கட்டிலைப் பிரித்தாயிற்று
எந்த கீறலுமின்றி
பீரோவை ஏத்தியாயிற்று
இத்யாதிகள
அட்டைப்பெட்டிக்குள்ளும்
சாக்குப் பைகளுக்குள்ளும்
கண்ணீர் மல்க
கடைசியாய்
குடியிருந்த வீட்டைப்பார்த்த போது
பீரோவின் காலிருந்த தடமும்
பாத்ரூமில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர் பொட்டும்
எண்ணெய் பிசுக்கொட்டிய சமையலறை சுவரும்
கதவுகளில் ஒட்டப்பட்டிருந்த டோரா புஜ்ஜி ஸ்டிக்கரும்
மஞ்சள், குங்குமத்தை பூசிக்கொண்ட நடுவீடும்
பொருட்களிருந்த இடங்களை
சூழ்ந்த வெறுமைத்தடங்கள்
கூவிஅழைத்தன
தன்னையும் எடுத்துப்போவென !!!
நினைவுகள் நிரப்பிய என்னை
சுமந்து கொண்டு
மெதுவாய்ப்
போய்க்கொண்டிருந்தது வீடு
வேறொரு வெற்றிடத்தை நோக்கி.
48 comments:
இடங்களை
சூழ்ந்த வெறுமைத்தடங்கள்
கூவிஅழைத்தன
தன்னையும் எடுத்துப்போவென !!]]
அற்புதம்.
மெதுவாய்ப்
போய்க்கொண்டிருந்தது வீடு
வேறொரு வெற்றிடத்தை நோக்கி.]]
வெற்றிடம் - சொல்லில் அடங்கா ...
மூன்றாண்டுக்கு ஒரு முறை நானும் இந்த ,விட்டுச் செல்லும் வேதனைகளை அனுபவித்திருக்கிறேன்.அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்.
அருமைங்க!
:))))))))))))
சூப்பரா இருக்கு கவிதை :D
வீட்டோட சேந்து நாங்களும் கிளம்பியாச்சு. புது வெற்றிடத்துல பால் காய்ச்சதும் பங்கு (நோட் தி பாயிண்ட்... பங்கு தான்.. போங்கு இல்ல :P) குடுப்பீங்கல்ல :))))
என்னங்க இது?? டோரா புஜ்ஜிய எடுக்காமையா போனீங்க.
ரொம்ப கஷ்டமா இருக்குங்க..
க்ளாஸ் அமித்து அம்மா... :-)
தோழமையுடன்
பைத்தியக்காரன்
நினைவுகள் நிரப்பிய என்னை
சுமந்து கொண்டு
மெதுவாய்ப்
போய்க்கொண்டிருந்தது வீடு
வேறொரு வெற்றிடத்தை நோக்கி. //
எந்த வீட்டையும் விட்டு வந்தபோதும் வராத நினைப்பு இலங்கை வீட்டை விட்டு வரும்போது இருந்தது. அதை திரும்ப உங்கள் கவிதை தந்தது.
சென்னையில் சொந்த வீடில்லாதவர்களுக்கு இவ்வாய்ப்பு அடிக்கடி நிகழும். அந்நிகழ்வை
அழகான கவிதையாக்கிவிட்டீர்கள்.
வீட்டை காலி செய்வதைப் போன்ற உணர்வை கண் முன் கொண்டு வந்துவிட்டது உங்கள் கவிதை...
//பொருட்களிருந்த இடங்களை
சூழ்ந்த வெறுமைத்தடங்கள்
கூவிஅழைத்தன
தன்னையும் எடுத்துப்போவென !!!
நினைவுகள் நிரப்பிய என்னை
சுமந்து கொண்டு
மெதுவாய்ப்
போய்க்கொண்டிருந்தது வீடு
வேறொரு வெற்றிடத்தை நோக்கி.//
இவ்வரிகள் மிகவும் கவர்ந்தது..
அருமையான வரிகள் !
