18 March 2009

ரசிக்கத்தக்கதுதான் வாழ்க்கை

அதிகாலை காகம் கரைதல், கிளியின் கிக்கீ, எங்கோ ஒலிக்கும் சுப்ரபாதம்,

யாரோ யாரையோ எழுப்பும் ஒலி, பேப்பர்க் காரனின் படக் பேப்பர் வீசல்,

வெற்றுக் கைகளை சில்லிட வைக்கும் பால் பாக்கெட்,

காரைத் தரையில், கட்டை தென்னந்துடைப்பத்தால் வரும் சர்... ரக், சர்... ரக் ஓசை,

பின்னர் வளையல் ஒலியினூடே வரும் ஸலக், ஸலக் தண்ணீர் தெளிக்கும் ஓசை.

குழாயைத் திறந்தபின் ஒரு சட சட சத்தத்துக்கு பின்னர், சில்லென்று கை மேலே படும் நீர் துளிகள்.

பார்த்துக்கொண்டே இருக்கும் போதே புஸ் ஸென பொங்கும் பால்,

ஒரு சோம்பலுடன் அடிநாக்கில் தித்திப்பும் கசப்புமாய் படரும் காபி,

சின்னதும் பெரியதுமான நீர் கொப்புளங்களுடன் சல சலவென கொதிக்கும் உலை.

ஒரு நொடியும் கடத்தாது, உள்ளிருக்கும் அழுத்தத்தை சரியான இடைவெளியில்
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் என்று வெளியேற்றும் குக்கர்,

எங்கோ பாத்திரங்கள் உருளும் ஓசை, பூக்காரர், தயிர்க்காரரின் ரைமிங்க் கத்தல்கள்

இடையிடையே சிணுங்கலுமாய், சிரிப்புமாய் ஓடிவந்து காலை கட்டிக்கொள்ளும் செல்ல மகள்,

வியர்வையில் குளித்து வெளிவந்தபின், சில்லென முகத்தில் மோதும் வெளிக்காற்று.

என்றாவது சிரித்துக்கொண்டே டாட்டா சொல்லும் மகளின் செல்ல முகம் மெல்ல மெல்ல மறையும், ஒரு முருங்கை மரத்தின் இலைகளினூடே.

ங்க்கொய்ய்ய்ய்ங் என்று வந்து நிற்கும் மின்சார ரயில், அபூர்வமாய் வாய்க்கும் நெரிசலற்ற பயணம், இடிபட்டுக் கொண்டே ஏறினாலும் இயல்பாய் எடுத்துக்கொள்ள வைத்த மனசு,
காலை மிதித்தாலும் சாரி சொல்லாத மனிதர்கள் பார்க்கும் வெற்றுப் பார்வை

அம்மா இடுப்பில் ஒய்யாரமாய் அமர்ந்து கொண்டு பொக்கை வாய் சிரிப்பை உதிர்க்கும் குழந்தை

என....................

தவிர்க்கவே முடியாத அன்றாடங்களின் அவசரங்களில் அகப்பட்டு உழன்றாலும், ரசிக்கத்தக்கதுதான் வாழ்க்கை.

ருசித்து உண்ணுங்கள், ரசித்து வாழுங்கள்.

28 comments:

நட்புடன் ஜமால் said...

\\இடையிடையே சிணுங்கலுமாய், சிரிப்புமாய் ஓடிவந்து காலை கட்டிக்கொள்ளும் செல்ல மகள்\\

இரசித்தேன் ...

நட்புடன் ஜமால் said...

\\இடிபட்டுக் கொண்டே ஏறினாலும் இயல்பாய் எடுத்துக்கொள்ள வைத்த மனசு,
காலை மிதித்தாலும் சாரி சொல்லாத மனிதர்கள் பார்க்கும் வெற்றுப் பார்வை\\

எப்படி இரச்சிக்கிறீங்க ...

ஒன்னு சொல்றதுக்கில்ல ...

இரசிக்கத்தானே வாழ்க்கை!

வாழ்க்கையே இரசித்தாதான் ...

இரசிப்போம் ...

அப்பாவி முரு said...

//தவிர்க்கவே முடியாத அன்றாடங்களின் அவசரங்களில் அகப்பட்டு உழன்றாலும், ரசிக்கத்தக்கதுதான் வாழ்க்கை.//


பதிவிலிருக்கும் அனைத்து வார்த்தைகளும் ரசிக்கத்தக்கவைதான். மிக மிக பிரமாதமான பதிவு.


இன்றய சூழ்நிலையில் பரபர்ப்பில் சிக்கியிருக்கும் அனைவருக்கும் தேவையான வார்த்தைகள்.

குடந்தை அன்புமணி said...

நான்தான் முதல் ஆளு! படிச்சிட்டு வர்றேன்!

குடந்தை அன்புமணி said...

ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவித அனுபவங்கள்... வாழ்க்கையை ரசித்துப்பார்த்தால் வன்மம் தலைதூக்காது என்கிறார் கவிஞர் அமுதபாரதி. உண்மைதான்.

முரளிகண்ணன் said...

அருமையான ரசனை

கார்க்கிபவா said...

தாமிரா.. ச்சே ஆதி வந்தார்ன்னா ரொம்ப சந்தோஷப்படுவாரு.. இந்த மாதிரி விஷயங்கல அவரும் அடிக்கடி சொல்லுவாரு..

ரொம்ப நல்லாயிருக்குங்க மேட்டம்

anujanya said...

