26 October 2009

விருதெனப்படுவது யாதெனின்........

அன்பு, ஆம் வலைப்பக்கங்களில் விருதெனப்படுவது எழுத்துக்கள் வாயிலாக அறிந்தவர்களிடம் தனது அன்பினை பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பே.

முதலில் கலங்க கலங்க கவிதை எழுதும் அன்புக்குரிய பா. ராஜாராம்

பிறகு நீதிபதி என்கிற ஈஸ்ட்மென் கலர் படத்துக்கு மிக சுவாரஸ்யமாக விமர்சனம் எழுதிய ப்ரியத்துக்குரிய சின்ன அம்மிணி

இப்போது, நேசத்துக்குரிய மொழிபெயர்ப்பு ஸ்பெஷலிஸ்ட் தீபா (சாதத் ஹசன் மாண்டோ வோட “சாலையோரமாய்” கதைய மொழிபெயர்த்தாங்களே! ஹப்பா, சான்ஸே இல்ல)






இவர்கள் மூவரும் எனக்களித்த அன்பினை, ப்ரியத்தை, நேசத்தை இன்னும் பல பெயர்களோடு, உலகம் உள்ளளவும் மாந்தர் உய்ய உலவிக்கொண்டிருக்கும், யாதுமாகி நின்ற அன்பை இவர்களோடு பகிர்கிறேன்.

இங்கிட்டு தமயந்தி, அங்கிட்டு யாரு என நெல்லை பாஷையில் பட்டாசாக கொளுத்திப் போடும் நிழல்வலை தமயந்தி

தான் கொண்டு வந்த உணர்வுகளை வார்த்தை அடுக்குக்குள் ரகசியமாய் வைத்துவிட்டு படிப்போரை தேடச் செய்யும் சென்ஷி

எல்லையில்லா வாசிப்பனுவத்தை உள்ளடக்கி வைத்திருக்கும் கிருஷ்ணபிரபு

எப்போதுமிருந்து இப்போது அவ்வப்போது வந்து தலைகாட்டிப் போகும் கோவை குசும்புக்கு பெயர் போன தாரணி பிரியா

சந்திப்பினை கூட தன் சுவாரஸ்ய எழுத்தால் சுவை கூட்டி, அவ்வப்போது இயற்பியல் பதிவுகளையும் அள்ளித் தெளிக்கும் வானவில் வீதி கார்த்திக்

பதிவுக்கான பின்னூட்டங்களில் பூங்கொத்துக்களை பரிசளிக்கும் அன்புடன் அருணா மேடம்

எங்கு போனார்கள் என அவ்வப்போது எண்ண அலைகளிலெழுந்து தேடவைக்கும் வடிகால் க்ருத்திகா

கவச குண்டலத்தோடு கர்ணன் பிறந்தா மாதிரி, கையில் கேமிராவோடு பிறந்தார்களா என வியக்க வைக்கும் பொழுதொரு போட்டோவோடு நாளொரு பதிவெழுதும் துளசி டீச்சர்

நகவெட்டியைக் கூட கவிதையின் பாடுபொருளாக்கி, உடன் லேட்டஸ்டாக அகமதி அப்டேட்ஸில் களமிறங்கியிருக்கும் உழவன்

எண்ணற்றவர்களுக்கு ஏணிப்படிகள் வைத்து உதவும் எஸ்.கே

இன்னும் அன்பை பகிர நினைத்தவர்கள் நிறைய பேர், இதோ மேற்கூறியவர்கள் மூலம் அந்த அன்பு நிறைய பேருக்கு விருதின் வாயிலாக பல்கிப் பெருகும் என்று விட்டுவைக்கிறேன் :)

நன்றி.

18 comments:

Unknown said...

விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.

அமித்து அம்மா, உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன். நேரமிருப்பின் தொடருங்கள். நன்றி

http://kvraja.blogspot.com/2009/10/2009.html

Anonymous said...

விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.

சந்தனமுல்லை said...

அனைவருக்கும் வாழ்த்துகள் - தங்கள் அன்பை பெற்றவர்களுக்கும் தங்களுக்கு அன்பை கொடுத்தவர்களுக்கும்! ;-)))

pudugaithendral said...

எல்லோருக்கும் எனதன்பான வாழ்த்துக்கள்

ராகவன் said...

அன்பு மழை அவர்களுக்கு,

மிகச் சரியானவர்களுக்கு நீங்கள் அளித்த விருதுகள் போற்றுதலுக்குரியவை. பாரா வை படித்து வியந்து கொண்டிருந்த நேரத்தில் இதுபோல ஒரு விருது உங்களிடம் இருந்து.

மற்ற இருவரையும் இன்னும் வாசித்ததில்லை. வாசிக்க தூண்டியிருக்கு உங்கள் அறிமுகம், வாசித்து விட்டு வருகிறேன்.

அமித்து அம்மா கையில் விருது வாங்கிய மூவருக்கும் என் வாழ்த்துக்கள்!

அன்புடன்
ராகவன்

ராமலக்ஷ்மி said...

உங்களுக்கும் உங்களிடமிருந்து விருதினைப் பெற்ற மற்றவர்களுக்கும் நல்வாழ்த்துக்கள்!

Karthik said...

வாவ் ரொம்ம்ம்ப நன்றி. :)

அடுத்த பதிவு எழுதறதுக்கே பயமா இருக்கு. :))

Unknown said...

என்னையும் பரிந்துரை செய்ததிற்கு நன்றி சாரதா...

கார்த்திக் மற்றும் துளசி கோபால் தவிர மற்ற அனைவருமே புதியவர்கள். நிச்சயம் படிக்கிறேன்.

பா.ராஜாராம் said...

நன்றியும் அன்பும் அமித்தம்மா,ராகவன்.வாழ்த்துக்கள் நண்பர்களுக்கு!

அ.மு.செய்யது said...

உங்களுக்கும் உங்கள் கையால் ஆஸ்கர் ( உங்க கிட்டர்ந்து வாங்குறதுனால ஒரு தற்குறிப்பேற்ற அணி )
வாங்குபவர்களுக்கும் வாழ்த்துகள் !!!

அமுதா said...

வாழ்த்துக்கள் உங்களுக்கும் விருது பெற்றவர்களுக்கும்

ப்ரியமுடன் வசந்த் said...

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

☀நான் ஆதவன்☀ said...

விருது பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துகள் :)

அன்புடன் அருணா said...

ஆஹா...மீண்டும் விருதா!?..ரொம்ப நன்றி அமித்து அம்மா அன்புக்கும் வருதுக்கும்!!

Thamira said...

விருது பெற்றோருக்கு என் வாழ்த்துகளையும் இங்கே பதிகிறேன்.

"உழவன்" "Uzhavan" said...

நன்றியும் மகிழ்ச்சியும் அமித்துமா :-)
வாழ்த்திய அனைவருக்கும் நன்றி

அன்புடன்
உழவன்

தமிழ் அமுதன் said...

வாழ்த்துக்கள் உங்களுக்கும் விருது பெற்றவர்களுக்கும்..

நட்புடன் ஜமால் said...

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.