அருமையா இருக்கு அமித்து அம்மா!
:-)
ரெம்ப நல்லா இருக்க அமித்து அம்மா ,வாழ்த்துக்கள்
கலக்கிட்டீங்க. க்ரேட். ரொம்ப நல்லாயிருக்கு.ஒரு வரியும் வீணில்லை.(உங்களுக்கு விருப்பமிருந்தால் உயிரோசைக்கோ, வேறு இதழுக்கோ அனுப்புங்களேன். தேர்ச்சி பெறும் என்று நம்புகிறேன்)
நல்ல கவிதை இது.
மே மாதம் வீடு மாறிய பொழுது எனக்கும் இதே எண்ணம் ஏற்பட்டது. வீட்டுக்காரரிடம் சாவியைக் கொடுக்கும் முன் ஒரு முறை ஆசைதீர எல்லா அறைகளையும் பார்த்துவிட்டுத்தான் கொடுத்தேன். பேசிய வார்த்தைகளும் அனுபவித்த உணர்வுகளும் மீண்டும் ஒரு ஆக்சன் ரீப்ளேயாக.
ஏதோவொன்றை இழந்தாற்போலிருந்தது; இத்தனைக்கும் வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டுக்கு.
நான் எழுத நினைத்த கவிதை நீங்கள் இன்னும் அதிக உணர்வுத்தளத்தில் இருந்து அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள்.
என்ன இருந்தாலும் பெண் மனது பெண் மனதுதான்.
/*பொருட்களிருந்த இடங்களை
சூழ்ந்த வெறுமைத்தடங்கள்
கூவிஅழைத்தன
தன்னையும் எடுத்துப்போவென !!!
நினைவுகள் நிரப்பிய என்னை
சுமந்து கொண்டு
மெதுவாய்ப்
போய்க்கொண்டிருந்தது வீடு
வேறொரு வெற்றிடத்தை நோக்கி. */
அருமை
பிரிவு, வெறுமை எல்லாவற்றிலும் மனிதர்கள் மிதந்து கொண்டும், நனைந்துகொண்டும்தான் இருக்கிறார்கள். அந்த நினைவுகள் வாழ்வின் வசீகரமாக எப்போதும் கூட வந்துகொண்டுதான் இருக்கின்றன. நல்ல கவிதைங்க.
பிரிவு, வெறுமை எல்லாவற்றிலும் மனிதர்கள் மிதந்து கொண்டும், நனைந்துகொண்டும்தான் இருக்கிறார்கள். அந்த நினைவுகள் வாழ்வின் வசீகரமாக எப்போதும் கூட வந்துகொண்டுதான் இருக்கின்றன. நல்ல கவிதைங்க.
வீட்டை விட்டு வீடு மாறும்போது ஏற்படும் வலிகள் அது சொல்லி மாளாது.
உங்கள் கவிதை யதார்த்தம்.
அருமையா எழுதி இருக்கீங்க அமித்து அம்மா.
பொருட்களிருந்த இடங்களை
சூழ்ந்த வெறுமைத்தடங்கள்////
க்ளாஸ்.. எளிமையாக!!! அருமையாக!!
நாங்கள் ஒவ்வொருமுறையும் வீட்டை மாற்றூம்பொழுது இதை
எண்ணியிருக்கிறேன்... இதுவரை பதினைந்து தாண்டியாயிற்று....
