14 August 2009

அமித்து அப்டேட்ஸ்

ஒரு நிமிஷத்துக்கு 100 வேலை பாக்குறா - இதுதான் அமித்து பாட்டியின் லேட்டஸ்ட் கமெண்ட் அமித்துவைப் பற்றி. வீட்டுக்கு போனவுடன் இன்னைக்கு என்ன செஞ்சா தெரியுமா என்று அப்டேட்ஸ் ஆரம்பிக்கும்.அந்த அப்டேட்ஸில் கண்டிப்பாய் உடைபட்டதாய் ஏதாவது ஒரு பொருள் சொல்லப்படும் !!!!!!!!!!

அக்ர முத்ல எழ்த்லாம் ஆத்தி பகுவன் முதே உக்கு - திருக்குறள் தப்பா இருக்குதேன்னு நெனைக்காதீங்க, இது அமித்து ரீப்பிட் செய்தது.

எச்சோ, எச்சோம்மா, மாம்மி - இப்படித்தான் கூப்பிட்டாகிறது என்னை.

மணாச்சி அப்பா, ஆப்பிச்க்கு மணாச்சி ஏந்திரிங்க, ச்சாவி எத்துனீங்களா, எல்மெட்டு எத்துனீங்களா - இப்படி தான் அமித்து தினமும் அவங்க அப்பாவை எழுப்பி, வழியனுப்பறாங்களாம். அவங்க அப்பாவுக்கு வாய் கொள்ளாத பெருமை இதில்.

காசை எடுத்துக்கொண்டு, தாத்தா ஆங்கே, கடிக்குப் போலாம் என ஆர்டர். கடைக்குப்போய் என்ன வாங்கப்போறம்மா, சாக்கிலேட்டும்மா. அப்றம் காய், மீன்னு எல்லாம் (கலர் கலராய் பேப்பர் சுற்றியிருப்பதைக் கண்டு வாங்கும் பெருமைதானே தவிர, மேடத்துக்கு சாக்லேட் சாப்பிட பிடிக்காது)

நான் எதையோ படித்துக்கொண்டு இருக்க, திடிரென்று ஒரு அட்டைப்பேப்பர், அதில் பெரிய எழுத்தில் COLON என்று எழுதியிருந்தது. அதை என்னிடம் எடுத்துவந்து, அம்மா, இந்தா, படிங்க, ஏ,பி,சி,டி என்று பதிலுக்கெல்லாம் காத்திராமல் ஓடிப்போய்விட்டார்கள். எனக்கே ரிப்பீட்டு. ஒரு நிமிசம் கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

எதையாவது பார்த்தால் எண்ண ஆரம்பித்து, ஒன், ட்டூ, ஃபோரே.. அவ்ளோதான். மறுபடியும் சுழற்சி முறையில் ஒன், ட்டூ, ஃபோரே.

வெங்காயத்தை வெய்யிலில் காயவைத்து பின் உள்ளே எடுத்துக்கொண்டு போனபோது, ஒரே ஒரு வெங்காயம் மட்டும் வெளியேவே இருந்துவிட்டது போலும். அமித்துவின் ஆயா, அதை அவளிடம் கொடுத்து, இந்தா இதை அம்மாகிட்ட கொடுத்துடும்மா என்று சொல்ல, அமித்து வீட்டு வெளியில் நின்று கொண்டு, அம்மா, புடிங்கே, கேட்ச் என்று வெங்காயம் உள்ளே வீசப்பட்டது.

நாங்கள் இருப்பது மாடியில், எங்கள் வீட்டின் மேலே கைப்பிடி சுவர் வைத்து தளம் போட்டு மாடி இருந்தாலும், அதற்கு படிகள் இல்லை, ஏணி மூலமாகத்தான் மேலே ஏறவேண்டும். அமித்து அடிக்கடி ஏணியை எடுத்து போட சொல்லி மேலே போகவேண்டும் என்று அடம். அவளின் அப்பா அங்கே அழைத்துப்போனவுடன், அப்பா, இங்கே ஜ்ஜாலிப்பா. கீழே ஆனாம் என்று கமெண்ட்டாம். என்னத்தைச் சொல்ல.

