04 June 2009

32 கேள்விகள்

01. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

இந்தப் பெயர் என் மகளால வந்தது (அமிர்தவர்ஷினி அம்மா)
என் இயற்பெயரான “யசோதா” என்பது பிடிக்காத போனதால், நானே எனக்கு சாரதா ந்னு பெயர் வச்சிக்கிட்டேன்.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

இரண்டு நாட்களுக்கு முன், எம்.ஜி.ஆர் பாடல்களை தொடர்ந்து கேட்க நேரிட, மாமாவின் நினைவு வந்து அழகான காலை, அழுகை காலை ஆகிவிட்டது.

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

மிக, மிக, மிக.......

4).பிடித்த மதிய உணவு என்ன?

தயிர்சாதம் (மதிய உணவு மட்டுமல்ல, மூணு வேளை கொடுத்தா கூட அதுவே போதும்)


5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

நட்புன்னாலே வேறு யாரோடவாவது தானே வெச்சுக்கணும். ஹி. ஹி.
ஆனா நான் நட்பு கொண்டாடறது, ரொம்பவே கஷ்டம்.


6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

ரெண்டுமே ரொம்ப பயம், சந்தோஷமா இது ரெண்டுத்துலயும் குளிக்கறவங்கள பார்க்கப்பிடிக்கும்.


7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

ஹேர் ஸ்டைல் (சொம்மா கண்ணு கண்ணுன்னு சொன்னா, போரடிக்குது)

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

கோபம்

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயம் எது?

பிடித்தது: பொறுமை
பிடிக்காதது: எல்லை கடந்த பொறுமை

10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

சமீபத்தில் இறந்த என் மாமா

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

ப்ளாக் & வொயிட் சுடிதார்

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

பாட்டா, ம்ஹூம்,
(ஆபிஸ்ல பதிவு எழுத வுடறதே பெரிய விஷயம், பாட்டு கேட்க வுடறது...??)

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

வெளிர் நீலம்

14.பிடித்த மணம்?

வாசல் தெளிக்கும் போது / மழை பெய்யும் முன் எழும் ஈர மண் வாசனை.
குழந்தையின் வாசனை.

15.நீங்க அழைக்கப் போகும் நபர்கள் யார் யார் ? ஏன் உங்களுக்கு அவர்களை பிடித்து உள்ளது. அவர்களை அழைக்கக் காரணம் என்ன ?

உமாஷக்தி, தீபா , வித்யா , நிழல் வலை தமயந்தி, ஊஞ்சல் தாரணி ப்ரியா

இவங்களயெல்லாம் பத்தி அதிகம் சொல்லத் தேவையில்லை.
அழைக்கக்காரணம்: அழைக்கனும் கேள்வி கேட்டுட்டு அப்புறம் அழைக்கக் காரணம் கேட்டா எப்புடிங்க?

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?

ஜீவன் @ எழுத்தாளர் பைரவன்
சுகமாய் ஒரு பிரசவம்

17. பிடித்த விளையாட்டு?

கல்லாங்கல் & பல்லாங்குழி

18.கண்ணாடி அணிபவரா?

இல்லை

19.எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?

பழைய திரைப்படங்களே அதிகம் பிடிக்கும்

20.கடைசியாகப் பார்த்த படம்?

கே.டி.வியில போட்ட ”ரிதம்”

21.பிடித்த பருவ காலம் எது?

குளிர்காலம், இந்தக் காலத்தில் உடல் தோலெல்லாம் சொர சொரன்னு இருந்தாலும், ஜன்னலோர பயணம்-முகத்தில் மோதும் சில் காற்று, சூடான தேநீர், போர்வைத் தூக்கம், கச கசன்னு இல்லாத ஒரு சூழல் .,,, இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்:

அ.வெண்ணிலா வின் பட்டுப்பூச்சிகளை தொலைத்த ஒரு பொழுதில் - சிறுகதைத் தொகுப்பு

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

டெஸ்க்டாப்பில் படமே வெச்சிருப்பதில்லை.

24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடிச்சது: மழலைகளின் குரல்
பிடிக்காதது: சத்தம் (சரியான தமிழ்ல சொன்னா சவுண்ட் விடறது)

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

ஹூப்ளி (கர்நாடகா) கி.மீட்டர் கணக்கெல்லாம் தெரியாது

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

ம், அதான் எழுதறது.

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

நம்மைப் பற்றி அறிந்தவர்களே, நம்மை சில சமயம் அவர்களின் சுயலாபத்திற்காய் பயன்படுத்திக்கொள்வது.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

கோபம்

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

மூணார்

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

சாரதா வாக

31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?

இதை என் கணவரிடம் தான் கேட்கனும்.(அதிக பட்சம் அவர் சொல்லும் பதில் இதுவாகத்தான் இருக்கும்: நண்பர்களோடு சுற்றுலா போவது)

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?

