பிறரை வெறுப்பேற்றுவதில் அமித்துவுக்கு நிகர் அமித்துதான்.
சான்று 1: தீபாவளி காலையில் புது ட்ரஸ்செல்லாம் போட்டுக்கொண்டு சஞ்சுவோடும், அப்பாவுடனும் சேர்ந்து பட்டாசு வெடித்து முடித்த கொஞ்ச நேரத்துக்கெல்லாம்
எதிர் வீட்டு கார்த்தி எங்கள் வீட்டுக்கு வர, அமித்து அவனிடம்
கார்த்தி, நாங்கெல்லாம் நெறிய பட்டாச்சு வெச்சோமே? நீ வெச்சியா........? என ரிப்பீட்டிக்கொண்டிருக்க, ஆம் வெடிச்சேனே என்று ஒரு தடவைக்கு மேல் பதிலளிக்க முடியாமல் கார்த்தி என்னை பரிதாபமாகப் பார்த்துக்கொண்டிருந்தான்.
......
சான்று 2: ஆயா, தாத்தா, அமித்து மூவரும் ஊரிலிருக்கும் அத்தை வீட்டுக்கு கிளம்பிக்கொண்டிருக்க, சஞ்சு தானும் வருவதாக ஒரே அழுகை. அவள் அழுவதைப் பார்த்த பின்னும் அமித்து,
பாப்பா மத்துந்தான் ஊர்ருக்கு...
இதைக்கேட்டபின் சஞ்சுவின் அழுகையின் டெம்போ இன்னும் கூடியிருக்கும் என்பதை நீஙக்ள் அறிந்திருப்பீர்கள்
....
சான்று 3: சஞ்சுவும், அமித்துவும் லாலிபாப் சாப்பிட்டுக்கொண்டிருக்க, அமித்துவின் அப்பா, அமித்துவைப் பார்த்து உனக்குப் சாக்லெட்லாம் புடிக்காதே, இப்ப என்னடான்ன இப்படி சாப்பிடற, வேணாம்மா என சொல்ல, பதிலுக்கு அமித்து, ம், ஆப்புடுவனே, என லாலிபாப்பை வாய்க்குள் வைத்து ஒரு இழு இழுத்து, எப்பூடி...? என்று சொல்ல.
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
......
நான், சஞ்சு, கார்த்தி எல்லோரும் வண்டலூர் ஜூ சென்ற போது எடுத்த போட்டோக்களை கம்ப்யூட்டரில் போட்டு பார்த்துக்கொண்டிருந்தோம்.
யானை, முதலை, புலி போட்டோகள் வரும் போது, நாங்க அண்டலூர்ல ஜூ ல பாத்தமே?, யானை ஆ சாப்புடுச்சு பார்ரேன் என மேடம் ரன்னிங்க் கமெண்ட்ரி அடித்துக்கொண்டிருந்தார்கள்.
வழக்கம் போல நான் ஆ வென்று பார்த்துக்கொண்டிருந்தேன், போட்டோவை அல்ல.
.......
அதே போல் அவள் முதல் வருட பிறந்தநாள் போட்டோக்களையும் பார்த்துக்கொண்டிருந்த போது, கேக் வெட்டும் போட்டோ வரும் போது, அமித்து மிக உற்சாகமாகி, ஏ ப்பாப்பாக்கு ஆப்பி பத்த டேஏஏஏ. காலைல வந்துச்சு. (நான் வழக்கம் போல ஆ....)
(ஹாப்பி பர்த் டே வார்த்தை உபயம் சுட்டி டிவி) தினமும் அதில் குழந்தைகளின் போட்டோவோடு பிறந்தநாள் வாழ்த்துக்கள் வரும். ஒருநாள் வர்ஷினி என்று ஏதோ ஒரு குழந்தையின் போட்டோவுடன் பெயர் உச்சரிப்பாகி விட, அர்ச்சினி சொன்னாங்கே என்று வெட்கச்சிரிப்பு வேறு மேடத்துக்கு.
...
அமித்துவுக்கு கோன் மருதாணி, நெயில் பாலீஷ், கலர் சாந்து போன்றவை விருப்பமாயிருக்கின்றன.
ஒரு முறை நெயில் பாலீஷ் அவள் கை விரலுக்கு வைத்து முடித்தவுடன், இங்க, காலுல என்றாள். வைத்தேன்.
