27 July 2009

வாழ்க்கைபுத்தகம்

எனக்கு நட்சத்திரங்களை எண்ணுவது மிகவும் பிடித்தமானவொன்று. தூக்கம் வராத வீசிங்க் படுத்தி எடுத்த காலகட்டங்களில், திண்ணையில் அம்மாவோடு படுத்துக்கொண்டு நட்சத்திரங்களை எண்ணிய இரவுகளின் கருமை இன்னும் என் விழிகளோடே வந்துகொண்டிருக்கிறது.
இப்போதெல்லாம் ஆறு மணி தூக்கத்திற்கே நேரமில்லாத பொழுது, நட்சத்திரங்களை எண்ண நேரம் கிடைக்கவில்லை. அப்போதும் எப்பவாவது, 8,9 மணி வாக்கில் அமித்துவோடு மாடியில் படுத்துக்கொண்டு, நட்சத்திரங்களைப் பார்த்துக்கொண்டு விரல் நீட்டி ஒன்னு, ரெண்டு, மூன்னு சொல்வோம்.
அமித்து மூன்று வரை சொல்லுவாள், அதற்குப்பிறகு அதில் அவளுக்கு இண்ட்ரஸ்ட் போய் விட மனமில்லாமல் அடுத்த விளையாட்டுக்கு தாவிப்போவேன் அவளோடே.

அமித்துவுக்கு அம்மாவான பின் நட்சத்திரங்களை எண்ண முடியாமல் போனாலும், அமித்துவின் பெயரால் தமிழ்மணத்தில் நட்சத்திரமாக எழுத வந்திருப்பது ஆச்சரியம் கலந்த விஷயமே, எனக்கும் மற்றும் உங்களுக்கும்.

வாழ்க்கை என்னும் புத்தகத்தில் நானிருப்பது இப்போது இந்த வலைப்பூ என்னுமோர் அழகிய அத்தியாயத்தில்.

வாழ்க்கை புத்தகத்தில்
விரும்பியோ விரும்பாமலோ
புரட்டப்பட்டுக்கொண்டே
இருக்கின்றன பக்கங்கள்

தாய், தந்தை
கணவன், மனைவி
குழந்தைகள்,உறவுகள்
நண்பர்கள், இன்ன பிற
என அத்தியாயங்கள்
நெடுகிலும்
!! மனிதர்கள்
?? மனிதர்கள்
மனிதர்கள் மட்டுமே

முற்றும்
எங்கே, எவ்வாறு
எனத் தெரியாத
இந்த வாழ்க்கை புத்தகம்

சுவாரசியமாகத்தான்
போகிறது
அன்றாடங்களோடு

வருடங்களில்
கரைகிறது
வயது

எப்படியும்
படித்து முடித்தாக
வேண்டிய
கட்டாயத்தில்
மனிதர்கள்

ஆம்
விரும்பியோ விரும்பாமலோ
புரட்டப்பட்டுக்கொண்டே
இருக்கின்றன
இரவையும், பகலையும்
சுமந்த நாட்கள்





நட்புடனும்
நன்றியுடனும்
அமித்து அம்மா.



44 comments:

கல்யாண்குமார் said...

வாழ்த்துக்கள், வாரம் முழுதும் தொடரட்டும் உங்கள் இனிய எண்ணங்கள்!

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள் சகோதரி.

Vidhoosh said...

விரும்பியோ விரும்பாமலோ
புரட்டப்பட்டுக்கொண்டே
இருக்கின்றன////

இங்கயே முடிச்சுடுங்க கவிதையை.
ரொம்ப அழகு. :)

மாதவராஜ் said...

நட்சத்திர வாழ்த்துக்கள்!

தமிழ் said...

/அமித்துவுக்கு அம்மாவான பின் நட்சத்திரங்களை எண்ண முடியாமல் போனாலும், அமித்துவின் பெயரால் தமிழ்மணத்தில் நட்சத்திரமாக எழுத வந்திருப்பது ஆச்சரியம் கலந்த விஷயமே, எனக்கும் மற்றும் உங்களுக்கும்./

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

வாழ்த்துகள்

rapp said...

