காட்சி 1
இடம்: சைதை இரயில்வே ஸ்டேஷன், நேரம் : மாலை 6.37 மணி
காட்சி விவரிப்பு: பத்து படிக்கட்டுகளில் இரண்டிரண்டு படிக்கட்டுகள் விட்டு முறையே மூன்று அம்மா தாயேக்கள் அமர்ந்திருக்கிறார்கள்.அவர்களை கண்டும் காணாமல் பலர் இறங்கிக்கொண்டிருக்கிறார்கள். அதில் ஒரு பாட்டியும், தோற்றத்தில் ஐந்து வ்யது மிகாத பேத்தியும் பின்னே நானும்.
பாட்டி : நின்னு நின்னு அவாள எல்லாம் பார்க்காம நேரா நட, சீக்கிரமா ஆத்துக்கு போகனும்.
பேத்தி : ஏன் பாட்டி அவாள்லாம் அங்க ஒக்காந்துட்டிருக்கா
பாட்டி : அவாளுக்கு நைட்டு சாப்பிட மம் மம் வேணும்ல, அதுக்காத்தான் ஒக்காந்துருக்கா...
பேத்தி : யாரு அவாளுக்கு மம் மம் கொடுப்பா ?
பாட்டி : நாம போடுற காசுல அவா மம் மம் வாங்கி சாப்பிட்டுண்டுருவா..
பேத்தி : நீ அவாளுக்கு காசே போடலையே ?
பாட்டி : .......... சீக்கிரம் நட ஆத்துக்கு போயி நீ மம் மாம் சாப்பிடனும், நாழியாயிடுத்து.
பேத்தி : பாவம் பாட்டி அவாள்லாம்
பாட்டி : ஆமா.. பாவம், பாரு மம் மம் க்காக கஷ்டப்படறா, ஆனா நீ மம் மம் சாப்பிட அடம் பண்றே பாட்டிக்கிட்ட. இன்னிக்கு சமத்தா சாப்பிட்டறனும், ச்சரியா
பேத்தி : பாட்டி, சமர்த்தா சாப்பிடலனா மம் மம்ம அவாளுக்கு கொடுத்தடறியா..
பாட்டி : .............. நாழியாறது.
(எம்புட்டு வெவரமா இருக்குங்க பயபுள்ளைங்க)
........
காட்சி 2
இடம்: முருகன் கோவிலருகில்
நேரம் : மாலை 6.45
காட்சி விவரிப்பு :இரு பெண்மணிகள், ஒரு சிறுவன், பின்னே நான்.
பெ 1 : ஏங்க, உங்க பையன் இப்ப எப்படி படிக்கிறான்,
பெ 2 : பையனின் தலையில் கைவைத்த படியே, அவங்க க்ளாஸ் மிஸ்ஸுக்கு சப்ஜெக்க்டே தெரியாம ரொம்ப கஷ்டமா இருந்துச்சுல்ல. அப்புறம் இப்போ ட்யூஷன் சேர்த்தப்புறம் பரவால்லைங்க. ஏதோ படிக்கிறான்
(பசங்கள ஸ்கூல்ல சேர்க்கறதுக்கு பதிலா, ட்யூஷன்லா சேத்து விட்டுட்டா என்ன ?)
.......
காட்சி 3
நேரம் : 6.50
இடம் : வீட்டில்
நிறைய செல்லங்கொஞ்சலுக்குப் பிறகு, அமித்துவிடம்,
நீங்க அப்பா செல்லமா, அம்மா செல்லமாடா பட்டா ?
குழைவான சிரிப்புடன் அப்பா ச்செல்லம்
அப்ப அம்மா ச்செல்லம் இல்லியா ?
ஆயு ச்செல்லுமும் இல்ல...
ஆச்சரியத்துடன் நான், அப்படியெல்லாம் சொல்லக்கூடாதுடா குட்டா. நீங்க அப்பா ச்செல்லமாவே இருந்துக்கோங்க.
சரி, ஆயுமே இல்ல. ஆயுமே இல்ல ........