பிறகு நெயில் பாலிஷை கையிலெடுத்துக்கொண்டு என்னிடம் நீ வெச்சிக்கோ என்றாள். வேணாம்மா, அம்மாக்கு வைக்க வேணாம் என்று கையை மடக்கிக்கொண்டேன்.பிறகு காலில் வைத்துக்கொள்ள சொன்னாள். வேணாம்மா, அம்மாக்கு புடிக்காது என்றேன்.
கொஞ்ச நேரம் நெயில் பாலிஷை தன்னிடமே வைத்துக்கொண்டு, என்னை நோக்கி வேணாமா, நல்லா இக்கும், சூப்பா இக்கும் வேணாமா உனுக்கு என்று கேட்க, சிரித்துக்கொண்டே சரி காலிலாவது வைத்துக்கொள்கிறேன் என கீழ்ப்படிந்தாகிவிட்டது.
.......
ஏதாவது பொம்மைப் போட்ட புக்கை எடுத்து வைத்துக்கொண்டு, எச்சொ, ம்மா, இங்க ஆ, சொல்லிக்குடு என்றாகிறது
சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தோமானால், மேடம் எனக்கு முன்னாடியே மீனு, கொங்கு, இங்கம், புலி, பட்டப்ளை என வாசிப்பு தொடங்கி விட, நான் தான் மழலை மொழியில் ரிப்பீட்டிக்கொண்டிருக்கிறேன்.
.....
மேடம் கடந்த சனிக்கிழமையிலிருந்து தொடர்ந்த நான்கு நாட்கள் அவள் அத்தை வீட்டில் ஆயா, தாத்தாவோடு டேரா. இன்று காலை சென்னை ரிட்டர்ன். காலையில் அவளின் மாமா போன் செய்து, உங்க பொண்ணு கெளம்பிட்டா, தைதாப்பேட்டக்கு போறேன், பாய் அப்படின்னு சொன்னா.
நான் அவளுக்கு ஒரு பேரு வெச்சிருக்கேன், உலக மகா வாயாடின்னு.., இந்தப் பட்டத்திற்கான அவர் சொன்ன சான்றுகளில் ரெண்டு.(நானும் ஈன்ற பொழுதும் பெரிதுவக்கும் அம்மாவாக நினைத்துக்கொண்டு ம் கொட்டிக்கொண்டிருந்தேன்)
சான்று 1: குண்டு மிளகாயை காம்போடு பேனா மூடியில் கவிழ்த்து விட்டு தலைகீழாழ் வைத்து மாமா ஆப்பிள் பார்ங்க என்று சொல்லியிருக்கிறாள்.
பதிலுக்கு அவரோ இல்லம்மா, இது மிளகாய் என்றிருக்கிறார்.
பேனா மூடியிலிருந்து மிளகாயை வெளியே எடுத்துப்பின் நேராக வைத்து ஆம்மா, இது மெளகா, காதும் என்றிருக்கிறாள்.
....
சான்று 2: அங்கு போன போது பாத்திரத்தில் வைத்திருந்த தண்ணியைப் பார்த்து, தாத்தா தண்ணி என்று கேட்க, பதிலுக்கு அவர் சூடா இருக்கும்மா, ஆறட்டும் என சொல்ல, ஏதாவது கிடைக்காமல் போனால் அது கிடைக்கும் வரை ஆஆஆஆ ந்ன்னு ஒரு ஸ்டார்ட் மீஜிக்கை எப்போதும் தன் வாய் வசம் வைத்திருக்கும் அலறலை ஆரம்பிக்க, தம்ளரில் தண்ணி தரப்பட்டிருக்கிறது.
குடித்துவிட்டு தம்ளரை திருப்பித் தரும்போது, தண்ணி ஜில்லுன் தான் இக்கு, சூடா இல்லியே.
டோட்டல் பேமிலியும் பல்பு வாங்கியிருக்கிறார்கள்.
யாம் பெற்றுக்கொண்டிருக்கும் இன்பம் பெறுக இவ்வையகம்.

24 comments:
//டோட்டல் பேமிலியும் பல்பு வாங்கியிருக்கிறார்கள்.//
ஹஹா
லேபிள்ல தெரியுது உங்க பெருமை :)
அருமை:)! அப்டேட்ஸுக்கு நன்றி.