வாழ்த்துக்கள் அமித்து அம்மா. சூப்பரா கலக்குங்க:):):)

Deepa said...

நல்ல பதிவு.
நட்சத்திர வாழ்த்துக்கள் அமித்து அம்மா!

சந்தனமுல்லை said...

வாழ்த்துகள் யசோ!! :-) கலக்குங்க!!

anujanya said...

நட்சத்திரத்திற்கு வாழ்த்துகள். கலக்குங்க.

அனுஜன்யா

அ.மு.செய்யது said...

வாவ்....தமிழ்மண நட்சத்திரமா ??

வாழ்த்துக்கள்....உண்மையிலே நீங்கள் ஒரு நட்சத்திர பதிவர் தான்.

அசத்தலான கவிதையோட ஆரம்பிச்சிருக்கீங்க....

இந்த வாரம் வலைச்சரத்துல ஆதவா...தமிழ்மணத்துல அமித்து அம்மா.....

டபுள் ஷாட்.................சரவெடி தொடங்கட்டும் !!!! மட்டற்ற மகிழ்ச்சி !!!!!!!!!!!

G3 said...

நட்சத்திர வாழ்த்துக்கள் :)

குடந்தை அன்புமணி said...

வாழ்த்துகள் அமித்து அம்மா. மின்னட்டும் நட்சத்திரங்கள். நாங்களும் சேர்ந்து எண்ணுகிறோம்.

பரிசல்காரன் said...

யாராவது தமிழ்மண நட்சத்திரமானா மொதல் பதிவு ‘நாந்தான் இந்த வார நட்சத்திரம்” என்று மட்டும் போடுங்கள். ஏனென்றால் என்ன எழுதினாலும் ‘வாழ்த்துகள்’ என்று மட்டும்தான் பின்னூட்டம் வரப்போகிறது!

வாழ்த்துகள்!

பரிசல்காரன் said...

அச்சச்சோ.. சொல்ல மறந்துட்டேன் பார்த்தீங்களா..

//சுவாரசியமாகத்தான்
போகிறது
அன்றாடங்களோடு//

இதுல இருக்கற ‘அன்றாடங்களோடு’ என்ற வார்த்தையை மிக மிக ரசித்தேன்.....

கே.என்.சிவராமன் said...

நட்சத்திரங்களை எண்ண ஆரம்பித்து, நட்சத்திரமாகவே மாறிவிட்ட அமித்து அம்மாவுக்கு வாழ்த்துகள் -:)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நட்சத்திர வாழ்த்துக்கள் அமித்து அம்மா.. :)

butterfly Surya said...

அருமையான நடையில் சொல்லியிருக்கிறீர்கள்.

வாழ்த்துகள்.

நட்புடன் ஜமால் said...

முற்றும்
எங்கே, எவ்வாறு
எனத் தெரியாத
இந்த வாழ்க்கை புத்தகம்

சுவாரசியமாகத்தான்
போகிறது
அன்றாடங்களோடு]]

அருமை.

நட்புடன் ஜமால் said...

ஆம்
விரும்பியோ விரும்பாமலோ
புரட்டப்பட்டுக்கொண்டே
இருக்கின்றன
இரவையும், பகலையும்
சுமந்த நாட்கள்]]

ஆம்! கடிகார முட்கள் சுற்றுவது போல

Suresh Kumar said...

வாழ்த்துக்கள் கலக்கல்

☀நான் ஆதவன்☀ said...

நட்சத்திர வாழ்த்துகள் அமித்து அம்மா. இந்த வாரம் முழுக்க கலக்குங்க :)

RAMYA said...

தமிழ் மன நட்ச்சத்திரமான எனது தோழி அமித்து அம்மாவுக்கு வாழ்த்துக்கள்!!

Anonymous said...

இதே போல் வாரம் முழுவதும் கலக்க வாழ்த்துகள்.

அப்துல்மாலிக் said...

வாழ்த்துக்கள்

வாரம் முழுதும் தொடரட்டும் உங்கள் அன்றாட எண்ணங்கள்

ஆதவா said...