வீடுகளை மாற்றும் பொழுது
தவறி விட்டு வந்துவிடுகிறேன்
எப்படி எடுத்துச் செல்லுவது என்று
வீட்டுக்காரியிடம் கேட்க முடியவில்லை
புதிய வீடு, பழகாத அறைகள்
தவறுகளை மறக்காமல்
சொல்லித் தருகின்றன
மீண்டும் என்ற சொல்லை
இணைத்துவிட முடியாமல்
தொடர்ந்து செய்துவருகிறேன்
புதுப்புதுத் தவறுகளை
என்றேனும் ஒருநாள்
பழைய வீட்டுக்குள் நுழைகையில்
எந்த ஆர்ப்பாட்டமுமில்லாமல்
அமர்ந்திருக்கிறது
தவறிவிட்டு வந்த
என் பழைய தவறுகள்
சும்மா.... கவிதை எழுதிப் பார்த்தேன்!!! ஹி ஹி
மனதை பிழிந்த வரிகள்
அடுத்த வெற்றிடத்தை நோக்கி..>>>>
வாடகை குடியிருப்பவர்களின் வலிகளை அழகா விளக்கியுள்ளீர்
// கதவுகளில் ஒட்டப்பட்டிருந்த டோரா புஜ்ஜி ஸ்டிக்கரும்
//
குழந்தைகள் வாழும் வீடு...ரசித்தேன்.
நீங்கள் சமகாலத்து கவிஞர்.
வாழ்ந்த வீட்டை விட்டு பிரியும் போது ஏற்படும் மனவேதனையே இத்தனை கொடுமையென்றால்
வாழ்ந்த மண்ணை விட்டு பிரிதலை நினைத்து பார்க்கவே முடியாதல்லவா ??
வைரமுத்துவின் "பனைமரக்காடே" பாடல் வரிகள் நினைவுக்கு வந்து போகின்றன.
வெளியில் செல்லும்போது
நாலாவது வீட்டிலிருந்து
டாட்டா காட்டும் யாரோ ஒரு குழந்தை!
அடுத்தமாதம் காய்த்துவிடும் என
எதிர்பார்க்கப்படும் எதிர் வீட்டு
''சிறு நெல்லி'' மரம்!
தெரு முனையில் வண்டியை திருப்பும்போது
என் கூடவே ஓடிவந்து வீட்டுக்குள் நான் செல்லும் வரை
வாலாட்டி நிற்கும் என் செல்ல தெருநாய்!!
பழைய வீட்டில் இருந்து இவற்றை எல்லாம்
பிரியும் ஒரு வலி !
புது வீட்டில்!!
புதிதாக அடிக்கப்பட்ட
வண்ணத்தின் வாசனை!
பிரோவ இப்படி போட்டு கட்டில
அப்படி போட்டுக்கலாம்!!
இல்ல! இல்ல! கட்டில இப்படித்தான்
போடணும்!
இப்படி தர்க்கம் இல்லா விவாதங்கள்!!
புதிதாக அடித்த வண்ண சிதறல்கள்
சுவற்றோரம் சிந்தி கிடக்க,
அவற்றை கழுவ வேண்டுமே என்ற
கவலை!!
இப்படியாக மறந்து போகும் பழைய வீட்டின்
நினைவும் வலியும் !!!!
ஒரு முழு கட்டுரை தராத சில உணர்வுகளை வார்த்தைகளைச் சுறுக்கிய கவிதை தந்துவிடும். உங்கள் கவிதையும் அப்படியானது
அழகு.!
Excellent!
super amithu amma :)
விருது வாங்க வாங்க.
http://tharanipriyacbe.blogspot.com/2009/07/blog-post_26.html
நட்சத்திர வாழ்த்துகள் சகோதரி :)
நட்சத்திர வாழ்த்துக்கள் அமித்து அம்மா!
நட்சத்திரமானதுக்கு வாழ்த்துக்கள் அமித்து அம்மா !!!
வாழ்த்துக்கள்,
தமிழ்மணம் நட்சத்திர விருதுக்கு . மிக்க மகிழ்ச்சி
நட்சத்திர வாழ்த்துகள் அமித்து அம்மா :-)
தோழமையுடன்
பைத்தியக்காரன்
நட்சத்திர வாழ்த்துக்கள் சகோதரி!
நட்சத்திர வாழ்த்து(க்)கள் அமித்து அம்மா.
வீடு மாறிவரும் கவிதை புரிஞ்சது. நிலமை அப்படி!