மிக அழகான அவதானிப்பு. நல்ல வர்ணனை. ஒரு வரி என்று குறிப்பிட முடியாமல் எல்லாமே இரசனையான வரிகள்.

அனுஜன்யா

தமிழ் அமுதன் said...

எது நடந்தாலும் நான் சந்தோசமாகத்தான் இருப்பேன்! அப்படின்னு முடிவு பண்ணிட்டா
அப்புறம் என்ன? சொர்கம்தான்! எப்போதும் டென்சன்,நெரிசல்,இரைச்சல் அப்படின்னு
வெறுப்பேற்றும் சென்னை வாழ்க்கையை அழகாக ரசிக்கும் உங்கள் ரசனையே..ரசிப்பிற்குரியதுதான்!

இந்த உற்சாகமான,சந்தோஷமான,ரசனை மிகுந்த மனநிலை உங்களுடன்
நிரந்தரமாக இருக்க வாழ்த்துகிறேன்!

Vidhya Chandrasekaran said...

ரசிக்கதக்க வகையில் ரசனைகள்:)

ஆ.சுதா said...

இந்த ரசனை இல்லைன்னா வாழ்க்கையே இல்லைய..

ரசனையான பதிவு

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல ரசனையான வாழ்க்கை தான்.. :)

புதியவன் said...

சின்னச் சின்ன நிகழ்வுகளை எவ்வளவு அழகா ரசிச்சிருக்கீங்க...
ம்...ரசிக்கத்தக்கதுதான் வாழ்க்கை...

ஆயில்யன் said...

கலக்கல் !

narsim said...

எதையும் மேற்கோள் காட்டி பிரித்துச் சொல்ல முடியாவண்ணம் எல்லா ரசிப்புமே அருமை என்றாலும் பேப்பர் போடும் சத்தமும் வாசல் தெளிப்பும் அருமையிலும் அருமை

ராம்.CM said...

அம்மா இடுப்பில் ஒய்யாரமாய் அமர்ந்து கொண்டு பொக்கை வாய் சிரிப்பை உதிர்க்கும் குழந்தை//

அருமையான வரிகள்! ரசிக்க முடிந்தது.. அருமை!

Unknown said...

அமித்து அம்மா, அழகான ரசனைகள் அவை அன்றாடம் நிகழ்வாயினும்..ரசிக்கும் மனதிற்கு பால் பொங்கும் அழகும் பிடிக்கும், குமிழ் திருகியவுடன் அருவியாய்க் கொட்டும் தண்ணீரையும் பிடித்து ரசிக்கும்.Live this moment என்பது எவ்வள்வு உண்மை என்பதை எளிமையாக சொல்லிட்டீங்க..அருமையான பதிவு..மிகவும் ரசித்தேன்.

அ.மு.செய்யது said...

ஆஹா. எல்லாமே சூப்பர் தான்..

அப்துல்மாலிக் said...

காலை சுப்ரபாதத்தைவிட இந்த பதிவு அழகான இளம்காலை நேரத்தை கண்முன் கொண்டுவருகிறது

நாணல் said...

படிக்கும் போதே ரசிக்கும் வகையில் இருந்தது உங்களின் இந்த பதிவு...:)

நசரேயன் said...

//தவிர்க்கவே முடியாத அன்றாடங்களின் அவசரங்களில் அகப்பட்டு உழன்றாலும், ரசிக்கத்தக்கதுதான் வாழ்க்கை//
உண்மை

Deepa said...

//காலை மிதித்தாலும் சாரி சொல்லாத மனிதர்கள் பார்க்கும் வெற்றுப் பார்வை//
இதைக்கூட ரசித்திருக்கிறீர்களே! சபாஷ்!

இப்படி ரசனையோடு வாழும் உங்களைப் போன்றவர்கள் வாழ்வை மேலும் ரசிக்கத்தக்கதாகச் செய்கிறார்கள். வாழ்த்துக்கள் அமித்து அம்மா!

அமுதா said...

பதிவை இரசித்தேன்

soorya said...

நான் மீண்டும் என் காதல் தோல்விக் கவிதளை எழுதத் தொடங்கியுள்ளேன், என் வலைப் பூப்பக்கமும் வந்து பாருங்கள் சும்மா.
தங்கள் மென்மையுடை மனசைப் புரிந்து கொள்கிறேன்..பதிவுகளினூடே.
வாழ்த்துகள்.

Poornima Saravana kumar said...

அமித்து அம்மா ரொம்ப அருமையான, அழகான, ரசனையான பதிவு:))

அவசரத்திலும் ஒவ்வொரு நிகழ்வையும் அனுபவித்து ரசித்திருக்கீங்க!!

மணிநரேன் said...

சராசரி என பலரும் புறக்கணித்து செல்லும் விஷயங்களை மிகவும் ரசித்துள்ளீர்கள், எழுதியும் உள்ளீர்கள்.
அருமையான பதிவு.

கவிதா | Kavitha said...

ம்ம்ம்...ம்...ரசிப்பதற்குதான் வாழ்க்கை...

தமிழன்-கறுப்பி... said...

உண்மைதாங்க வாழ்க்கை எப்பொழுதும் ரசனையோடுதான் இருக்கிறது நாம்தான் கண்டு கொள்வதில்லை...

ரொம்ப நாள் ஆகிவிட்டது உங்கள் பதிவுகள் பக்கம் வந்து பல பதிவுகள் படிக்கப்படாமல் இருக்கிறது பொறுமையா படிச்சுடறேன்...