(இந்த வரிகள் நேயர் விருப்பமின்றி நிறைய முறை ரிப்பீட் செய்யப்பட்டது.)
என்னை சமாதானப்படுத்த விழைகிறாயா மகளே ?! :)
23 comments:
//அவங்க க்ளாஸ் மிஸ்ஸுக்கு சப்ஜெக்க்டே தெரியாம ரொம்ப ....//
ஹா...............
என்னை சமாதானப்படுத்த விழைகிறாயா மகளே ?
அமித்து:- ம்ம்ம்ம்ம்
(இல்லாட்டி பாட்டு பாடி என்னைய டென்ஷனாக்குவீங்களே அம்மி)
:))))))
ஹா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
//அப்ப அம்மா ச்செல்லம் இல்லியா ?
ஆயு ச்செல்லுமும் இல்ல...//
:-)))))
ethukupa ipdillam kaettu chamathu kuttya paduthareenga?
paarunga enna solraannu
//பசங்கள ஸ்கூல்ல சேர்க்கறதுக்கு பதிலா, ட்யூஷன்லா சேத்து விட்டுட்டா என்ன ?)//
Good question!
//அவங்க க்ளாஸ் மிஸ்ஸுக்கு சப்ஜெக்க்டே தெரியாம ரொம்ப கஷ்டமா இருந்துச்சுல்ல//
உண்மையிலேயே இப்படியெல்லாமா ஸ்கூல நடத்துறாங்க.. அட ஆண்டவா
//என்னை சமாதானப்படுத்த விழைகிறாயா மகளே ?! :)//
அடடா.. வர்ஷினி.. இப்பவே அம்மாவுக்கு ஐஸா.. :-))
//சரி, ஆயுமே இல்ல. ஆயுமே இல்ல ........
(இந்த வரிகள் நேயர் விருப்பமின்றி நிறைய முறை ரிப்பீட் செய்யப்பட்டது.)//
avvvvv! வெல்கம் டூ தி பல்பு வாங்கும் க்ளப்!! :))))
:)
இடம்: சைதை இரயில்வே ஸ்டேஷன்
நேரம் : காலை 8.37 மணி..
====================
பையன்: அம்மா.. அம்மா..
அம்மா: என்னடா..??
பையன்: அது வந்து..
அம்மா: கொஞ்சம் இரு... பின்னாடி அமித்து அம்மா இருக்காங்களான்னு பார்க்கிறேன்.
அப்பாடி.. இல்லை... இப்போ சொல்லுடா...
The best... very nice.
நல்ல விவரிப்புக்கள் அமித்தும்மா...good observation. அமித்து தங்கத்திடம் ஏன் கஷ்டமான கேள்வியெல்லாம் கேக்கறீங்க. சக்திவேல்கிட்ட அவங்க அப்பத்தா இதை கேட்டு கேட்டு அவன் ‘உலகத்திலேயே உங்களைத் தான் பிடிக்கும்’னு சொல்றான். என்கிட்ட அவங்க பெருமையா இதைச் சொன்னாங்க. நான் அவங்க முன்னால கேட்டப்ப பயபுள்ள அதையே சொன்னான். நாம சக்தி ஸ்லீப்பிங் டைம்ல attendance கொடுத்தா இப்படித்தான்னு மனசைத் தேத்திட்டு அவனைத் தூங்க வைக்கறப்ப கழத்தை கட்டிட்டு முத்த மழையெல்லாம் கொடுத்து முடிஞ்சது,நான் கேட்காமலேயே ‘அம்மா உன்னைய தான் உலகத்திலேயே ரொம்ப பிடிக்கும்’னு சொல்றான். தங்கம் அப்ப ஈவ்னிங் சொன்னதுன்னு கவுன்டர் வச்சதும் அப்பத்தாவும் பிடிக்கும், ஆனா உன்னை ரொம்ப பிடிக்கும்னு கொஞ்சினான். சரா அப்ப நானுன்னு கேட்டப்ப நீ கூட கொஞ்சம் பிடிக்கும்னான்...அவர் முகம் போன போக்கை பாக்கணுமே...மே பி நானும் இல்லாத சமயத்துல அவங்கப்பா கழுத்தை கட்டிகிட்டு ‘உலகத்துலேயே உன்னைத் தான்பா பிடிக்கும்னு சொன்னாலும் சொல்வான். பையன் வெரி க்ளியர். ;)))) பகிர்விற்கு நன்றி அமித்தும்மா ;)))))
//என்னை சமாதானப்படுத்த விழைகிறாயா மகளே ?! :) //
கேள்வி, ஆச்சிரியம், சிரிப்பு எல்லாம் தெரியுது.
