11 January 2010

பார்த்தும் பாராத விநாடிகள்

ஒரு நிமிடத்திற்கும்
குறைவான நொடிகளே
தேவைப்படும்

சட்டென புறங்காலில்
ஏதோ பட்டதைப்போல
திரும்பவேண்டும்

நேரம் பார்ப்பதைப்போல
மணிக்கட்டை நோக்கி
தலை கவிழவேண்டும்

கடிகாரமில்லையெனில்
கைபேசியை தீவிரமாய்
ஆராயவேண்டும்

கையில் ஒரு குழந்தையிருப்பின்
இன்னும் வசதி
எங்கோ வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருக்கும்
குழந்தையிடம்
என்னடா ஆச்சு? என்று வினவ வேண்டும்

போதும்
இடைப்பட்ட இந்த நேரத்தில்
நீங்கள் பார்த்துப்பார்த்து பழகிய நபர்
தற்செயலாய் இப்போது பார்க்க நேரிட்ட
பழக விரும்பா நபர்
உங்களை கடந்திருப்பார்

உங்களை கடந்தவரின் பின்புறம் பார்த்து
அவரை நீங்கள் புறந்தள்ளிவிட்டதாய்
ஒருபோதும் நினையாதீர்கள்

இந்த உங்களின் கால அவகாசமும்
முகம் திருப்பலும்
அவருக்கு(ம்) தேவையாயிருந்திருக்கும்
பார்த்தும் பார்க்காதது போல
உங்களைக் கடக்க.

குறிப்பு: 'உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு' கவிதைப் போட்டிக்கான கவிதை

56 comments:

☀நான் ஆதவன்☀ said...

//குறிப்பு: உரையாடல் கவிதைப் போட்டிக்கான கவிதை//

சிங்கம் களம் இறங்கிடுச்சேய்!!! :)

☀நான் ஆதவன்☀ said...

//முகம் திருப்பலும்
அவருக்கு(ம்) தேவையாயிருந்திருக்கும்//

யதார்த்தம். இயந்திர வாழ்க்கையில் இது தினசரியாகிவிட்டது

T.V.ராதாகிருஷ்ணன் said...

arumai...vaazhththukal

Anonymous said...

//இந்த உங்களின் கால அவகாசமும்
முகம் திருப்பலும்
அவருக்கு(ம்) தேவையாயிருந்திருக்கும்
பார்த்தும் பார்க்காதது போல
உங்களைக் கடக்க.//

இது ட்விஸ்டு
வெற்றி பெறவாழ்த்துக்கள்

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நன்றாக இருக்கிறது.....

வெற்றிபெற வாழ்த்துகள்!

-ப்ரியமுடன்
சேரல்

சந்தனமுல்லை said...

ஆஹா..!

வாழ்த்துகள்! :-)

Vidhoosh said...

லேடி "ராஜாராம்"???

ஹேய். ரொம்ப ரொம்ப ரசிக்கிறேன். முதல் இருப்பதில் நிச்சயம் இந்தக் கவிதை இருக்கு.

-வித்யா

நட்புடன் ஜமால் said...

யதார்த்தமான நிதர்சணம்

வெற்றி பெற வாழ்த்துகள்.

அமுதா said...

அருமை... வாழத்துக்கள்.

ப்ரியமுடன் வசந்த் said...

ஒருவேளை அவர் நம்மை மதியாதார் தலைவாசல் மிதியாதே அப்படி நினைத்து மறுமுறை நம்மை அவர் காணும்போது முகம் திருப்பி சென்றாராயின்...?

கவிதைகளத்திலும் எதார்த்தம்..

வாழ்த்துக்கள் மேடம்...!

goma said...

பார்த்தும் பாராத வினாடியை வாசித்தபின் ஒரு சில வினாடிகள் கடிகார முட்கள் கூட ஓட மறந்து நின்று போயின.
அருமையான ‘சேம் சைட் கோல்’

ஆயில்யன் said...

நச்! ரகம் பாஸ் !

வாழ்த்துக்கள் :)

S.A. நவாஸுதீன் said...

ஆகா வடை போச்சே.

கடைசியா வந்து கதிகலங்க வச்சிட்டீங்களே அமித்தம்மா.

ரொம்ம்ம்ம்ம்ப நல்லா இருக்கு. வெற்றி (பெற்றமைக்கு) / பெற வாழ்த்துக்கள்.

Karthik said...

comments follow up..

Unknown said...

கவிதை நல்லா இருக்கு அமித்து அம்மா.

