ஜூலை 27லிருந்து ஆகஸ்து 2 வரை நீங்கள் நெகிழ்ச்சியும்,மகிழ்ச்சியுமான ஒரு உணர்ச்சியின் விளிம்பில் இருப்பீர்கள் என்று என் ராசிபலன் சொல்லியிருக்கவேண்டும். ஆம் அப்படித்தான் இருந்தது இந்த நாட்கள். நீங்கள் என் பதிவுக்கு பின்னே ஊட்டிய ஒவ்வொரு வரிகளிலும் எனக்கான ஊக்கமிருந்தது.பள்ளிக்காலத்திற்குப் பிறகு கிடைத்த மிகப்பெரிய பாராட்டுக்கள் இவையாகத்தான் இருக்கவேண்டும்.
ஒவ்வொருவரின் வாழ்த்துக்களையும், வார்த்தைகளையும் கொண்டு போய்,
பள்ளிக்கான கலைநிகழ்ச்சியில் பெயர்கொடுக்க முன்வரிசையில் கலைந்த கேசத்தோடும், கசங்கியசட்டையோடும் வரிசையில் முதன்முதலாக நின்ற என்னை, அலட்சியப்படுத்தி அத்தனை பேரின் முன்னர் கலங்கவைத்து அனுப்பிய மேரி ஜோசப்பின் டீச்சரிடம் படித்துக்காட்டவேண்டும்.
பள்ளியிலிருந்து விஷ்ராந்திக்கு போய் அங்கே இருக்கும் முதியவர்களை மகிழ்விக்க ஏதோ ஒரு சினிமாபாடலுக்கு ஆட ஒத்திகை நடக்கும்போது, இப்படி கைய, காலை நீட்டுறதுக்குப் பேரு டான்ஸ் இல்ல, ஒழுங்கா ஓரமா போய் உட்கார்ந்து வேடிக்கை பாரு, உனக்கு அதான் நல்லா வரும் என்று சக மாணவிகளின் முன்னர் தலை குனிய வைத்த மகாலஷ்மியிடம் படித்துக்காட்டவேண்டும்.
பத்தாவது கணக்கு வகுப்புத்தேர்வில் கடினமுயற்சியால் ஐம்பதுக்கும் மேல் மார்க் எடுத்திருந்ததைப் பாராட்டாமல், காப்பி அடிச்சுத்தானே இந்த மார்க்கை வாங்கினே என்று மற்றவர்கள் முன் குற்றவாளி போல் நடத்திய தன்ராஜ் சாரிடம் படித்துக்காட்டவேண்டும்.
புரிகிறது புரியவில்லையோ, சிரிப்பை பதிலாகத் தரும் என் வர்ஷினியிடமும், அம்மாவிடமும் படித்துக்காட்டவேண்டும்.
எதையாவது சாக்கு வைத்து, ஒரு ட்ரீட் உருவாக்கி அதற்கு புத்தகத்தை பரிசளிக்கும் நண்பன் அருணிடம் படித்துக்காட்டவேண்டும்.
முடிந்தால் ஆகஸ்ட் 5 பிறந்தநாளை வைத்துக்கொண்டு, ஜனவரி 31 அன்று செத்துப்போன மனதுக்கு நெருக்கமாக இருந்த சுதாவிடம் படித்துக்காட்டவேண்டும்.
இப்படியான ஒரு சூழ்நிலையை எனக்கு உருவாக்கித்தந்த தமிழ்மண நிர்வாகத்திற்கு எனது நன்றிகள்.
வலைப்பூவிற்கு வந்தபிறகு உண்டான அழகான நட்பை பெஸ்ட் ஃப்ரண்ட் என்று கொண்டாடிய அமுதா, தாரணிபிரியாவிற்கு என் அன்பும், நன்றியும்.

இந்த நட்பு விருதை என்னை ஊக்கப்படுத்தி, தொடர்ந்து பின்னூட்டமிட்டு வரும் வார்த்தைகளை தந்த உங்களனைவருக்கும் பகிர்ந்தளிக்கிறேன். (இந்த விருதினை தொடங்கி, அதற்கான வரைமுறைகளை வைத்தவர்கள் பிழை பொறுத்தருள்க)
நன்றி, வணக்கம்
அமித்து அம்மா.
