உன்னை தூங்கச் செய்தபின்
வீடெங்கும் இரைந்து
கிடக்கும்
விளையாட்டு பொம்மைகளை
எடுத்து வைக்கும் போதெல்லாம்
உன்னை மீண்டும்
எழுப்பி விடலாமா
என்றே தோன்றுகிறது
முகத்தோடு
முகம் வைத்து
உற்று நோக்கிய
ஒரு விளையாட்டு கணத்தில்
ம்மா, ஒன் கண்ணுல
நான்னு
என்று சிரிப்போடு சொல்லியபோது
மகளே
நீ நானாக
நான் நீயாக
என இருப்பின் நிலை மாறிப்போனோம்
என் பால்யங்கள் நினைவுகள்
எதுவும் மனதின் வசமில்லை இப்போது
இல்லாமலிருப்பதுவும் நல்லதுதான்
இதோ என் பால்யத்தை
துளி துளியாய்
உன்னோடு ஒன்றாய்
கலந்து பருகுகிறேனே
தித்திக்கிறது
நீ குழந்தையாகவே
இருந்துவிடு
உன்னால் நானும்......
டீ டீ டீ என ஒரு
விளையாட்டு
ஆக்கு பாக்கு என ஒரு
விளையாட்டு
நாக்கை துருத்தி
வெளியே நீட்டி
ஒரு விளையாட்டு என
விளையாடிக்கொண்டிருக்கும்போது
ம்மா
நாக்க உள்ள போடு
என்றாய்.
அன்பே ஆருயிரே
அது எவ்வளவு பெரிய
உபதேசமென்று உனக்கு
இப்போது தெரியாது !!!!
25 comments:
//உன்னை தூங்கச் செய்தபின்
வீடெங்கும் இரைந்து
கிடக்கும்
விளையாட்டு பொம்மைகளை
எடுத்து வைக்கும் போதெல்லாம்
உன்னை மீண்டும்
எழுப்பி விடலாமா
என்றே தோன்றுகிறது//
அருமையா சொல்லிட்டீங்க
கவிதை படித்ததும் எனக்கு என் அண்ணன் பொண்ணோட விளையாடிய நாட்களை நினைச்சுக்கிட்டேன்!
வாழ்க்கையில நிறைய மகிழ்ச்சியான தருணங்களை மிஸ் பண்ணிக்கிட்டிருக்கோமேன்னு :(
ஒவ்வொரு வரியும் அருமை அமித்து அம்மா. குழந்தைகள் நமக்குதான் எத்தனை கற்றுத் தருகிறார்கள்??!!!
//இதோ என் பால்யத்தை
துளி துளியாய்
உன்னோடு ஒன்றாய்
கலந்து பருகுகிறேனே//
அழகு ....!அழகு ....! ருசிக்கத்தக்க வரிகள்!
///அன்பே ஆருயிரே
அது எவ்வளவு பெரிய
உபதேசமென்று உனக்கு
இப்போது தெரியாது !!!! ///
இதுவும் நல்லாருக்கு!! ;;;)))
நல்லா இருக்குங்க!
நல்ல கவிதை!!
//ம்மா
நாக்க உள்ள போடு
என்றாய்.
அன்பே ஆருயிரே
அது எவ்வளவு பெரிய
உபதேசமென்று உனக்கு
இப்போது தெரியாது !!!! //
LOL!
:) அருமை.
_வித்யா
வரிகளாய் அருமையாய் வெளிப்படுத்திவிட்டீர்கள். நான் தினந்தோறும் இந்நிகழ்வை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். அவ்வளவே...
வாழ்த்துகள்.
வரிகள் ஒவ்வொன்றிலும்
குழந்தையை தேடி
குழந்தையாகி போனேன்
கண்களின் தூசிகள்
வெளியேறுகின்றன
உப்பு கரைசலோடு ...
அப்பனுக்கு உபதேசம் செய்த சுப்பனைப்போல அம்மாவுக்கு அமித்துவா.. :) ம்
ரசனை.!
//அது எவ்வளவு பெரிய
உபதேசமென்று உனக்கு
இப்போது தெரியாது !!!!
Not anymore, i guess. Definitely not in her days!
எந்த வரிகளை ரசிக்க எந்த வரிகளை விட அனைத்துமே அருமை!
தாய்மை அதில் வழிந்தோடும் பாசம், அன்பு, நேசம்
எல்லாம் கொள்ளை கொள்ளையாய் வெளிப்பட்டிருக்கிறது
தோழி! நீ ஒரு தாய் மட்டும் இல்லையடி!
அனைத்து உணர்வுகளையும்
அருமையாக ரசிக்கத் தெரிந்த ரசனக்காரியும் கூட!
கவிதை நல்லாயிருக்கு
//என் பால்யங்கள் நினைவுகள்
எதுவும் மனசின் வசமில்லை இப்போது
இல்லாமலிருப்பதும் நல்லதுதான்
இதோ என் பால்யத்தை......
...................................................//
தாய்மை விஞ்சும் பொழுதில்
சேய்மை தெரிகிறது.
சேய்மை விஞ்சும் போது
தாய்மை மலர்கிறது...
அமித்து அம்மா
அம்மா அமித்து!
:) romba nalla irukungka kavithai...
சூப்பரா இருக்கு அமித்து அம்மா. அருமை
ரொம்ப ரசிச்சேன் :)
//நீ நானாக
நான் நீயாக
என இருப்பின் நிலை மாறிப்போனோம்
Miga aalamaana, arthamaana varikaloom kooda...
pakirvukku nanri
Vaalthukkal
//இதோ என் பால்யத்தை
துளி துளியாய்
உன்னோடு ஒன்றாய்
கலந்து பருகுகிறேனே//
உண்மையிலே தித்திக்கிறது
அமித்து அம்மா.
அருமை
குழந்தையைக் கூட
குழந்தையாக இருக்க விடுவதில்லை
அமித்து அம்மா!
அசத்தறீங்க....
Hats off to you!
முதல் பத்தி.... நானும் அனுபவத்திருக்கிறேன்..
கடைசி வரி...நறுக்!
:-))))
அற்புதம்.அழகு. அர்த்தமுள்ளது. வாழ்த்துக்கள்.
அருமை!! ஒரு நாள் அமித்து இதை படிக்கும் போது ரொம்பவே பெருமைபடுவாள்!!
தாமத வருகைக்கு மன்னிக்கவும்.
அமித்து அப்டேட்ஸ் எழுத நேரமில்லை என்பதற்காக எடுத்த குறிப்புகளை ( அனுபவித்த ) கவிதையாக்கி விட்டீர்களா ??
கலக்கல் போங்க..! கடைசி பத்தி அர்த்தப்படுகிறது.
இதுமட்டுமா.. இன்னும் எத்தனையோ!!! நானும் எண்ணிப்பார்க்கிறேன்
Post a Comment