மரணத்தின் வாசல் வரை படித்துக்கொண்டே இருக்கக்கூடிய அனுபவம் + சுவாரஸ்யம் நிறைந்த புத்தகம்.

29 comments:

நட்புடன் ஜமால் said...

நட்புன்னாலே வேறு யாரோடவாவது தானே வெச்சுக்கணும். ஹி. ஹி\\



ஹி. ஹி

நட்புடன் ஜமால் said...

\\
27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

நம்மைப் பற்றி அறிந்தவர்களே, நம்மை சில சமயம் அவர்களின் சுயலாபத்திற்காய் பயன்படுத்திக்கொள்வது.\\


சிறப்பா சொன்னீங்க‌

நட்புடன் ஜமால் said...

\\மரணத்தின் வாசல் வரை படித்துக்கொண்டே இருக்கக்கூடிய அனுபவம் + சுவாரஸ்யம் நிறைந்த புத்தகம்.\\

அருமை.

மணிநரேன் said...

32...:)
இந்த கேள்விக்கு உங்களை போல நிறைய பதிவர்கள் அருமையான பதில் சொல்லிக்கிட்டே இருக்காங்க.

வாழ்த்துக்கள்.

ஆயில்யன் said...

//உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயம் எது?

பிடித்தது: பொறுமை
//

எச்சூஸ்மீ அத்தானோட இந்த கேரக்டர் க.முலேர்ந்தா வா?
இல்ல க.பிக்கு அப்புறமாத்தான் அப்படி ஆகிட்டாங்களா?

ஆயில்யன் said...

//31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?

இதை என் கணவரிடம் தான் கேட்கனும்.(அதிக பட்சம் அவர் சொல்லும் பதில் இதுவாகத்தான் இருக்கும்: நண்பர்களோடு சுற்றுலா போவது)//

என்னோட முந்திய கமெண்டினையும் இதை வைச்சுப்பொருத்தி பார்க்குறேன் !

டூ அத்தான்!

விட்டாச்சு லீவேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் ரேஞ்சுக்கு சவுண்ட் விட்டுக்கிட்டே வீட்டை விட்டு வெளிய வருவாங்கதானே??! :)))))

ஆயில்யன் said...

//உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

மிக, மிக, மிக......./


இப்படி கொஸ்டீன்லயே பாதி வந்து நிப்பாட்டிட்டா பதிலை சொல்லுங்க பாஸ் !

Dhiyana said...

\\மரணத்தின் வாசல் வரை படித்துக்கொண்டே இருக்கக்கூடிய அனுபவம் + சுவாரஸ்யம் நிறைந்த புத்தகம்.\\

அருமையான பதில். எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

ஆயில்யன் said...

//எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?

பழைய திரைப்படங்களே அதிகம் பிடிக்கும்//

ஒல்டு பர்சன்ஸ் கிட்ட இந்த கொஸ்டீன் கேட்டா இப்படித்தான் சொல்லுவாங்க !

ஆயில்யன் said...

//உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

கோபம்//

ஹய்யோ !

பாஸ் நீங்க டெர்ரரா?

மீ த எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்

sakthi said...

அனைத்து பதில்களும் அருமை

short & sweet answers

Vidhya Chandrasekaran said...

அழகான அளவான பதில்கள். அங்கங்க உங்க குசும்பும் எட்டிப் பார்க்குது:)

அன்புடன் அருணா said...

//உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயம் எது?
பிடித்தது: பொறுமை
பிடிக்காதது: எல்லை கடந்த பொறுமை//
அட என் பதிலும் அதே!!! அதே!!

Unknown said...

அழகான பதில்கள்...அடுத்தது நானா..ஆஹா..இன்னிக்கு இதான் ஹோம்வொர்க் அமித்தும்மா..

புதியவன் said...

//மரணத்தின் வாசல் வரை படித்துக்கொண்டே இருக்கக்கூடிய அனுபவம் + சுவாரஸ்யம் நிறைந்த புத்தகம்.//

எனக்கு மிகவும் பிடித்த பதில்....

தமிழ் said...

/32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?

மரணத்தின் வாசல் வரை படித்துக்கொண்டே இருக்கக்கூடிய அனுபவம் + சுவாரஸ்யம் நிறைந்த புத்தகம்./

அருமை

நன்றிங்க

வேத்தியன் said...

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

மிக, மிக, மிக.......//

பிடிக்குமா???
பிடிக்காதா???

:-)

வேத்தியன் said...

மரணத்தின் வாசல் வரை படித்துக்கொண்டே இருக்கக்கூடிய அனுபவம் + சுவாரஸ்யம் நிறைந்த புத்தகம்.//

நல்லா இருக்குங்க...

