10 June 2009

அமித்து அப்டேட்ஸ்

ஒரு ஊல்ல ஒரு ச்சிங்கம், கச்சிச்சீ, மானு தொத்திச்சி - இது அமித்து எனக்கு சொன்ன ஒன்லைன் ஸ்டோரி.

கேட்ச், இக்சர், அவுட்டு, பேட்டு , பால்லு - இதெல்லாம் அமித்துவோட கிரிக்கெட் வார்த்தைகள்.

டென்னிஸ் பேட்டை பார்த்தால், உடனே கார்க் எங்க என்பாள் (தெருப்பசங்க விளையாடும்போது பார்த்து கார்க் என்ற வார்த்தையை கற்றுக்கொண்டாள் போல)

பேப்பரைப் பார்த்தால் கிழிக்கும் அமித்து, நான் படிக்கும் புத்தகஙக்ளை கிழிப்பதில்லை, எடுத்து வைத்து, படமிருந்தால் பார்த்து,
ம்மா, இத்து, இத்துன்னா, ந்ன்னா என்று கேள்வி கேட்பதோடு சரி. ஏன் அமித்தும்மா, ரொம்ப சமத்தாயிட்டே.

இட்டுனவேணீ - இது அமித்து அவள் ஆயாவை கூப்பிடும் மழலை.

ம்மா, ஊக்கம்மா, ஊக்கு - இரு கையை நீட்டி என்னை அவள் தூக்கச்செல்லும் அழகே தனிதான். ஒரு தடவை இப்படி சொல்லும் போது நான் பதிலுக்கு, ஏம்மா ஊக்கனும், சொல்லுங்க என்றேன், அதுக்கு ஒரு நொடி யோசித்து விட்டு, ம், ம், ல்ல, ஊக்கம்மா என்றாள்,:)-

அமித்துவுக்கு சாப்பாடு ஊட்டுவதற்கு, கிண்ணத்தை எடுத்தால், முதலில் ம்மா, கீழ்ழே என்பாள், சரி கீழ போலாம்மா என்று கீழே போனவுடன், ம்மா, மியாவ், பூன்ன என்பாள், இவளைப் பார்த்தாலே ஒரு கருப்பு வெள்ளை பூனை ஓடிவந்துவிடும், அமித்து சாப்பாடை அழகாய் வாயில் வாங்கி கீழே துப்பிவிட்டு, ம்மியா, ஆப்புடு, ஆப்புடு என்பாள். என்னத்த சொல்ல.

தண்ணீர், பால் என்று எதாவது பெட்ஷீட் மேலேயோ, இல்லை தரையிலோ பட்டுவிட்டால், ம்மா, ஊத்திக்கிச்சு, பாரேன், பாரேன் என்று அழைத்தாகிறது.

வேடிக்கை பார்க்க, ஜன்னலைத் திறந்தாலோ, ஜன்னலின் மேலுள்ள ஸ்கீரீன் அடிக்கடி அமித்து மேல் விழுந்து அமித்துவை டிஸ்டர்ப் செய்யும். இரண்டு நாட்களுக்கு முன்னர், ஸ்கீரினை எடுக்காமல் ஜன்னலைத் திறந்து வைத்து வந்துவிட்டேன். கொஞ்ச நேரம் கழித்துப் போய் பார்த்தால் அமித்து ஸ்கீரினின் ஒரு முனையைப் பிடித்து கொஞ்சம் கொஞ்சமாக சுருட்டி எடுத்துக்கொண்டு போய் ஜன்னல் கம்பியின் இடையில் சொருக ஆரம்பித்திருந்தாள். !!!

இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஒரு ஞாயிற்றுக்கிழமை, வேலையெல்லாம் முடித்துவிட்டு படுத்திருந்த மதிய நேரம்,தாகமாக இருந்தது எனக்கு. நான் சும்மானாச்சும் அமித்துவிடம்,வர்ஷினி அம்மாக்கு தண்ணீ தாகம் எடுக்குதுடா என்றேன், சொல்லிவிட்டு கொஞ்ச நேரம் கழித்து பார்த்தால், அமித்து கையில் ஒரு சொம்பு, அதனை எடுத்துக்கொண்டு போய் தண்ணீர் குடத்தில் இருந்து கொஞ்சம் (கொஞ்சமே கொஞ்சம்) தண்ணீர், ஒரு கையால் சொம்பை இறுக்கி அணைத்துக்கொண்டு, ஒரு கையால் சுவற்றைப் பிடித்து அவள் வந்ததைப்
எடுத்துக் கொண்டு வந்து எச்சோ, ம்மா ந்தா தண்ணீ என்றாளே பார்க்கணும்.

என் கையில் கொஞ்சம் சூடு பட்டுவிட்டிருந்தது. அது கருப்பாக கொஞ்சம் கொப்புளம் ரேஞ்சுக்கு இருந்தது. அமித்து இதைப்பார்த்துவிட்டு ம்மா, இத்து ன்னா என்றாள்.
நான், அம்மா கையில ஊ மா. சுட்டுச்சு என்றேன். அதைப்பார்த்துவிட்டு போய்விட்டாள், சிறிது நேரம் கழித்து வந்து ம்மா, கை காட்டு என்றாள், அவளின் கைவிரல்கள் ஈரமாக இருந்தது. அதை என் கையிலிருக்கும் தீக்காயத்தின் மீது தடவினாள். இதைப் பார்த்தியா, இதுக்குத்தான் நீ பக்கெட் தண்ணில கைய விட்டியாம்மா என்றபடியே அவளை தூக்கிக்கொண்டார்கள் அவளின் பாட்டி.

என்னைப்பொறுத்தவரையில் ஈன்ற பொழுதும் பெரிதுவத்த பயனாய் இந்த இரு நிகழ்வுகளே போதும், இனியும் அமித்துவால் நான் பெரிதாய் உவக்க நேரிடுமெனில் அவையெல்லாம் எனக்கு கூடுதலே.

36 comments:

சென்ஷி said...

:)

தமிழ் அமுதன் said...

அமித்து அவங்க அம்மாவைவிட புத்திசாலி
அவங்க அப்பா மாதிரி போல.......

கே.என்.சிவராமன் said...

டச்சிங் :-)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

ஆயில்யன் said...

கலக்கல் !


அமித்து சொன்ன விசயங்களை விட அத்தனை அழகாய் காட்ச் பண்ணி கரீக்டா ரிதமிக்கா சொல்லியிருக்கீங்களே அதுக்கு ! :)))

நட்புடன் ஜமால் said...

தண்ணீர் எடுத்து வந்த காட்சி

மிக மிக நெகிழ்வாய் ...

கார்க்கிபவா said...

:)))..

Deepa said...

குழந்தைக்குச் சுற்றிப் போடுங்கள்!
ரொம்ப ரசித்துப் படித்தேன்.

தண்ணீர் கொண்டு வந்து கொடுத்ததும் காயத்துக்குத் தடவி விட்டதும்...சான்ஸே இல்லை!

அமித்துக்கு மிய்யாவா? நேஹாக்கு ஒரு ”வவ் வவ்” உண்டு. அதைப் பார்த்தால் தான் சாப்பாடு இறங்கும்!

சந்தனமுல்லை said...

நல்லாருக்கு அமித்து அம்மா...பேச ஆரம்பிச்சுட்டாங்களா..ஜாலிதான்! :-))

சந்தனமுல்லை said...

//பூனை ஓடிவந்துவிடும், அமித்து சாப்பாடை அழகாய் வாயில் வாங்கி கீழே துப்பிவிட்டு, ம்மியா, ஆப்புடு, ஆப்புடு என்பாள். என்னத்த சொல்ல.//

செம! :-)))

சந்தனமுல்லை said...