அம்மா, பென்சின் கொடுங்கே என்று கேட்டு வாங்கி நோட்டில் கிறுக்க ஆரம்பித்தாகிவிட்டாயிற்று. ஒருநாள் இதுதான் உன் பெயர் என்று நோட்டில் எழுதிக்கொடுக்க, அதிலிருந்து முட்டைகளையும், வளையங்களையும் வரைந்துவிட்டு, அம்மா, வர்ச்சினி எழுதிட்டேன். எதிர் வீட்டு கார்த்தி வந்தால், அண்ணா, வர்ச்சினி எழுது, விச்சுவா (கார்த்தியின் தம்பி பெயர்) எழுது.

ஒருமுறை மக்கள் டிவியில் பட்டர்பிளை படம் காட்டி எதோ நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருந்தது. அமித்து அதைப்பார்த்துவிட்டு, அவள் அப்பாவிடம், அப்பா இத்து பட்டப்ளை, ம்மேல ம்மேல பறக்கும். அப்டியாம்மா, சரிம்மா.

அவளை குளிக்க வைத்துக்கொண்டிருக்கும் போது, திடிரென்று கொஞ்சம் வித்யாசமான சத்தம், ஏதோ பறவையின் ஒலி தான், எனக்கும் காதில் கேட்டது. இந்த ஒலியினைக் கேட்ட கொஞ்ச நேரத்திற்கு பின்னர், பாப்பாக்கு பயம்மா இக்கு, ஏம்மா பயம்மா இருக்கு. குதுவி அழுதான், கத்துறான் அதான் பயம்மா இக்கு.

இந்த வார ஆனந்தவிகடனின் அட்டைப்படத்தில் ரஜினி படம் போட்டிருக்க, அப்பாவிடம் காட்டி, அப்பா ரஞ்ஜனி, ரஜ்ஜனி என்று அடையாளம் காட்டியிருக்கிறாள். இதற்கு முன்னர் எப்போதோ ஒருமுறை ஆ.வியில் அமித்து அப்பா அவரை அடையாளம் காட்டியதின் எஃபெக்ட் இது. தன் தலையின் பெயரை தன் மகளின் வாயால் கேட்டதனால் பார்த்தீயா, பார்த்தீயா என்று அமித்து அப்பாவுக்கு ஏகப்பட்ட சந்தோஷம்.

மொட்டை அடித்துவிட்டு வீட்டுக்கு வந்தபின், வர்ஷா தலைமுடி எங்கம்மா என்று கேட்டால், பட்டென்று பதில் வருகிறது, க்காக்கா ஊக்கிப்போச்சு என்று :)))))) காதும் குத்தியாகிவிட்டது, இப்போது அவளின் ஆயா, பின்னர் என்னுடைய கம்மலுக்கும் இத்து கொடுங்கே, இத்து கழ்ட்டுங்கே என்று வேட்டு வைக்கும் முயற்சி ஆரம்பித்திருக்கிறது.

அவளின் ஆயா சோகமாக இருந்தாலோ, முடியாமல் படுத்து விட்டாலோ, அவர்களின் கன்னத்தைப் பிடித்துக்கொண்டு, ஆய்யா என்னா, என்னா, என்னாச்சு என்று கேட்க ஆரம்பித்திருக்கிறாளாம். பின்னர் ஒருநாள் அமித்து அப்பா அவருக்கு மாத்திரை வாங்கி வர, கொடுத்தே ஆகவேண்டும் என்று அடம்.
இந்த மாத்திரையெல்லாம் உனக்கு வேண்டாம்மா என்றதற்கு, கையில் எடுத்துக்கொண்டு ஆயாக்கும்மா, ஆயா உவ்வே, வாந்திம்மா, ஜுரம்மா என்று மாத்திரையை எடுத்துக்கொண்டு ஆயாவிடம் கொடுத்து கூடவே அவர்கள் வாயிலும் போடவேண்டும் என்று அழுகை வேறு. தண்ணி எடுத்துக்கொண்டு போனது அது தனி எபிசோட் !:)

நேற்று வர்ஷினியின் பாதம் வைக்கும் முயற்சியில் மேடம் ரெண்டு காலையும் அரிசி மாவில் தோய்த்து, நான்கு அடி கூட வைக்கவில்லை, ஆனாம்ப்பா என்று ஓடி வீடெல்லாம் பாத அச்சு. மாய் கண்ணா, சின் கண்ணா, கிச்ணா என்று வீட்டுக்கும் கூப்பிட்டாகிவிட்டது.
(சென்ற பதிவில் பின்னூட்டத்தில் முறுக்கு, சீடை பார்சல் செய்ய சொன்னவர்களின் கவனத்திற்கு : க்ருஷ்ணா ஸ்வீட்ஸில் வாங்கிக்கொள்ளவும், மிகவும் நன்றாக இருக்கிறது, குறிப்பாக கார சீடை வாயில் போட்டால் கரைகிறது)

