்டி பொம்மை வாங்கி தந்தீங்களா. இத்தனை நாள் படிச்சுக்கிட்ட இருந்ததை அமித்து குரலை நேத்து கேட்டதுல ரொம்ப சந்தோசம் அமித்து அம்மா

ஹுஸைனம்மா said...

குழந்தைகள் இன்றை நேற்றாக்குவதும், நேற்றை நாளையாக்குவதும் காலம்காலமாக ரசித்து வருவதுதான். ஆனாலும் நீங்க எழுதிருக்கதப் படிக்கும்போது இப்பவும் புன்னகை வரவைக்குது. கேக்கணும்போல இருக்கு. இருங்க, தங்கச்சி மக வளர்ந்து வர்றா. அவள்ட்ட இதயெல்லாம் காதுகுளிர ரீப்ளே பண்ணிக் கேட்டுக்கிறேன்!!

Sakthi said...

hm okay.......!

Unknown said...

Amithu... mmmm :))))))))

Sakthi said...

இப்பல்லாம் நான் கேள்வி கேட்கறதோட சரி//

e[[avume naanum kelvi kekurathoda sari.......

Thamira said...

ரசனை.

Paleo God said...

அமித்து = சமத்து..:))

Sanjai Gandhi said...

:))))))))))))))))

குழந்தைகளுடன் வாழும் உலகம் சுவாரஸ்யமானது.. இந்த 3 வருஷத்துல எங்க தெருல எனக்கு இருக்கும் ரெண்டே ரெண்டு ஃப்ரண்ட்ஸ் எதிர் வீட்டு குட்டிப் பசங்க தான்.. பூஜாகிட்ட பேசி சமாளிக்க முடியாது.. ரோஹித் சரியா பேசலை.. ஆனா சேட்டைத் தாங்கறதில்லை.. அமித்துக்கு சஞ்சுன்னு ஒரு ஃப்ரண்ட் இருக்கிறது சூப்பரு.. :))

இரசிகை said...

nice.............