அப்துல்மாலிக் said...

எதார்த்தமான, தெளிவான பதில்கள்

மரணத்தின் வாசல் வரை படித்துக்கொண்டே இருக்கக்கூடிய அனுபவம் + சுவாரஸ்யம் நிறைந்த புத்தகம்.

வாழ்க்கை ஒருபுத்தகம் என்பதை அழகா சொல்லிட்டீங்க‌

தமிழ் அமுதன் said...

03. மிக... மிக... மிக... புடிக்குமா ? புடிக்காதா ?

///பிடித்தது: பொறுமை
பிடிக்காதது: எல்லை கடந்த பொறுமை//

இதெல்லாம் அநியாயம்!!

//பாட்டா, ம்ஹூம்,
(ஆபிஸ்ல பதிவு எழுத வுடறதே பெரிய விஷயம், பாட்டு கேட்க வுடறது...??)//

பதிவு எழுதும் போது வேலை பாக்குறது ? அதைவிட பெரிய விஷயம்!

//ஜீவன் @ எழுத்தாளர் பைரவன்//

இன்னிக்கு வீட்டுக்கு போனா ஆப்பிள் ஜுஸ் தான்!

//மரணத்தின் வாசல் வரை படித்துக்கொண்டே இருக்கக்கூடிய அனுபவம் + சுவாரஸ்யம் நிறைந்த புத்தகம்.//

சூப்பர்!!

குடந்தை அன்புமணி said...

உங்களைப்பற்றி கேட்கும்போதுகூட உங்க ட்ரேட்மார்க் குசும்பு போலையே... ரசித்து படித்தேன்.

Karthik said...

N.I.C.E. :)

ஆகாய நதி said...

அருமையான பதில்கள் அமித்து அம்மா... :))

நசரேயன் said...

//பிடித்தது: பொறுமை
பிடிக்காதது: எல்லை கடந்த பொறுமை//

நல்லா யோசிங்க இதெல்லாம் க.பி வந்து இருக்கும்

அ.மு.செய்யது said...

உங்க நிஜ பேரை ஆல்ரெடி கெஸ் பண்ணியாச்சு...

வாழ்வு பற்றிய உங்கள் கருத்து ரசிக்க வைத்தது...நிறைய படிக்க வேன்டியிருக்கு...

அகநாழிகை said...

நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

தமிழ்நதி said...

"ஆனா நான் நட்பு கொண்டாடறது, ரொம்பவே கஷ்டம்."

அப்படியா? அப்போ நாம எல்லாம் சேர்ந்து சுற்றுலா போறது எப்படி:) போனால் போகுது என்று என்னையும் கூப்பிட்டிருக்கலாம். கொதிக்கும் மனதை வேறு திசைக்குத் திருப்பியிருப்பேன். (சும்மா சொன்னேன். கூப்பிட்டுடாதீங்க)

"உழவன்" "Uzhavan" said...

//என் இயற்பெயரான “யசோதா” என்பது பிடிக்காத போனதால், நானே எனக்கு சாரதா ந்னு பெயர் வச்சிக்கிட்டேன்.//

அழகான யசோதா எனும் பெயர் எப்படி உங்களுக்குப் பிடிக்காமல் போனதோ!!!

//வாசல் தெளிக்கும் போது...//

ம்ம்ம்.. முற்றத்துல சிமெண்ட் போடலயா?? சென்னையில, வாசல் தெளிக்கும்போது ரசிக்கக்கூடிய மண் வாசனை வருதுனா ஆச்சரியமா இருக்கு அமித்துமா :-)

இப்போதும் கல்லாங்கல் & பல்லாங்குழி ஆடுகிறீர்களா? ஆம் என்றால் கொடுத்துவைத்தவர்கள்தான் நீங்கள். இல்லையென்றால் விளையாட முயற்சி செய்யுங்கள்.

//ஹேர் ஸ்டைல் (சொம்மா கண்ணு கண்ணுன்னு சொன்னா, போரடிக்குது)//

அப்ப வழுக்கை விழுந்திருந்தால்? :-)

//
வித்யா said...

அழகான அளவான பதில்கள். அங்கங்க உங்க குசும்பும் எட்டிப் பார்க்குது:)//

குசும்பா?? அமித்துமா உங்களிடமா?? எனக்கு இது புதுத் தகவலாக உள்ளது.

அமுதா said...

/*ஹேர் ஸ்டைல் (சொம்மா கண்ணு கண்ணுன்னு சொன்னா, போரடிக்குது)*/
:-))

/*மரணத்தின் வாசல் வரை படித்துக்கொண்டே இருக்கக்கூடிய அனுபவம் + சுவாரஸ்யம் நிறைந்த புத்தகம்.
*/
சுவாரசியமான விளக்கம்