அமித்துவுக்கு எதையெடுத்தாலும் வாயில் வைக்கும் பழக்கம் நிறைய, இப்படி ஒருமுறை பேப்பரை எடுத்து வாயில் வைக்கும்போது, நான் சும்மாவாச்சும் மொபைலை எடுத்து காதில் வைத்து, டாக்டர், டாக்டர் இங்க பாருங்களேன், வர்ஷினி பேப்பர்லாம் சாப்பிடுறா, ஊசி போடறீங்களா, கையில் போடுங்க, வாய்ல கூட போடுங்க, என்னது மருந்து கூட குடுப்பீங்களா, இப்ப வரணுமா, சரி அவங்க அப்பா வந்தவுடன் நாங்க வரோம் என்று சொல்லி விட்டு போனை கீழே வைத்தேன். ரெண்டு நிமிசம் கழித்து, அமித்து ஒரு கையை காதில் வைத்துக்கொண்டு, ஒரு கையை நீட்டி டட்டா காரு, டட்டா காரு, இந்தாங்க பாப்பா, பேப்பேர் ஆப்பிட்றா, ஊச்சி போடுங்கே.

அமித்துவை தூக்கும் முறையை சரியாக கையாளவேண்டும். இல்லையென்றால், இபி இல்லம்மா, இபி இல்ல என்று உடனே பதில்வரும். பின்னானி ஊக்கம்மா, பின்னானி ஊக்கு என்பாள். இது தூக்கம் வருவதற்கு முன்னர் அவள் செய்வது.

ஒருநாள் மழையின் போது அவள் இப்படியே செய்ய சொல்ல, வெளியல்லாம் போக முடியாதும்மா, உள்ளயே அம்மா கதை சொல்றேன், நீ தூங்கு என்று டோரா, மீன், மான் என்று கலந்து கட்டி நான் கதை விட ஆரம்பிக்க, ஒரு 5 லைன் கூட போயிருக்காது, அவளின் கையை என் முகத்து நேராக நீட்டி, ம்மா, ஆனாம், டோரா கத ஆனாம். வா, வெளில போலாம்.
பல்பு வாங்க ஆரம்பிச்சாச்சு, இது போல தத்தம் குழந்தைகளிடம் பல்பு வாங்கிவிட்டவர்கள், வாங்கிக்கொண்டிருப்பவர்கள் / என் போன்று ஆரம்பித்தவர்களும் ஒரு சங்கம் ஆரம்பிக்கலாம். பதிவுக் கட்டணமாக ரெண்டு 100 வாட்ஸ் பல்பை கொடுத்துவிட்டு, சங்கத்து உறுப்பினராகலாம் :))))))))


டிஸ்கி: கிழக்கு பதிப்பகத்தில், விலங்குகள், பறவைகள், உயிர் எழுத்து, வடிவங்கள் என கையடைக்க சதுர வடிவில் தடிமனான அட்டையில், விலை ரூ.25 (தள்ளுபடியில் ரூபாய் 20) கிடைக்கிறது. ஒரு நாள் எதேச்சையாக மயிலாப்பூர் போக அங்கே கிழக்கு பதிப்பகத்தார் வைத்திருந்த புத்தக கண்காட்சியில் வாங்க நேர்ந்தது. வர்ஷினிக்கு யான்னை, குதுவி, காக்கா, கோங்கு, ப்பூன்னை,ஜ்ஜூ என்று அவளே எடுத்து வைத்துக்கொண்டு அடையாளம் காண்பிக்க மிகவும் உபயோகமாக இருக்கிறது. 2,3 வயது குழந்தைகள் கிழிக்காமல் பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக இருக்கும்.

21 comments:

KarthigaVasudevan said...

:)))))

நட்புடன் ஜமால் said...

அப்டேட்ஸ் கலக்கல்ஸ்

அமித்துவும் வளர்ந்துகிட்டு இருக்காங்க

உங்க எழுத்துகளும்

--------------------


வர்ஷா தலைமுடி எங்கம்மா என்று கேட்டால், பட்டென்று பதில் வருகிறது, க்காக்கா ஊக்கிப்போச்சு என்று :)))))) ]]

ச்சோ சூவீட்

சந்தனமுல்லை said...