//குடித்துவிட்டு தம்ளரை திருப்பித் தரும்போது, தண்ணி ஜில்லுன் தான் இக்கு, சூடா இல்லியே.//
:-))))))))))))))))))))) so cute
//குண்டு மிளகாயை காம்போடு பேனா மூடியில் கவிழ்த்து விட்டு தலைகீழாழ் வைத்து மாமா ஆப்பிள் பார்ங்க என்று சொல்லியிருக்கிறாள்.///
என்ன டெரர் வளர்க்கிறீங்க அவ்வ்வ்வ்வ்வ்வ்:)))
arumaiyaana makal.....
anbaana amma....
vazhththukkal ungal peruhum anbu-kku:)
ரசித்தேன்..:)
ஐ!அமித்து அப்டேட்ஸ்!...சொல்லவே இல்ல...
//ஏதாவது பொம்மைப் போட்ட புக்கை எடுத்து வைத்துக்கொண்டு, எச்சொ, ம்மா, இங்க ஆ, சொல்லிக்குடு என்றாகிறது
சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தோமானால், மேடம் எனக்கு முன்னாடியே மீனு, கொங்கு, இங்கம், புலி, பட்டப்ளை என வாசிப்பு தொடங்கி விட, நான் தான் மழலை மொழியில் ரிப்பீட்டிக்கொண்டிருக்கிறேன்.//
சிரிச்சு முடியலை! :-)))))
சூப்பரப்பு! ;)
//குடித்துவிட்டு தம்ளரை திருப்பித் தரும்போது, தண்ணி ஜில்லுன் தான் இக்கு, சூடா இல்லியே.//
:))))))))
நேத்து தான் என்னடா இன்னும் அப்டேட்ஸ் வரலையேன்னு நினைச்சேன்.இன்னைக்கு போட்டுட்டீங்க :)
படிக்கும்போது சந்தோஷமா இருக்கு :)- அமித்து அப்டடேஸ் க்யூட் !
ஹாஹா. ரொம்ப நல்லாருக்கு.. :))
அமித்துக்கு அன்பும் வணக்கமும்
//சின்ன அம்மிணி said...
//டோட்டல் பேமிலியும் பல்பு வாங்கியிருக்கிறார்கள்.//
ஹஹா
லேபிள்ல தெரியுது உங்க பெருமை :)
//
ரிப்பீட்டுகிறேன்.
ஆக மொத்தத்தில நிறைய பல்பு வாங்குறீங்கன்னு தெரியுது..
pleasure reading !!
என் சார்பில் சமத்து அமித்துவுக்கு ஒரு பூங்கொத்து!
அருமை
Super :)
//ஈன்ற பொழுதும் பெரிதுவக்கும் அம்மாவாக நினைத்துக்கொண்டு ம் கொட்டிக்கொண்டிருந்தேன்//
சூப்பர் அமித்து குட்டி :-)
உங்கள் மழலையின் பதிவு மகிழ்ச்சியை தருகிறது....வாழ்த்துக்கள்...!
/பதிலுக்கு அமித்து, ம், ஆப்புடுவனே, என லாலிபாப்பை வாய்க்குள் வைத்து ஒரு இழு இழுத்து, எப்பூடி...?/
:)))))))
:)) ரசிச்சேன்
அமித்து சமத்து அம்மா மாதிரியே... ஹா ஹா ஹா... ;))))))))
சிரித்த / ரசித்த வரிகளையெல்லாம் சொல்லவேண்டுமானால், கமெண்ட் ஒரு பக்கத்திற்கு மேல் போகும்.
மொத்தத்தில் அமித்து அமித்து தான் :-)
அழகான அருமையான அறிவிப்பூர்வமான ரெண்டு கேள்விகளைக் கேட்டால், உடனே வாயாடி என்று சொல்வாதா??? வன்மையாகக் கண்டிக்கிறேன் :-)
அர்ச்சினி சொன்னாங்கே என்று வெட்கச்சிரிப்பு வேறு மேடத்துக்கு. //
ஹாஹாஹா. அழகு.
எல்லாமே ரொம்ப அழகு. வரிக்கு வரி குழந்தையின் முக பாவங்களை எண்ணி சிரித்தேன்.
/*வழக்கம் போல நான் ஆ வென்று பார்த்துக்கொண்டிருந்தேன், போட்டோவை அல்ல.
*/
:-)) nalla updates....
Post a Comment