படிச்சு முடிச்சதும் மனசை செண்டியா ஆக்கிட்டீங்க! அமித்து எங்களின் அன்பு! :-)

Dhiyana said...

அருமையான பதிவு

//அவளின் கைவிரல்கள் ஈரமாக இருந்தது. அதை என் கையிலிருக்கும் தீக்காயத்தின் மீது தடவினாள்.//

நெகிழ்வான தருணம்

//பேப்பரைப் பார்த்தால் கிழிக்கும் அமித்து, நான் படிக்கும் புத்தகஙக்ளை கிழிப்பதில்லை, எடுத்து வைத்து, படமிருந்தால் பார்த்து,
ம்மா, இத்து, இத்துன்னா, ந்ன்னா என்று கேள்வி கேட்பதோடு சரி.//

சோ க்யூட்

நாணல் said...

:) mazhalai mozhiye mozhithaangka.. romba negiva irundadhu padikkum podhu...

vinu said...

ammavai niyapagapaduthineergal algai varugirathu

Vidhya Chandrasekaran said...

choo chweet amithu:)

Anonymous said...

Beautiful

அ.மு.செய்யது said...

//ஒரு ஊல்ல ஒரு ச்சிங்கம், கச்சிச்சீ, மானு தொத்திச்சி //

இது க‌த‌..நீங்க‌ளும் தான் சிறுகதை எழுத‌றீங்க‌ளே ...

க‌டைசி வ‌ரிக‌ள் பார்த்து விட்டு நெகிழ்ந்தேன்..

Poornima Saravana kumar said...

வாவ்! அமித்து ச்சோ ஸ்வீட்:))

Poornima Saravana kumar said...

ஊல்ல ஒரு ச்சிங்கம், கச்சிச்சீ, மானு தொத்திச்சி //

இந்த வார்த்தைகளை அமித்து சொல்வது போலவே இருக்கு படிக்கும் போது:))

Poornima Saravana kumar said...

இட்டுனவேணீ
//

அழகு:))

Poornima Saravana kumar said...

ம்மா, ஊக்கம்மா, ஊக்கு - இரு கையை நீட்டி என்னை அவள் தூக்கச்செல்லும் அழகே தனிதான்//

ஆஹா... பரிக் இன்னும் சொல்வதில்லை 2 கையையும் மேலே தூக்கி கிட்டு ம் ம் ம் ம்மா என்பான்:)

Poornima Saravana kumar said...

அமித்து சாப்பாடை அழகாய் வாயில் வாங்கி கீழே துப்பிவிட்டு, ம்மியா, ஆப்புடு, ஆப்புடு என்பாள். என்னத்த சொல்ல.
//


செம விவரம்:))

Poornima Saravana kumar said...

ஸ்கீரினின் ஒரு முனையைப் பிடித்து கொஞ்சம் கொஞ்சமாக சுருட்டி எடுத்துக்கொண்டு போய் ஜன்னல் கம்பியின் இடையில் சொருக ஆரம்பித்திருந்தாள்//

நாம செய்யும் ஒவ்வொன்றையும் நன்கு உத்து கவனிக்கறாங்க இல்ல அதான்!

Poornima Saravana kumar said...

ஒரு கையால் சொம்பை இறுக்கி அணைத்துக்கொண்டு, ஒரு கையால் சுவற்றைப் பிடித்து அவள் வந்ததைப்
எடுத்துக் கொண்டு வந்து எச்சோ, ம்மா ந்தா தண்ணீ என்றாளே பார்க்கணும்.
//

கட்டியணைத்து முத்தம் கொடுத்தீங்களா????

Poornima Saravana kumar said...

அவளின் கைவிரல்கள் ஈரமாக இருந்தது. அதை என் கையிலிருக்கும் தீக்காயத்தின் மீது தடவினாள்//

ஒரு தாய்க்கு இதை விட பெரிய சந்தோசம் வேறு என்ன இருக்க முடியும்..

