காலமும், சூழ்நிலையும் பிரிக்க இரு நண்பர்களிடமிருந்த தொடர்புஇழை அறுபடுகிறது. அவன் சாதிக்கும்போது இவளையும், இவள் பாராட்டுக்களை பெறும்போது அவனையும் நினைவு கூறுகிறாள். இந்த இடைப்பட்ட காலத்தில் அந்த தோழன், இந்தத் தோழியின் பழைய அலுவலகத்துக்கு சென்று பார்க்கிறான். அலுவலகம் புதுஇடத்துக்கு மாறி பழைய இடம் வெறிச்சோடி இருக்கிறது. தகவல்களை மட்டும் பெற்றுக்கொள்கிறான். அவன் சாதித்திருக்கவேண்டும் என்ற எண்ணத்தோடே இருவருக்கும் பொதுவான பழைய நண்பர்களை தொடர்பு கொள்கிறாள்.அலுவலகத்திற்கும் தொடர்பு கொள்கிறாள்.தொடர்புக்கான முயற்சிகள் கைகூடவில்லை. தான் சாதித்த வெற்றியை பகிர்ந்துகொள்ளும் துடிப்பில் ஒருவன் தன் பழைய தோழியை தேடிக்கொண்டு அவள் முன்பிருந்த வீட்டருகே சென்று தேடுகிறான். அதே கால நேரத்தில் இவளும் தன் தோழனைப் பற்றி எழுதி மகிழ்கிறாள். கடைசி கடைசியாக இருந்த ஒரு நம்பிக்கையின் மூலமாக அந்த நண்பனின் எண் கிடைத்துவிடுகிறது. தொடர்பும் கொண்டுவிட்டாள். நேரம்: மதியம் 12.49 மணி, நாள்: 03.08.2009
ஒரு ஹலோவில் கண்டுபிடிக்கப்பட்டாள் அவனின் தோழி.உற்சாகமிருவருக்குமிடையே ஊற்றெடுக்கிறது.
ஹேய் நான் நாலு படத்துக்கு பாட்டெழுதிட்டேன் தெரியுமா, டி.வி. ல கூட வந்தேனே, ஆடியோ ரிலிஸ் காண்பிச்சாங்களே. யேசுதாஸ் சார் கூட நான் எழுதுன ஒரு பாட்டைக் கேட்டு அழுதார்னு நியூஸ் வந்துச்சு. அப்புறம் முத்துக்குமார் கூட என்னோட பாடலோட ஒரு வரியை ரொம்ப பாராட்டினார்.
பாடறேன் கேளேன். தெளிவான வார்த்தைகள் துள்ளலாய் இனிமையாய் காதை அடைகிறது.
வாழ்த்துக்கள் பா,
என்ன நான் உயரம் தொடுவேனா, என்னை(யும்) பேச ஆரம்பிப்பாங்கள்ள ?
நானே என்னமோ சாதிச்சா மாதிரி இருக்கு, சந்தோஷத்தை சொல்ல முடியல. இப்போ என்ன செஞ்சுக்கிட்டு இருக்க, பழைய மாதிரி ஏதாச்சும் வேலை..?, புஷ்பா எப்படியிருக்கு, அம்மா.
நான் இப்போ லயோலால மீடியா சம்பந்தமா படிச்சுட்டு இருக்கேன், புஷ்பா போலீஸாகிடுச்சு, அம்மா சந்தோஷமா இருக்காங்க. நீ எப்படி இருக்க, அவரு, பாப்பா இருக்கா?.
ம், எல்லாம் நல்லா இருக்கோம். எங்க தங்கியிருக்க.
ஓ அங்கியா, எங்க வீட்டுல இருந்து பக்கம்தான், ஒரு நாள் வாயேன். புஷ்பாவ கேட்டதா சொல்லு. அம்மாவையும்.
