28 April 2009

வாழ்த்தலாம் வாங்க

சில பேரை பார்த்தவுடன் இன்னதுதான் காரணம் என்றே தெரியாமல் பிடித்துப் போய்விடும். அதுபோலவே சிலரின் எழுத்துக்களும். அவர் தம் எழுத்துக்களை வைத்து அவரைப் பற்றிய கற்பனையெல்லாம் வளர்ந்து கொண்டிருக்கும். பாலினம் தாண்டி எழுத்துக்களின் மேல் ஒரு இனம் புரியா சினேகம் ஏற்பட்டிருக்கும். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம், ஆமா இப்ப எதுக்கு இதெல்லாம் சொல்றீங்க என்று கேட்பவர்களுக்கு, இப்படித்தான் எழுத்தின் மேல் ஏற்பட்ட ஈர்ப்பால் மிகவும் பிடித்துப்போய், பின்னர் பின்னூட்டங்களால் ஒரு சினேகம் வளர்ந்தது. நாங்கள் அதிகம் பேசியதில்லை. பதிலாக அவர் தம் பதிவுகளையே முடிந்தவரை முதலாய் படித்து வைத்து, நேரில் பேசிய ஈர்ப்பினை உண்டு செய்துகொள்வேன். முதன் முதலாய் அவர்களைப் பார்த்தது கலைஞர் டி.வி.யில் காதலர் தினம் கவிதை வாசிப்பின் போதுதான். பச்சை புடவையில் வந்து, ஐந்தே நிமிடம்தான், அவசரமாய் ஒரு கவிதை படித்துவிட்டு போனார்கள். நிழல் பிம்பத்தின் மேல் ஒரு நிஜ பிம்பம் விழுந்தது. அந்த நிஜ பிம்பம் வேறு யாருமல்ல....
எழுத்தாளர், கவிஞர் பதிவர் உமாஷக்தி....




சரி அதுக்கென்ன இப்ப என்று கேட்பவர்களுக்கு, இப்ப எதுவும் இல்ல, நாளைக்குத்தான்.

நாளைக்குத்தான் (29.04.2009) அவங்களோட பிறந்தநாள்.

வாழ்த்துக்கள் தோழி

ஈரமும், மென்மையுமான உங்களின் எழுத்துக்களைப் போல, தித்திக்கும் தமிழ் போல, எத்திக்கும் புகழ் மணக்க, நீடுழி வாழ எனது வாழ்த்துக்கள் மற்றும் ப்ரார்த்தனைகள்

அப்படியே இன்னொரு பதிவருக்கும் வாழ்த்துக்கள் சொல்லிடுங்க.

என் பள்ளித் தோழியும், பதிவருமான மோனி புவன் அம்மா, அவங்களுக்கு (30.04.2009) அன்று பிறந்தநாள்.

வாழ்த்துக்கள் க்ருஷ்ணா....
பல வருடங்களுக்குப் பிறகு, நான் உனது பிறந்த நாளை ஞாபகம் வைத்திருந்து வாழ்த்துகிறேன், வாழ்த்தப் போகிறேன்.

27 comments:

சந்தனமுல்லை said...

நீண்ட நாட்களுக்குப் பிறகு வாழ்த்துப்பதிவு மூலம் வருகை தந்திருக்கும் உங்களுக்கு வாழ்த்துகள்! :-)

உமாஷக்திக்கும், மோனிபுவன் அம்மாவிற்கும் அட்வான்ஸ் வாழ்த்துகள்!

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்

வாழ்த்துகள்

Vidhya Chandrasekaran said...

நானும் வாழ்த்துக்களை சொல்லிக்கிறேன்.

அமுதா said...

நானும் உங்களோடு சேர்ந்து இருவருக்கும் வாழ்த்துகள் தெரிவித்துக்கொள்கிறேன்

அப்துல்மாலிக் said...

HAPPY BIRTHDAY BOTH OF YOU

ஆகாய நதி said...

அப்படியே என்னுடைய வாழ்த்துகளும் இருவருக்கும் :)

குறைவில்லா வளங்கள் பதினாறும் பெற்று இன்பம் துய்க்க கடவுள் அருளட்டும்!:)

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்

வாழ்த்துகள்

இராகவன் நைஜிரியா said...

நானும் உங்களுடன் சேர்ந்து, உமா ஷக்தி, மோனி புவன் அம்மா அவர்களையும் வாழ்த்துகின்றேன்.

