யாரும் நுழையாத
ஓர் உலகத்துக்குள்
அழைத்து சென்றது
ஆக்ரமித்தது
எனக்கான நிமிடங்களை
அம்மா
”ஆய்”
சட்டென
பொருத்திக்கொண்டேன்
என்னை
எனக்கான இடத்தில்.
.......................................
சிறுகுறிப்பு வரைக
20 வரிகளுக்கு மிகாமல்
2 பக்கங்களுக்கு குறையாமல்
இவை எல்லாவற்றிலும்
எழுதிவிட முடிகிறது
வாழ்க்கையை
எழுதத்தெரியாதவனுக்கு
இன்னும் சுலபம்
ஒரு பெருமூச்செறிதல்
இயம்பிவிடும்
.............................................
தூணிலும் இருக்கிறான்
துரும்பிலும் இருக்கிறான்
குண்டுகளிலுமா????
............................................
(தோழர் ஆதிமூலகிருஷ்ணன், கவிதைக்கு பக்கத்துலயாவது வந்திருக்கேனா ???)
22 comments:
//தோழர் ஆதிமூலகிருஷ்ணன், கவிதைக்கு பக்கத்துலயாவது வந்திருக்கேனா ???)//
அதை ஏங்க அவர் கிட்ட போய் கேட்கறீங்க?
உங்கள் வலைப்பூவின் தலைப்பே அழகு..
இந்த கவிதையும் அழகு.
//ஒரு பெருமூச்செறிதல்
இயம்பிவிடும்//
நல்ல வார்த்தைப் ப்ரயோகம்
கலவையான் உணர்ச்சிகள்:)
//யாரும் நுழையாத
ஓர் உலகத்துக்குள்
அழைத்து சென்றது,
ஆக்ரமித்தது
எனக்கான நிமிடங்களை.
அம்மா
”ஆய்”,
சட்டென
பொருத்திக்கொண்டேன்
என்னை
எனக்கான இடத்தில்.//
கற்பனைக்கும், வித்தியாசமான நிதர்சனமும் உள்ள வாழ்க்கையில்,
வித்தியாசமில்லாமல் பொருந்துவது தான் வாழ்க்கை.
வாழ்க்கையை அனுபவித்து வாழுங்கள்.
//சிறுகுறிப்பு வரைக
20 வரிகளுக்கு மிகாமல்
2 பக்கங்களுக்கு குறையாமல்
இவை எல்லாவற்றிலும்
எழுதிவிட முடிகிறது
வாழ்க்கையை
எழுதத்தெரியாதவனுக்கு
இன்னும் சுலபம்
ஒரு பெருமூச்செறிதல்
இயம்பிவிடும்//
நல்லா இருக்கு !
//தூணிலும் இருக்கிறான்,
துரும்பிலும் இருக்கிறான்.
குண்டுகளிலுமா????//
என்ன சொல்லுறதுன்னே தெரியலை.
விதின்னு சொல்லி பொலம்புறத தவிர வேற வழியில்லை...
என்னோட நீயாக நான் பதிவில், அவரோட பின்னூட்டம் பாருங்கள் கார்க்கி. அதில் மட்டுமல்ல, இன்னும் சில பதிவுகளிலும்.
பின்னூட்டம் என்பது எழுதுபவருக்கு ஊட்டம் என்பது புரியும்.
பதுமை,
நர்சிம் சார்,
வித்யா,
அப்பாவி முரு,
ஆயில்ஸ் அண்ணா,
அப்பாவி முரு
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
இரண்டாம் கவிதை
கவிதை.
:)
சட்டென
பொருத்திக்கொண்டேன்
என்னை
எனக்கான இடத்தில்.\\
வெகு சிறப்பு சகோதரி.
தன் நிலை அறிதல் தான் இப்போ நிறைய மிஸ்ஸிங்
இரண்டாவது கவிதை மிகவும் நன்றாக இருக்கிறது. இன்னும் கொஞ்சம் செதுக்கலாம். வாழ்த்துகள்!
arumai
naala kavithai
//தூணிலும் இருக்கிறான்
துரும்பிலும் இருக்கிறான்
குண்டுகளிலுமா????//
மனிதத் தவறால் மதங்களின் மீதே வெறுப்பு வந்துவிடும் நிலையை, குறள் போன்ற குறுகிய வரிகளால், சுருக்கென கேள்வி கேட்டுள்ள விதம் மிக அருமை.
//சட்டென
பொருத்திக்கொண்டேன்
என்னை
எனக்கான இடத்தில்.//
//ஒரு பெருமூச்செறிதல்
இயம்பிவிடும்//
//குண்டுகளிலுமா????//
மூன்றும் முத்துக்கள்!
சிறுகுறிப்பு வரைக
20 வரிகளுக்கு மிகாமல்
2 பக்கங்களுக்கு குறையாமல்
இவை எல்லாவற்றிலும்
எழுதிவிட முடிகிறது
வாழ்க்கையை
எழுதத்தெரியாதவனுக்கு
இன்னும் சுலபம்
ஒரு பெருமூச்செறிதல்
இயம்பிவிடும்
நல்லாருக்கு.
//எழுதத்தெரியாதவனுக்கு
இன்னும் சுலபம்
ஒரு பெருமூச்செறிதல்
இயம்பிவிடும்//
இந்த வரிகள் அருமை...
அரு்மைங்க...அதுவும் இரண்டாம் கவிதை கலக்கல்.
தூணிலும் இருக்கிறான்
துரும்பிலும் இருக்கிறான்
குண்டுகளிலுமா????///
நல்ல வரிகள்.
கலக்கறீங்க அமித்து அம்மா! மூன்று கவிதைகளுமே முத்துகள்! :-)
மூனுமே நல்லாஇருக்குது.
first is 1 st
2 nd is 2 nd
3 rd is 3 rd.
நல்ல கவிதைகள்!
வாழ்த்துக்கள்.
Post a Comment