புஷ்பா நம்பர் மெசேஜ் அனுப்பறேன், என் மெயில் ஐடி வாங்கிக்கோ. சரியா. ஒரு நாள் பார்ப்போம்.
முதல் மூன்று பின்னூட்டங்களில், இரண்டாமவராய் வந்த அ. மோகன்ராஜ்தான் மேற்கூறிய நபர். சராசரியாய், தன் கனவுகளை வறுமைக்கு தின்னக்கொடுக்காமல், அன்றாடங்களோடு போராடினாலும், உழைப்பாலும், விடாமுயற்சியாலும் உன்னை மீட்டெடுத்துக்கொண்ட நண்பனே! சிகரங்கள் உன்னைப் பேச, உயரம் தொட வாழ்த்துக்கள்.

19 comments:
Excellent..
எழுதியவரின் நட்பு கிடைத்தது.. நட்பின் கனவு நிறைவேறி இருந்தது..
எழுதியவரின் கனவும் நிறைவேற பிரார்த்தனைகள்.. வாழ்த்துக்கள்.
கூல் அமித்து அம்மா! சூப்பர்! வாழ்த்துகள்!! :-)
ஆஹா!
இரண்டாம் நண்பர் கிடைத்தாயிற்றா
வாழ்த்துகள் இருவருக்கும்.
:))
மகிழ்ச்சியான விசயம்.
உங்க நண்பராவது உங்களுக்கு திரும்ப கிடைத்ததில் சந்தோசம், வாழ்த்துகள்!
//சராசரியாய், தன் கனவுகளை வறுமைக்கு தின்னக்கொடுக்காமல், அன்றாடங்களோடு போராடினாலும், உழைப்பாலும், விடாமுயற்சியாலும் உன்னை மீட்டெடுத்துக்கொண்ட நண்பனே! சிகரங்கள் உன்னைப் பேச, உயரம் தொட வாழ்த்துகள்//
நாங்களும் வாழ்த்துகிறோம் அமித்து அம்மா. நட்பும் தொடரட்டும்...
அந்த கவிதை நண்பரும் விரைவில் உங்களை விரைவில் சந்திக்க வாய்ப்பு அமையட்டும்.
வாழ்த்துகள் இருவருக்கும்.!!
நீங்கள் சாதித்தது உண்மையிலே இந்த நட்பு தான்.
வாழ்த்துக்கள் !!
நன்று. வாழ்த்துக்கள்
ரொம்ப சந்தோஷம் அமித்து அம்மா! வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் அமித்து அம்மா :).
வாவ்.. கேக்கும் போதே சந்தோசமா இருக்கு அமித்து அம்மா.. :) முன்று பின்னூட்டங்கள் படிக்கும் போதே உங்கள் நண்பர்கள் சீக்கிரம் கிடைக்கட்டும் னு நெனச்சேன்.. ஆனா, இவ்ளோ சீக்கிரம் எதிர் பார்க்கல.. வாழ்த்துகள் :)
உங்கள் நண்பர் சினிமா பாடலாசிரியர் ஆனது மகிழ்ச்சியை அளிக்கிறது. அவர் நீண்ட கால சாதனை செய்து, பெரிய வளம் வர, உங்களுடைய நண்பர் என்ற முறையில் அவரை வாழ்த்துகிறேன்.
அவர் எழுதிய படங்களின் பாடல்களை அனுப்புங்களேன் படிக்கலாம்.
சந்தோஷமாயிருக்கிறது. எனது வாழ்த்துக்களையும் தெரிவியுங்கள்.
பூங்கொத்துக்களுடன் விருதும் கொடுத்திருக்கேன் வாங்கிக்கோங்க!
மகிழ்வான பகிர்வு. வாழ்த்துகள் உங்களுக்கு.!
வாழ்த்துக்கள். மிகவும் ஆச்சர்யமாக உள்ளது.
அட.. பார்ரா.. கேட்கும்போது மனதுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு அமித்துமா. சூப்பர் :-))
Post a Comment