எல்லாம் வல்ல ஆண்டவன் இருவருக்கும் எல்லா நலங்களையும், வளங்களையும் அருளுவாராக.

கவிதா | Kavitha said...

உமாஷக்தி பிறந்த நாள் வாழ்த்துக்கள் !

Advance Wishes !!

ஆயில்யன் said...

எல்லா நல்ல செய்திகளுக்கும் வாழ்த்துக்கள் :))

ராமலக்ஷ்மி said...

உமாஷக்திக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

மோனிபுவன் அம்மாவுக்கும் அட்வான்ஸாக சொல்லிக் கொள்கிறேன்:)!

ஆயில்யன் said...

உமா ஷக்திக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!

ஆயில்யன் said...

கிருஷ்ணா அக்காவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :))

Unknown said...

மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது அமித்து அம்மா. உடல் நிலை மற்றும் கொஞ்சம் மன நிலை சரியில்லாத நிலையில் உங்கள் வாழ்த்துக்களும் அன்பும் அருமருந்தாய் இருக்கிறது. இதைவிட சிறந்த பரிசு வேறு எதுவும் இருக்கமுடியாது அமித்தும்மா. உங்களுக்கும். வாழ்த்திய அன்புள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றி....;)))))) அமித்து செல்லத்திற்கு அன்பான முத்தங்கள்.

அன்புடன் அருணா said...

எங்கே போயிருந்தீங்க???ரொம்ப நாளா ஆளையே காணோம்???
வாழ்த்துக்கள்..
அன்புடன் அருணா

அப்பாவி முரு said...

வாழ்த்துக்கள் அக்காஸ்...

இனிப்பு எப்ப கிடைக்கும்???

வல்லிசிம்ஹன் said...

அமித்து அம்மா, நீங்க வாழ்த்துச் சொல்கிற விதம் ரொம்ப அழகா இருக்கறதால அதிலியே கவிதாயினி உமாஷக்திக்கும்,மோனிபுவன் அம்மாவுக்கும் 29ஆம் தேதிப் பிறந்தநாள் வாழ்த்துகள்.

Karthik said...

வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்..!

:)

Deepa said...

நானும் உங்களோடு சேர்ந்து இருவருக்கும் வாழ்த்துகள் தெரிவித்துக்கொள்கிறேன்.

வாங்க அமித்து அம்மா.. ரொம்ப நாளா காணோம்?

தமிழ் said...

வாழ்த்துகள்

அமிர்தவர்ஷினி அம்மா said...

வாழ்த்துகளை வழங்கிய அனைவருக்கும் நன்றிகள்....

ஒரு வாரமா உள்ளூர்ல இல்ல. அதான் மிஸ்ஸிங்க்.

இனிமே உங்க கடைகளுக்கு எல்லாம் ரெகுலர் கஷ்டமரா வந்துடுவேன்.....

:))-

SK said...

வாழ்த்துக்கள் மோனி புவன் அம்மா மற்றும் உமா சக்தி.

"உழவன்" "Uzhavan" said...

அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அமிமா.. "வாழ்த்தலாம் வாங்க" வழியாக என்ன பாடல் அவங்களுக்கு டெடிகேட் பண்ணலாம்? சொல்லுங்க.. பண்ணிருவோம் :-)

தமிழ்நதி said...

வாழ்த்துக்கள் உமா ஷக்தி,

இப்போதுதான் birthday girl ஐ வழியனுப்பிவிட்டு வந்தேன். அமித்து அம்மா, பிறந்தநாட்களை ஞாபகம் வைத்துக்கொள்ள என்ன செய்வது? எனக்கு யாராவது அல்லது அவர்களே சொன்னால்தான் நினைவில் வருகிறது. என்ன இது சம்பிரதாயம் என்றும் இருக்கும். ஆனால் வாழ்த்தப்படுபவரின் குரலில் இருக்கும் வெட்கம் கலந்த மகிழ்ச்சி எனக்குப் பிடிக்கும்.

Thamira said...

வாழ்த்துக்கள் தோழியரே.!

மோனிபுவன் அம்மா said...

உமாஷக்திக்கும், எனக்கும் வாழ்த்து சொன்ன அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் நன்றிகள்

சென்ஷி said...

மோனி புவன் அம்மாவிற்கு சற்று தாமதமான என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! :)