இதற்க்காகவே இன்னும் இன்னும் காயம் பண்ணிக்கலாம்!!

Poornima Saravana kumar said...

என்னைப்பொறுத்தவரையில் ஈன்ற பொழுதும் பெரிதுவத்த பயனாய் இந்த இரு நிகழ்வுகளே போதும், இனியும் அமித்துவால் நான் பெரிதாய் உவக்க நேரிடுமெனில் அவையெல்லாம் எனக்கு கூடுதலே.
//

நிச்சயமாக:))

வாழ்த்துகள் அமித்து அம்மா..

சின் பொண்ணு always good( 2 பேரையும் சேர்த்து தான் சொன்னேன்:)) )

இராகவன் நைஜிரியா said...

குழந்தைகளின் சிறு சிறு உதவிகளும், அவர்களின் மழலைப் பேச்சுக்களும் என்றுமே சுகம் தாங்க.

அருமையாச் சொல்லியிருக்கீங்க...

"உழவன்" "Uzhavan" said...

நீங்கள் எந்த பதிவு போடுவதற்கும் காலம் எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால் அமித்து அப்டேட்ஸ் போடுவதற்கு மட்டும் லேட் பண்ணாதீங்கபா.. அவளின் ஒவ்வொரு செய்கையும் மனதை மயிலிறகால் வருடுவதுபோல் உள்ளது.

Thamira said...

இறுதி வரிகள் மிகவும் டச்சிங்..

Malini's Signature said...

உங்கள் பதிவில் அமித்துவை ஒவ்வொரு முறையும் நேரில் பார்ப்பதை போலவே உள்ளது.. அமித்து எனக்கும் செல்லம்.

ஜீவா said...

nice amithu amma :)

அமுதா said...

அமித்து ரொம்ப சமத்து

அமிர்தவர்ஷினி அம்மா said...

நன்றி சென்ஷி

நன்றி ஜீவன் :)-

நன்றி சிவராமன் (உங்கள ஏனோ பை.காரன்னு சொல்லத்தோணலை)

நன்றி ஆயில்ஸ் அண்ணா

நன்றி சகோ

நன்றி கார்க்கி

நன்றி தீபா, நீங்க எப்ப நேஹாவைப் பற்றி எழுதப்போறீங்க.

நன்றி முல்லை

நன்றி மணிநரேன்

நன்றி தீஷூ அம்மா

அமிர்தவர்ஷினி அம்மா said...

நன்றி நாணல்

சாரி வினு

நன்றி வித்யா, ஜீனியர் என்ன செய்றாரு.

நன்றி சின்ன அம்மிணி

அப்படியா சொல்றீங்க அ.மு.செய்யது

தேங்க்யூ சின்பொண்ணு @ பரிக்‌ஷீத் அம்மா.

நன்றி இராகவன் சார்

அமிர்தவர்ஷினி அம்மா said...

சரிங்க உழவன்

தேங்க்யூ ஹர்ஷினிம்மா.

நன்றி ஜீவா

நன்றி அமுதா

Unknown said...

அமித்து பாப்பாவின் மழலையை கேட்க ஆசையாக இருக்கிறது அமித்தும்மா. இப்பதிவை வாசித்ததும் மிகவும் நெகிழ்ந்தேன். அமித்துவுக்கு தினமும் சூடன் சுத்தி போடுங்க. வாரத்துக்கு ஒரு முறை மிளகாய் வற்றல் அப்பறம் மாசத்துக்கு ஒரு முறை பூசணி okva? அமித்துவை அள்ளி அணைத்து ஆயிரம் முத்தங்கள் தர ஆசை. இப்போதைக்கு என் சார்பாக நீங்கள் கொடுத்துவிடுங்கள்.

R.Gopi said...

Excellent observation and writing.

Do write more ........

My best wishes for அமித்து......