ரசித்தேன்....அமித்து அம்மா...நல்ல ஃபுளோ!! :-)))

Deepa said...

:-)))

அருமை!

குறிப்பாக, //மணாச்சி அப்பா, ஆப்பிச்க்கு மணாச்சி // :-)))

butterfly Surya said...

அமித்துக்கு ஆசிகள்.

அம்மாவிற்கு வாழ்த்துகள்.

Prakash said...

நான் கூட சின்ன வயசில இந்த மாதிரி ஸ்லாங் எல்லாம் தான் பயன்படுத்துவேனாம்.ஒரு இருபத்து வருடத்திற்கு முன் வலைத்தளம் இருந்தால் அம்மாவை எழுத சொல்லியிருக்கலாம்.

அருமையான பதிவு அமித்து அம்மா :)

ராமலக்ஷ்மி said...

அமித்து //அம்மா, புடிங்கே, கேட்ச்//, என் வாழ்த்துக்களை:)? அருமையா இருந்தது அப்டேட்ஸ்:))!

ஆகாய நதி said...

" ப்பா ஊக்குபா " இது நான் குட்டிப் பாப்பாவா இருந்தப்போ சொன்னது :)

என்னங்க ஆர்வமா நேரிலே பார்க்கிற மாதிரி படிச்சிட்டே வந்தா திடீர்னு வர்ச்சினி பாப்பு காணோம் :(

//
என் போன்று ஆரம்பித்தவர்களும் ஒரு சங்கம் ஆரம்பிக்கலாம். பதிவுக் கட்டணமாக ரெண்டு 100 வாட்ஸ் பல்பை கொடுத்துவிட்டு, சங்கத்து உறுப்பினராகலாம் :))))))))

//

அது சரி... நாங்களாம் எப்போ சேர்வது எவ்வளவு கட்டணம்? ஏனாக்க இனிமே தான் பல்புகள் எங்களுக்கு.. :)

ஆயில்யன் said...

//இந்த வார ஆனந்தவிகடனின் அட்டைப்படத்தில் ரஜினி படம் போட்டிருக்க, அப்பாவிடம் காட்டி, அப்பா ரஞ்ஜனி, ரஜ்ஜனி என்று அடையாளம் காட்டியிருக்கிறாள். இதற்கு முன்னர் எப்போதோ ஒருமுறை ஆ.வியில் அமித்து அப்பா அவரை அடையாளம் காட்டியதின் எஃபெக்ட் இது. தன் தலையின் பெயரை தன் மகளின் வாயால் கேட்டதனால் பார்த்தீயா, பார்த்தீயா என்று அமித்து அப்பாவுக்கு ஏகப்பட்ட சந்தோஷம்.///


சூப்பரேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் :)))))

ஆயில்யன் said...

//டிஸ்கி: கிழக்கு பதிப்பகத்தில், விலங்குகள், பறவைகள், உயிர் எழுத்து, வடிவங்கள் என கையடைக்க சதுர வடிவில் தடிமனான அட்டையில், விலை ரூ.25 (தள்ளுபடியில் ரூபாய் 20) கிடைக்கிறது. ஒரு நாள் எதேச்சையாக மயிலாப்பூர் போக அங்கே கிழக்கு பதிப்பகத்தார் வைத்திருந்த புத்தக கண்காட்சியில் வாங்க நேர்ந்தது.//

நானும் எங்க வீட்டு குட்டீஸ்க்குவாங்கி கொடுத்துட்டு வந்தேன் !!!

முதல் பக்கம் இருக்கும் ஆப்பிளை எடுத்து காண்பித்து ஆப்பி ஆப்பி என்று சவுண்டு விடறதுதான் ஸ்பெஷல் :))))

Vidhoosh said...

:) i loved reading through.
-vidhya

அ.மு.செய்யது said...

//சென்ற பதிவில் பின்னூட்டத்தில் முறுக்கு, சீடை பார்சல் செய்ய சொன்னவர்களின் கவனத்திற்கு ://

ரொம்ப நாள் ஆன மாதிரி இருக்கு..அமித்து அப்டேட்ஸ் வந்து..