ஆனால், இன்னும் கொஞ்சம் வார்த்தைச் சிக்கனம் இருந்திருக்கலாம்ன்னு தோணுது. கொஞ்சம் rewrite பண்ணா கண்டிப்பாக ஜெயிச்சக் கட்சிக்குப் போக வாய்ப்புகள் இருக்கு. வாழ்த்துகள்.

பா.ராஜாராம் said...

அபாரம் அமித்தம்மா!

நுண்ணிய கவனிப்பும்,அதை அப்படியே பகிரும் லாவகமும்!

இதுதானே எங்கள் அமித்தம்மா!

வெற்றி பெற வாழ்த்துக்கள் அமித்தம்மா!

அண்ணாமலையான் said...

நல்லாருக்கு. பரிசு உங்களுக்குத்தான். (என் வாக்கு பலித்தா எனக்கு பாதி பரிசு)

imcoolbhashu said...

//இந்த உங்களின் கால அவகாசமும்
முகம் திருப்பலும்
அவருக்கு(ம்) தேவையாயிருந்திருக்கும்
பார்த்தும் பார்க்காதது போல
உங்களைக் கடக்க//

இது நச்னு இருக்கு!!!:-).

பா.ராஜாராம் said...

Vidhoosh said...

//லேடி "ராஜாராம்"???//

வித்யா,எனக்கு மேன் "அமித்தம்மா" வாய் இருக்க ஆசை.

:-))

அம்பிகா said...

வெற்றி பெற வாழ்த்துகள்,
அமித்துஅம்மா.

அம்பிகா said...

\\வித்யா,எனக்கு மேன் "அமித்தம்மா" வாய் இருக்க ஆசை.\\

இது நல்லாயிருக்கு.

Karthik said...

ஆவ்வ்.. ஒரிஜினல் கமெண்ட்ட காக்கா தூக்கிட்டு போய்டுச்சா?

here i go again..

//குறிப்பு: உரையாடல் கவிதைப் போட்டிக்கான கவிதை

Et tu amithu amma?! LOL. :)))

நல்லாருக்கு. வாழ்த்துக்கள். :)

நிஜமா நல்லவன் said...

வாழ்த்துக்கள் பாஸ்!

விஜய் said...

இது எனது முதல் வருகை

கலங்கடித்து விட்டீர்கள் தங்கள் வரிகளால்

(நமக்கு பரிசு கிடைக்காது போலிருக்கே )

வாழ்த்துக்கள்

விஜய்

Vidhoosh said...

///பா.ராஜாராம் said...
Vidhoosh said...
//லேடி "ராஜாராம்"???//
வித்யா,எனக்கு மேன் "அமித்தம்மா" வாய் இருக்க ஆசை.
:-))
January 11, 2010 1:47:00 PM GMT+05:௩௦///

எப்படி இருந்தாலும் எனக்கு ஆதர்சமாய் இருந்துவிடுங்கள் நீங்கள் இருவருமே... :))
ஒரு கட் அவுட் வைத்து அபிஷேகம் பண்ணும் அளவுக்கு ரசிகையாய் ஆகிக் கொண்டே இருக்கிறேன்.

குடந்தை அன்புமணி said...

கவிதை நன்றாக இருக்கிறது. அதிலும் அந்த கடைசி-

//இந்த உங்களின் கால அவகாசமும்
முகம் திருப்பலும்
அவருக்கு(ம்) தேவையாயிருந்திருக்கும்
பார்த்தும் பார்க்காதது போல
உங்களைக் கடக்க.//

பஞ்ச்.
வெற்றிபெற வாழ்த்துகள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல நல்ல ஐடியாக்கள் இருக்கு கவிதையில்.. :))
அருமை அமித்தும்மா..அதும் அவருக்கும் தேவையாயிருந்திருக்கும்ன்னு சொன்னது கொஞ்சம் மனசுக்கும் நிம்மதி.. :)

பா.ராஜாராம் said...

வித்யா...

//எப்படி இருந்தாலும் எனக்கு ஆதர்சமாய் இருந்துவிடுங்கள் நீங்கள் இருவருமே... :))
ஒரு கட் அவுட் வைத்து அபிஷேகம் பண்ணும் அளவுக்கு ரசிகையாய் ஆகிக் கொண்டே இருக்கிறேன்.//

நான் அமித்தம்மால்லாம்,கிளாஸ் மேட்ஸ் மாதிரி வித்யா.

நீங்கள் வாத்யார்,வாத்யாரே!