என் பதிவில் உங்க தொலைபேசி எண்ணைப் பின்னூட்டுங்க. பிரசுரிக்கப்படாது.
வாழ்த்துகள்
நட்சத்திர வாழ்த்துக்கள்!
அருமையான கவிதை.
//இத்யாதிகள
அட்டைப்பெட்டிக்குள்ளும்
சாக்குப் பைகளுக்குள்ளும்//
எவ்வளவு கச்சிதம்! வாழ்த்துகள் AA.
அனுஜன்யா
அருமை.
உங்க கவிதையில சொல் சிக்கனம் கவிதைக்குரிய தன்மை எல்லாமெ சூப்பர்ஆ இருக்கு ஆனா நீங்க இன்னும் ரொம்ப தூரம் போகணும் உங்களுக்கு வாய்ப்பு கிடச்சா பிரெஞ்சு கவிஞர் ழாக் ப்றேவேர்ட் ஓட சொற்கள் கவிதை தொகுப்பு படியுங்க வெளியே நடக்குற விஷயங்களும் கவனிக்க தூண்டும் பெண்கள் வீட்டை கடந்து நடக்குற விஷயங்களையும் எழுதனுமிங்க்றது என்னோட விருப்பம் வாசகன் க.ராஜா
//பீரோவின் காலிருந்த தடமும்
பாத்ரூமில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர் பொட்டும்
எண்ணெய் பிசுக்கொட்டிய சமையலறை சுவரும்
கதவுகளில் ஒட்டப்பட்டிருந்த டோரா புஜ்ஜி ஸ்டிக்கரும்
மஞ்சள், குங்குமத்தை பூசிக்கொண்ட நடுவீடும்//
எடுத்துக்காட்டுகள் அற்புதம்
நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள்
அழகு அமித்து அம்மா...பூங்கொத்து!
பேஜ்லரா இருக்கும்போது நானும் எத்தனையோ வீடு மாத்தியிருக்கேன் அமித்துமா, ஆனா எனக்கு இப்படி ஒரு பீலிங்சும் வந்ததே இல்லை. ஒருவேளை கெளஸ் ஓனர்ட்ட சண்டை போட்டு வீட்ட காலி பண்ணுறதுனால தோணலயோ :-))
நாம் நேசிக்கும் ஒன்று நம்மைவிட்டு அகலும்போது நிச்சயம் ஒரு வருத்தம் இருக்கத்தான் செய்யும். அது வீடு மட்டுமல்ல. அருமையான சிந்தனையுடன் கூடிய கவிதை.
ஒன்னே ஒன்னு மட்டும் சொல்லிக்கறேன்..........
//எண்ணெய் பிசுக்கொட்டிய சமையலறை சுவரும்...//
இது மட்டும் எங்கூர்லே ஆகாது. வீட்டை எப்படி வாடகைக்கு விட்டோமோ அதே போலச் சுத்தமாத் திருப்பிக் கொடுக்கணும். இல்லைன்னா நம்ம அட்வான்ஸ்........போயே போச்.
நாம் கொடுக்கும் அட்வான்ஸ் வீட்டு ஓனருக்குப் போகாது. அது அப்படியே ஒரு பொது நிதியில் வீட்டுக் கண்ட்ரோலரிடம் இருக்கும். வீட்டு ஓனர் எல்லாம் சரின்னு பாண்டு பத்திரத்தில் கையெழுத்துப் போட்டால்தான் அவுங்க அட்வான்ஸைத் திருப்பிக் கொடுப்பாங்க.
நடுவில் பூந்துட்டேன்............மாப்ஸ் ப்ளீஸ் :-))))
அனைவரின் கருத்துக்கும், வாழ்த்துக்கும் எனதன்பு நன்றிகள்
அருமை. மனதை தொட்டது.
வாழ்த்துக்கள்.
Amiththu amma,
congratulations.
Natcaththira vaazththukaL.
where is my previous
comment:((
அருமையான கவிதை ....
Post a Comment