கோடை காலங்களில் மொட்டை(?) மாடியில் படுத்துறங்குவது வழக்கம்.. அப்போது நட்சத்திரங்கள் எண்ணுவதும் அது எங்கே இருக்கின்றன என்று கிறுக்குத்தனமாக ஆராய்தலும் என் உறக்கத்திற்கு முந்தைய நொடிக்கான பொழுது போக்கு.

கவிதை நன்றாக இருக்கிறது.. உங்கள் வாழ்க்கைப் பக்கங்களை மீண்டுமொருமுறை திருப்பிப் பாருங்கள்.. மனிதர்களல்லாத வேறொன்று உடனிருக்கும்!~!!

நட்சத்திர வாழ்த்துக்கள்!!

அன்புடன்
ஆதவா

ரவி said...

ஹை...!!!

நட்சத்திரமா ? வாழ்த்துக்கள் >!!!!!!!!!!

dsfs said...

வாழ்த்துகள் நட்சத்திர அம்மாவுக்கு. கூடவே நட்சத்திர மகளுக்கும். cute amithu

தமிழ் அமுதன் said...

தமிழ்மண சூப்பர் ஸ்டாருக்கு வாழ்த்துகள்!!


//சுவாரசியமாகத்தான்
போகிறது
அன்றாடங்களோடு//

;;)

//வருடங்களில்
கரைகிறது
வயது//

கரையுமா ? கூடுமா ?

//எப்படியும்
படித்து முடித்தாக
வேண்டிய
கட்டாயத்தில்
மனிதர்கள்//

நட்சத்ரம் ஜொலிக்கிறது!!!!

நிஜமா நல்லவன் said...

வாழ்த்துக்கள் சகோதரி!

"உழவன்" "Uzhavan" said...

நட்சத்திர அறிமுகத்தை வாழ்க்கைப் புத்தகத்தோடு சொல்லியவிதம் மிக அருமை. இனிய வாழ்த்துக்கள் :-)

அன்புடன் அருணா said...

பெரிய பூங்கொத்தோடு வாழ்த்துக்கள் அமித்து அம்மா!!!

தமிழன்-கறுப்பி... said...

நட்சத்திர வாழ்த்துக்கள், கலக்குங்க...

அமுதா said...

நட்சத்திரமாக மேலும் மேலும் மின்ன வாழ்த்துக்கள். மிக்க மகிழ்ச்சி

பாச மலர் / Paasa Malar said...

வாழ்த்துகள்.

ஷைலஜா said...

வாழ்த்துகள்! ஆரம்பமே கவிதை நயம்!

cheena (சீனா) said...

நட்சத்திர நல்வாழ்த்துகள் அமித்து அம்மா

அபி அப்பா said...

அன்பான வாழ்த்துக்கள் அமித் அம்மா!!!!ஒரு ஓரத்தில் உட்காந்து எல்லா பதிவையும் பார்ப்பேன்!!!!

அமிர்தவர்ஷினி அம்மா said...

கொஞ்சமல்ல, நிறையவே நெகிழ்ச்சிக்கு உள்ளான அனைவரின் பின்னூட்டங்களுக்கும், அன்புக்கும் நன்றிகள் நன்றிகள் நன்றிகள்.

துபாய் ராஜா said...

நட்சத்திர வாழ்த்துக்கள்.

கண்மணி/kanmani said...

வாழ்த்துக்கள் சகோதரி
கலக்குங்கள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

நட்சத்திர வாழ்த்துக்கள்

ஒரு அகதியின் நாட்குறிப்பு !!! said...

நட்சத்திரப் பதிவாளருக்கு,
வாழ்த்துக்கள்! இனிய சிந்தனையால்
தமிழ்மணம் கமழட்டும்.
தமிழ்சித்தன்

மாதேவி said...

"நட்சத்திரங்களை எண்ணுவது மிகவும் பிடித்தமானவொன்று".

நட்சத்திரங்களை விரும்பும் வார நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள்.

Dhiyana said...

வாழ்த்துகள் அமித்து அம்மா.