கும்பிடலாம் அல்லது கொண்டாடலாம் அல்லது பொறாமை படலாம் அல்லது வாத்யார் மாதிரி வரமுடியுமா?என தாழ்வு மனம் கொள்ளலாம்.

அதாவது என் ஆதர்சத்தின் கோட்டை முனியாண்டி(ஹி.ஹி..கவிதை விளம்பரம்) நீங்கள்!

அடுத்து,பேந்த பேந்த முழித்து கொண்டிருக்கும் கிளாஸ்மேட் அமித்தம்மா சிற்றுரை ஆற்றுவார்கள்.

உஷ்...

பா.ராஜாராம் said...

முத்துலெட்சுமி/முத்துலெட்சுமி said...
// நல்ல நல்ல ஐடியாக்கள் இருக்கு கவிதையில்.. :))
அருமை அமித்தும்மா..அதும் அவருக்கும் தேவையாயிருந்திருக்கும்ன்னு சொன்னது கொஞ்சம் மனசுக்கும் நிம்மதி.. :)//

:-))) claas!

விஜய் said..
(நமக்கு பரிசு கிடைக்காது போலிருக்கே )

ஆமப்பா..ஆமா..

பாலா said...

யதார்த்த வாழ்வியல் கவிதையாகும் போதது வாசகனை
இணக்கமாய் அணுகுகிறது
அருமைங்க நல்லா இருக்கு
வெற்றி பெற வாழ்த்துகள்

தமிழ் said...

வெற்றிபெற வாழ்த்துகள்

SK said...

கவிதையாய் சில நிதர்சனங்கள். :-)

வாழ்த்துக்கள்.

அ.மு.செய்யது said...

நேர்மையான கவிதை !!! யதார்த்தம்.

இப்படி நானும் பலமுறை செய்திருக்கிறேன்.வெற்றி பெற வாழ்த்துக்கள்
அமித்து அம்மா !!

காமராஜ் said...

ரொம்ப நல்லாருக்கு அமித்தம்மா

இ.பா.சிந்தன் said...

//நீங்கள் பார்த்துப்பார்த்து பழகிய நபர்
தற்செயலாய் இப்போது பார்க்க நேரிட்ட
பழக விரும்பா நபர்//
நடைமுறை யதார்த்தம் .............
வெற்றி பெற வாழ்த்துக்கள்

- இரவீ - said...

வெற்றிபெற வாழ்த்துகள்!

Deepa said...

அருமை.
வாழ்த்துக்கள் அமித்து அம்மா!

//எங்கோ வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருக்கும்
குழந்தையிடம்
என்னடா ஆச்சு? என்று வினவ வேண்டும்//
:-))))

யாத்ரா said...

கவிதை ரொம்ப நல்லா இருக்குங்க. வாழ்த்துகள்

நசரேயன் said...

//என்னடா ஆச்சு?//

நாங்க கேட்க வேண்டிய கேள்வி..

மாதவராஜ் said...

நுட்பமான பார்வை...

Bee'morgan said...

வாவ்.. அருமை.. :)
வாழ்த்துகள் அமித்தும்மா..

அன்புடன் அருணா said...

வாழ்த்துக்களும் பூங்கொத்துக்களும்!

"உழவன்" "Uzhavan" said...

கவிதை யதார்த்தம் பேசுகிறது. வெற்றிக்கு வாழ்த்துக்கள் அமித்துமா

Sakthi said...

வெற்றி பெற வாழ்த்துகள்

விக்னேஷ்வரி said...

ரொம்ப லேட்டாப் பாக்குறேனோ. ரொம்ப நல்லாருக்குங்க.

ராமலக்ஷ்மி said...

மிக அருமை அமித்து அம்மா. வெற்றிக்கு என் வாழ்த்துக்கள்!

Thamira said...

நல்லாயிருக்குது தோழி. வாழ்த்துகள்.

இரசிகை said...

m........irukkum.

"உழவன்" "Uzhavan" said...

பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள்!

அன்புடன்
உழவன்

பா.ராஜாராம் said...

வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துகள் அமித்தம்மா! :-)

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துகள் அமிர்தவர்ஷிணி அம்மா!

-ப்ரியமுடன்
சேரல்

பத்மா said...

congrats nga amithamma

Karthik said...

வாழ்த்துக்கள் அமித்து அம்மா.. :)

Ashok D said...

வாழ்த்துகள்ங்க :)

ராமலக்ஷ்மி said...

வாழ்த்துக்கள் அமித்து அம்மா:)!

கவிநா... said...

வெற்றிபெற்றமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்....