25 comments:
அழகானதொரு வாரத்தைத் தந்திருக்கிறீர்கள் அமித்து அம்மா! மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது...:-) இன்னும் உயரங்களடைய வாழ்த்துகிறேன்!!
அமித்து அம்மா,
உங்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு இடுகையுமே, நட்சத்திர வார அந்தஸ்துக்கு உரியதுதானே?
தொடர்ந்து ப்ரகாசியுங்கள். ரசிக்கவும், நெகிழவும் காத்திருக்கிறோம்.
தோழமையுடன்
பைத்தியக்காரன்
இந்த வாரம் முழுக்கு அமிர்தமா பதிவுகளை கொடுத்திருக்கிறீர்கள். உங்களுக்குக்குத்தான் நன்றி. :)
நீங்கள் நட்சத்திர வாரத்தில் இன்னும் சில பதிவுகளை எழுதி இருக்கலாம் என்று தோன்றுகிறது.. :) நல்லதொரு வாரத்தை அளித்தமைக்கு நன்றி..
தமிழ்மண நட்சத்திர வாரத்தை சிறப்புற நிறைவு செய்தமைக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!
சென்ற வாரம் முழுதும் மின்னியது
வாழ்த்துகள்.
நட்பு விருதுக்கு வாழ்த்துகள்.
முல்லை சொன்னதை வழி மொழிகிறேன். மிகவும் நிறைவாகவும் அழகாகவும் இருந்தது உங்கள் நட்சத்திர வாரம். வாழ்த்துக்கள். தொடர்ந்து இது போல் எண்ணற்ற நட்சத்திரங்களை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்(றோம்).
//காப்பி அடிச்சுத்தானே இந்த மார்க்கை வாங்கினே என்று மற்றவர்கள் முன் குற்றவாளி போல் நடத்திய தன்ராஜ் சாரிடம் படித்துக்காட்டவேண்டும்.//
ஆசிரியர்கள் சிலர் இப்படி பாகுபாடு பார்ப்பதற்கு நானும் ஆளாகி இருக்கிறேன். ஆழமான வலி தான் அது. தகுதியற்ற அவர்களைப் பற்றி கவலைப் படாதீர்கள்.
//புரிகிறது புரியவில்லையோ, சிரிப்பை பதிலாகத் தரும் என் வர்ஷினியிடமும், அம்மாவிடமும் படித்துக்காட்டவேண்டும்//
இது தான் சரி!:-)
சந்தன முல்லையை வழி மொழிகிறேன்.
இந்த பாராட்டுகள் போதும்னு இந்த அளவிலயே நின்னுடாம,
இன்னும் நீஙக் நிறைய எழுதணும்...
வாழ்த்துக்கள் !!!
நட்சத்திர வாரம் ஒளிர்ந்தது. வாழ்த்துக்கள்.
//பள்ளிக்கான கலைநிகழ்ச்சியில் பெயர்கொடுக்க முன்வரிசையில் கலைந்த கேசத்தோடும், கசங்கியசட்டையோடும் வரிசையில் முதன்முதலாக நின்ற என்னை, அலட்சியப்படுத்தி அத்தனை பேரின் முன்னர் கலங்கவைத்து அனுப்பிய மேரி ஜோசப்பின் டீச்சரிடம் படித்துக்காட்டவேண்டும்.//
இன்றைக்கு அந்த டீச்சர் இந்த பதிவுகளை படித்தால் உங்களை தன் மாணவி என்று சொல்லி பெருமை பட்டு கொள்வார்!
நல்லா பிரகாசமா ஜொலிச்சு வெளிச்சம் கொடுத்ததுக்கு நாங்கல்ல நன்றி சொல்லனும் :)
நீங்க எழுதிகிட்டே இருங்க... இதற்கு வாரக் கணக்கெல்லாம் தேவையில்லை. ரசிக்கி முடிகிற இடுகைகளை தருவதில் நீங்கள் எப்பவும் சிறப்பு நட்சத்திரம்தான். இது வெறும் புகழ்ச்சியில்லை என்பது படிக்கும் அனைவருக்கும் தெரியும்.