எல்லாத்துக்கும் சேர்த்து ரசிகர்களை திருப்தியடையுமாறு நீளமான அப்டேட்ஸ்..திகட்ட திகட்ட..கியூட்.

// சென்ற பதிவில் பின்னூட்டத்தில் முறுக்கு, சீடை பார்சல் செய்ய சொன்னவர்களின் கவனத்திற்கு : //

அவ்வ்வ்வ்வ்வ்வ்..பூனேவுல கிருஷ்ணா ஸ்வீட்டுக்கு நான் எங்க போவ ??

Unknown said...

அற்புதம்... அமித்துவைச் சொன்னேன்

அமுதா said...

/*அம்மா, பென்சின் கொடுங்கே என்று கேட்டு வாங்கி நோட்டில் கிறுக்க ஆரம்பித்தாகிவிட்டாயிற்று...*/
அவளுமா?? :-))

/*பதிவுக் கட்டணமாக ரெண்டு 100 வாட்ஸ் பல்பை கொடுத்துவிட்டு, சங்கத்து உறுப்பினராகலாம் :))))))))
*/
என்னத்த சொல்ல?

ப்ரியமுடன் வசந்த் said...

ஒரு வருஷம் எட்டுமாசம் மூணு வாரத்துலயே அமித்து திருக்குறள்
சொல்லுதா?

அமித்துக்கு பாராட்டுக்கள்

ஆமா அமித்து அம்மா உங்க கிட்ட இரண்டு கேள்விகள்

1.அமித்துக்கு amishu ஸ்பெல்லிங் சரியா?

2.ஏன் என்ன மாதிரி சின்ன பசங்க பதிவுகள் பக்கம் வர மாட்டேன்றீங்க?

தப்பா கேட்டு இருந்தா சாரி மேடம்....

Dhiyana said...

கலக்கல அமித்து அம்மா. அமித்து வளர்ந்துகிட்டே இருக்கா..

Anonymous said...

படிக்கப்படிக்க சுவாரசியம். அமித்து பேச்சுக்கள் நேரில் கேட்க முடியாதா என்று ஏங்க வைக்கும் அளவுக்கு எழுதியிருக்கிறீர்கள்.

Thamira said...

சுகமான பதிவு..

இங்கே 1.7 ஆகிறது. இன்னும் பேச ஆரம்பிக்கவில்லை. எல்லாவற்றிற்கும் ஆங்ங்ங்.. ஊங்ங்ங்ங்தான் இன்னும்.

ஒரு நாள் 'ஏம்ல உயிர வாங்குற?' என்று எதேச்சையாய் சத்தமாக சொல்லிவிட பதிலுக்கு ஆங்காரமாய் சொன்னார்,

'ஏங்ங்ங் ஊங்ங்ங் வாங்ங்ங்?' நான் சொன்ன அதே ரிதம்..

"உழவன்" "Uzhavan" said...

கலக்கல் அமித்துமா :-)

பா.ராஜாராம் said...

இதுதான் நான் வாசிக்கும் முதல் "அமித்துவின் அப்டேட்ஸ்" அமித்தம்மா.அவ்வளவு அழகாய் வந்திருக்கு.அமித்துவாய் பிறக்க ஆசை கூட வந்திருக்கு(இந்தமாதிரி ஆசைகளுக்கு குறை ஒன்றும் இல்லை பராபரமே....)இனி போய் எல்லாம் வாசிக்கணும்.நம் குஞ்சுகளுக்கு நாம் வேறு என்ன தந்து விட இயலும்...இதற்கும் மேலாக!அமித்து குட்டிம்மா,அப்பா,ஆயாவிற்கும் என் அன்பை தாடா.

தமிழ்நதி said...

அமித்து அம்மா,

நானும் இணையத்தில் எவ்வளவோ வாசிக்கிறேன். உங்களது, சந்தனமுல்லையுடைய பக்கம் இங்கெல்லாம் போனால் மனம் இலேசாகிவிடுகிறது. குழந்தைகள்… குழந்தைகள்… மாதவராஜ்கூட சற்றுமுன்னர் ஒரு பதிவு போட்டிருக்கிறார். குழந்தைகள் பெரியவர்களுக்கு ‘பல்பு கொடுப்பது’வாசித்தேன். சிரிப்பாக இருந்தது. நீங்கள் மிக நுணுக்கமான அவதானிப்பாளர் என்று நினைக்கிறேன். தொடருங்கள்.