//வங்க க்ளாஸ் மிஸ்ஸுக்கு சப்ஜெக்க்டே தெரியாம ரொம்ப கஷ்டமா இருந்துச்சுல்ல. அப்புறம் இப்போ ட்யூஷன் சேர்த்தப்புறம் பரவால்லைங்க. ஏதோ படிக்கிறான்//
அமித்து அம்மா எல்லாம் புரிஞ்சிடுச்சு ஒரே ஒரு சந்தேகம்
tuition ல சேர்த்து விட்டது குழந்தையையா?? இல்ல மிஸ் யா ??
:)))
ஹா ஹா....
1.நச்
2.நச்
3.நச்
//பசங்கள ஸ்கூல்ல சேர்க்கறதுக்கு பதிலா, ட்யூஷன்லா சேத்து விட்டுட்டா என்ன//
கண்டிப்பா
// சரி, ஆயுமே இல்ல. ஆயுமே இல்ல ........
(இந்த வரிகள் நேயர் விருப்பமின்றி நிறைய முறை ரிப்பீட் செய்யப்பட்டது.)
என்னை சமாதானப்படுத்த விழைகிறாயா மகளே ?! :) //
ஐயோ அய்யோ !!!
//சரி, ஆயுமே இல்ல. ஆயுமே இல்ல ........
(இந்த வரிகள் நேயர் விருப்பமின்றி நிறைய முறை ரிப்பீட் செய்யப்பட்டது.)//
ஐயோ அய்யோ ....
மழலையில் அடிக்கிறீர்கள்!
//(எம்புட்டு வெவரமா இருக்குங்க பயபுள்ளைங்க)//
இது போன்ற சிறு வயது அறிவுருத்தல்கள் ஒன்று அந்தச் சிறுமியை பிறர் நலன் மீதான பார்வையை அதிகப்படுத்தும் (”உன்னால் முடியும் தம்பி” திரைப்படம் போல), அல்லது பாட்டியின் வாரிசாக்கிவிடும். சிறு வயதிலேயே பிறருக்கு உதவும் குணத்தை குழந்தைகளிடம் உண்டாக்க வேண்டியது அவசியம். இல்லையென்றால் “எனது வீடு எனது வாழ்வு” என்றே அடுத்த தலைமுறையும் உருவாகும்.
fullstop for the serious commenting :-)
//என்னை சமாதானப்படுத்த விழைகிறாயா மகளே ?! :)//
அமித்துப் பற்றிய பதிவுகள் என்னை ஆஃபீஸ்ல நிலாவைப் பற்றி நினைக்க வைக்கும். இந்தப் பதிவும் அப்படியே. ஸ்ஸோ க்யூட் குட்டிம்மா :-)
//அப்ப அம்மா ச்செல்லம் இல்லியா ?
ஆயு ச்செல்லுமும் இல்ல...//
ஹஹ ஹா........
அமித்து வாழ்க.......
அம்மா தாயேக்கள்.என்று எவ்வளவு அழகாக நளினமாகக் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.
அருமை.
ரொம்ப நெகிழ்வு முதலானது அமித்தம்மா.வாசிப்பவர்கள் இந்த கணத்துடன் போக வேண்டாம் என விரும்பியது போல இருக்கு அடுத்த இரண்டும்.தாண்டி,கனாமாத்தான் போக வேண்டி இருக்கு.
:-))
3-vathu top-nga...:)
Post a Comment