///சென்ஷி said...
தமிழ்மண நட்சத்திர வாரத்தை சிறப்புற நிறைவு செய்தமைக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!////
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே
வர்ஷினி மாதிரியே இனிமையான பதிவுகளைத் தந்து எங்களை மகிழ வைத்ததற்கு நாங்கள் தான் நன்றி சொல்ல வேண்டும் அமித்து அம்மா.
மனம் நிறைந்த வாழ்த்துகள்.
//பள்ளிக்கான கலைநிகழ்ச்சியில் பெயர்கொடுக்க முன்வரிசையில் கலைந்த கேசத்தோடும், கசங்கியசட்டையோடும் வரிசையில் முதன்முதலாக நின்ற என்னை, அலட்சியப்படுத்தி அத்தனை பேரின் முன்னர் கலங்கவைத்து அனுப்பிய மேரி ஜோசப்பின் டீச்சரிடம் படித்துக்காட்டவேண்டும்.
பள்ளியிலிருந்து விஷ்ராந்திக்கு போய் அங்கே இருக்கும் முதியவர்களை மகிழ்விக்க ஏதோ ஒரு சினிமாபாடலுக்கு ஆட ஒத்திகை நடக்கும்போது, இப்படி கைய, காலை நீட்டுறதுக்குப் பேரு டான்ஸ் இல்ல, ஒழுங்கா ஓரமா போய் உட்கார்ந்து வேடிக்கை பாரு, உனக்கு அதான் நல்லா வரும் என்று சக மாணவிகளின் முன்னர் தலை குனிய வைத்த மகாலஷ்மியிடம் படித்துக்காட்டவேண்டும்.
பத்தாவது கணக்கு வகுப்புத்தேர்வில் கடினமுயற்சியால் ஐம்பதுக்கும் மேல் மார்க் எடுத்திருந்ததைப் பாராட்டாமல், காப்பி அடிச்சுத்தானே இந்த மார்க்கை வாங்கினே என்று மற்றவர்கள் முன் குற்றவாளி போல் நடத்திய தன்ராஜ் சாரிடம் படித்துக்காட்டவேண்டும்.//
அவமானங்களை வெகுமானங்களாக மாற்றியுள்ளீர்கள். சபாஷ். தமிழ்மணம் மூலம் நட்சத்திரமாகி வாரம் ஒன்றோ இல்லை இரண்டோ இடுகைகளை மட்டுமே தந்த நீங்கள் தினம் ஒரு இடுகையை வாசிக்கத் தந்தீர்கள். மகிழ்ச்சி. மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!
அன்புடன்
உழவன்
வாழ்த்துக்கள்
தொடர்ந்து எழுதுங்க
வாழ்த்துக்கள் !!! அழகா எழுதுறிங்க!! இன்னும் பல உயரங்களை தொட வாழ்த்துக்கள் !!!
நட்சத்திர வாரம் ஒளிர்ந்தது. வாழ்த்துக்கள்.
என் உள்ளம் நெகிழ வாழ்த்துக்கள் பா
விருது பெற்றமைக்கு பா
வாழ்த்துக்கள்
மனதாரப் பாராட்டுகிறேன். உங்கள் பதிவுகள் அனைத்துமே அற்புத நினைவுகளையும், நல்ல சிந்தனைகளையும், பார்வைகளையும் கொண்டு இருக்கின்றன. வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்
அன்பின் அமித்தும்மா...அதுக்குள்ள நட்சத்திர வாரம் முடிஞ்சிருச்சா? உங்களின் வளர்ச்சிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். நிறைய வாசியுங்கள், அதைவிட நிறைய எழுதுங்கள்.
தாமதமான வாழ்த்துக்கள்:)! விடுப்பில் இருந்ததால் நட்சத்திர வாரத்துக்கு வருகை தர இயலவில்லை!
வாழ்த்துக்கள் தங்கள் பணியை திறம்பட செய்தமைக்கு....
அன்புடன் ஜாக்கிசேகர்
Post a Comment